Saturday, August 25, 2012

வான் மழையின் துளிகள் - நர்த்தகி

பாடல்: வான் மழையின் துளிகள்
திரைப்படம்: நர்த்தகி
இசை: ஜி.வி.பிரகாஷ்
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன் & சுதா ரகுநாதன்

வான் மழையின் துளிகள்
ஆணின் துளியா பெண்ணின் துளியா
பார்க்கடலின் அலைகள்
ஆணின் அலையா பெண்ணின் அலையா
காற்றில் ஆண் பெண்கள் பேதமில்லை
மழையில் காட்டும் வானவில்லை
இரு நேர்க்கோடு இணையும்
இடத்தின் உருவம் இதுவல்லவா
சிவனை நீ பார்த்தால் சிவன் உருவம்
உமையை நீ பார்த்தால் உமை உருவம்
கண் பார்வை காட்டாத முழு உருவம்
உடலில் தெய்வீகம் பொழியாத புது வடிவம்

வான் மழையின் துளிகள்
ஆணின் துளியா பெண்ணின் துளியா
பார்க்கடலின் அலைகள்
ஆணின் அலையா பெண்ணின் அலையா

கடலின் ஆழத்தை யாரும் கண்டு சொல்லலாம்
உடலின் ஆழத்தை யாரும் காண முடியுமா
குழந்தைக் காலத்தில் ஒரு உடல் ஒரு உடல்
வளர்ந்த காலத்தில் வேறுடலே
சிதையினில் தீவைத்து எரித்திடும் வரையினில்
உடலின் உரு மாற்றம் தொடர்கதையே
ஆண்கள் என்பதும் பெண்கள் என்பதும்
மாய தோற்றங்களே
திரு நங்கை இவள்
இரு கரை நடுவினில் ஓடும் நதியா

வான் மழையின் துளிகள்
ஆணின் துளியா பெண்ணின் துளியா
பார்க்கடலின் அலைகள்
ஆணின் அலையா பெண்ணின் அலையா
காற்றில் ஆண் பெண்கள் பேதமில்லை
மழையில் காட்டும் வானவில்லை
இரு நேர்க்கோடு இணையும்
இடத்தின் உருவம் இதுவல்லவா
சிவனை நீ பார்த்தால் சிவன் உருவம்
உமையை நீ பார்த்தால் உமை உருவம்
கண் பார்வை காட்டாத முழு உருவம்
உடலில் தெய்வீகம் பொழியாத புது வடிவம்

வான் மழையின் துளிகள்
ஆணின் துளியா பெண்ணின் துளியா
பார்க்கடலின் அலைகள்
ஆணின் அலையா பெண்ணின் அலையா

No comments: