Thursday, August 23, 2012

அன்பே புதுக்கவிதைகள் - யாமிருக்க பயமேன்

பாடல்: அன்பே புதுக்கவிதைகள் பல படிக்கிறேன்
திரைப்படம்: யாமிருக்க பயமேன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: வாணி ஜெயராம்

அன்பே புதுக்கவிதைகள் பல படிக்கிறேன்
கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்
அன்பே புதுக்கவிதைகள் பல படிக்கிறேன்
கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்
பூமடல் விரிக்கும் வேளையன்றோ
தேன் கிடைக்கும் இடம் இதுவன்றோ

அன்பே புதுக்கவிதைகள் பல படிக்கிறேன்
கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்

மன்மத பானம் ஒன்று
புகுந்து பாயும் இன்ப வேகங்களில்
ஆனந்த கங்கை ஒன்று
எழுந்து பொங்கும் இந்த மோகங்களில்
கட்டிளம் காளை ஒன்று
நெருங்கக்கூடும் நூறு ஆசைகளில்
மத்தள மேளம் ஒன்று
ஒலிக்கக்கூடும் முத்த ஓசைகளில்

அன்பே புதுக்கவிதைகள் பல படிக்கிறேன்
கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்

என் மடி ஊஞ்சல் உண்டு
இளைத்து ஏங்கும் அந்தி நேரங்களில்
உன் பசி தீரும் இங்கு
உதட்டில் ஊறும் இன்ப சாரங்களில்

அன்பே புதுக்கவிதைகள் பல படிக்கிறேன்
கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்
பூமடல் விரிக்கும் வேளையன்றோ
தேன் கிடைக்கும் இடம் இதுவன்றோ

No comments: