Saturday, August 25, 2012

பார்வையின் மறுபக்கம் - பார்வையின் மறுபக்கம்

பாடல்: பார்வையின் மறுபக்கம்
திரைப்படம்: பார்வையின் மறுபக்கம்
இசை: சந்திரபோஸ்
பாடியவர்: வாணி ஜெயராம்

பார்வையின் மறுபக்கம் ராகங்கள் கேட்டு
பாடாமல் பாடுகிறேன்
பாடச் சொன்னாலும் ஆடச் சொன்னாலும்
என் வாழ்வு உன் வசமே எல்லாமும் உன்னிடமே

பார்வையின் மறுபக்கம் ராகங்கள் கேட்டு
பாடாமல் பாடுகிறேன்

கனவோ இது நினைவோ
என்ன சுகமோ கண்ணில் நான் காண்பது
மயக்கம்...மயக்கம் தீராத ஆனந்த மயக்கம்
இலையோ புது மலரோ
இளங்கனியோ இன்று பெண்ணானது
இரண்டும்...இரண்டும் நூறாகும் நாளின்று நமக்கு

பார்வையின் மறுபக்கம் ராகங்கள் கேட்டு
பாடாமல் பாடுகிறேன்

அழைத்தாய் அள்ளிக் கொடுத்தாய்
கன்னி பிழைத்தேன் இன்ப நீராடினேன்
எழுது...எழுது முன்னூறு பாடல்கள் உதட்டில்
பகலோ அது இரவோ
இந்த உறவு புது ராமாயணம்
வருக...வருக கண்ணோடு காமனின் கடிதம்

பார்வையின் மறுபக்கம் ராகங்கள் கேட்டு
பாடாமல் பாடுகிறேன்
பாடச் சொன்னாலும் ஆடச் சொன்னாலும்
என் வாழ்வு உன் வசமே எல்லாமும் உன்னிடமே
பார்வையின் மறுபக்கம் ராகங்கள் கேட்டு
பாடாமல் பாடுகிறேன்

No comments: