Thursday, August 23, 2012

கல்யாண மாலை சூடி - நலந்தானா

பாடல்: கல்யாண மாலை சூடி
திரைப்படம்: நலந்தானா
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & வாணி ஜெயராம்

கல்யாண மாலை சூடி
இன்பக்கண்ணீரில் ஆடி
மங்கல நாண் பூணுகிறாள்
தங்க முகம் நாணுகிறாள்
மங்கல நாண் பூணுகிறாள்
தங்க முகம் நாணுகிறாள்

கல்யாண மாலை சூடி
இன்பக்கண்ணீரில் ஆடி
மங்கல நாண் பூணுகிறாள்
தங்க முகம் நாணுகிறாள்
மங்கல நாண் பூணுகிறாள்
தங்க முகம் நாணுகிறாள்
கல்யாண மாலை சூடி
இன்பக்கண்ணீரில் ஆடி

கடல் இது நதி அது
அவை இன்னும் கூடாததேன்
கனல் இது புனல் அது
இது இன்னும் ஆறாததேன்
இதழ்களின் இன்ப மதுக்கடை
இளமையில் இல்லை இனித்தடை
ஒரு நள்ளிரவில் இந்திரவில்
என்னருகில் பெண்ணுருவில்
ஆனந்தராகம் பாடும் வேளை

கல்யாண மாலை சூடி
இன்பக்கண்ணீரில் ஆடி
மங்கல நாண் பூணுகிறாள்
தங்க முகம் நாணுகிறாள்
மங்கல நாண் பூணுகிறாள்
தங்க முகம் நாணுகிறாள்

முதல் இடை கடை என
தமிழ்ச்சங்கம் மூன்றல்லவோ
அடி முதல் முடி வரை
தரும் முத்தம் நூறல்லவோ
விரல் நகம் போல மீறும் இடம்
அதில் வரும் பொன்னின் புது நிறம்
இரு மைவிழியில் மன்னவனே
தையலிலும் தையல் இவள்
செந்தூர தேகம் ரோஜாமாலை

கல்யாண மாலை சூடி
இன்பக்கண்ணீரில் ஆடி

இளங்கலை பயிலணும்
இது கண்ணோ கள் ஓடையோ
புதுவகை உவமைகள்
அதற்கென்றே என் மேனியோ
பிடிபிடி என்னும் மணிவிழி
விடுவிடு என்னும் கனிமொழி
இது நெஞ்சணையா பஞ்சணையா
என்னிடமே வஞ்சனையா
ஆரம்ப நாள்தான் பாடம் போதும்

கல்யாண மாலை சூடி
இன்பக்கண்ணீரில் ஆடி
மங்கல நாண் பூணுகிறாள்
தங்க முகம் நாணுகிறாள்
மங்கல நாண் பூணுகிறாள்
தங்க முகம் நாணுகிறாள்
ல லா ல லா லா
லல லாலா ல லாலா
லல லாலா ல லாலா
லல லாலா ல லாலா

No comments: