Saturday, August 25, 2012

நாம் வாழும் நாளெல்லாம் - ஒரு கோயில் இரு தீபங்கள்

பாடல்: நாம் வாழும் நாளெல்லாம்
திரைப்படம்: ஒரு கோயில் இரு தீபங்கள்
இசை: வி.தக்ஷ்ணாமூர்த்தி
பாடியவர்: வாணி ஜெயராம்

நாம் வாழும் நாளெல்லாம்
இன்பக்காவியம் வண்ண ஓவியம்
வா வா...வா வா
நாம் வாழும் நாளெல்லாம்
இன்பக்காவியம் வண்ண ஓவியம்
வா வா...வா வா
நாம் வாழும் நாளெல்லாம் ஆனந்தமே

பக்கத்தில் உன்னைத்தேடி வந்தேனுங்க
வெட்கத்தில் நானும் வந்து நின்னேனுங்க
பக்கத்தில் உன்னைத்தேடி வந்தேனுங்க
வெட்கத்தில் நானும் வந்து நின்னேனுங்க
தேன் பொங்கும் கன்னம் மின்னும் வண்ணம்
தந்தால் என்ன வந்தால் என்ன
பெண்ணிடம் என்ன இல்லை
பொன்னான ராகம் உண்டு
உன்னிடம் என்ன இல்லை
கண்ணான தாளம் உண்டு
பாடல் ஊடல் கூடல் உண்டு வா

நாம் வாழும் நாளெல்லாம்
இன்பக்காவியம் வண்ண ஓவியம்
வா வா...வா வா

மல்லிகைத்தோட்ட முகம் பார்த்தானுங்க
மயக்கத்தைத்தந்து தந்து சுகம் சேர்த்தானுங்க
மல்லிகைத்தோட்ட முகம் பார்த்தானுங்க
மயகத்தைத்தந்து தந்து சுகம் சேர்த்தானுங்க
வா துள்ளும் பெண்மை அள்ளும் மென்மை
கள்ளும் நானே பூவும் நானே
பருவத்தில் மோகம் வைத்து
பழகாத தேகம் வைத்தான்
உருவத்தில் வேகம் வைத்து
உறாங்காத தாகம் வைத்தான்
நீயும் நானும் கூடும் நேரம் வா

நாம் வாழும் நாளெல்லாம்
இன்பக்காவியம் வண்ண ஓவியம்
வா வா...வா வா
நாம் வாழும் நாளெல்லாம் ஆனந்தமே

No comments: