Tuesday, January 22, 2013

பதினாறு வயதினிலே - ஶ்ரீராமஜெயம்

பாடல்: பதினாறு வயதினிலே
திரைப்படம்: ஶ்ரீராமஜெயம்
பாடியவர்: வாணி ஜெயராம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

பதினாறு வயதினிலே தேனாறு பாய்ந்தது
பதினாறு வயதினிலே தேனாறு பாய்ந்தது
வரலாறு மாறும் நேரம் சுகமான வாழ்க்கை கோலம்

ஆடுவது இளம்கொடி மலர்க்கொடி ரசிக்க ரசிக்க ரசிக்க
தேடுவது உனக்கொரு புது சுகம் சுவைக்க சுவைக்க சுவைக்க

என் மேனி ராகம் வேறேங்கும் இல்லை
என் கூந்தல் மேகம் உனக்கான யோகம்
என் மேனி ராகம் வேறேங்கும் இல்லை
என் கூந்தல் மேகம் உனக்கான யோகம்

சுகமான யாகம் சம கால தாகம்
இவை சொல்லும் பாடம் புதிதான வேதம்
சுகமான யாகம் சம கால தாகம்
இவை சொல்லும் பாடம் புதிதான வேதம்

நீலமலர் உனக்கென மலர்ந்தது மணக்க மணக்க மணக்க
இன்றுமுதல் மடியினில் விழுந்தது இனிக்க இனிக்க இனிக்க

பதினாறு வயதினிலே தேனாறு பாய்ந்தது
வரலாறு மாறும் நேரம் சுகமான வாழ்க்கை கோலம்

ஆடுவது இளம்கொடி மலர்க்கொடி ரசிக்க ரசிக்க ரசிக்க
தேடுவது உனக்கொரு புது சுகம் சுவைக்க சுவைக்க சுவைக்க

இரவென்றும் இல்லை பகலென்றும் இல்லை
இனி என்ன எல்லை உன் கையில் முல்லை
ரதிதேவி கூட இவள் போல இல்லை
சுகமாக கேட்டாள் நீ சொல்லும் சொல்லை

காலைவரை மணமகன் கைகளில் விழுந்து விழுந்து விழுந்து
கன்னியிவள் தினசரி தருவது விருந்து விருந்து விருந்து

பதினாறு வயதினிலே தேனாறு பாய்ந்தது
வரலாறு மாறும் நேரம் சுகமான வாழ்க்கை கோலம்

ஆடுவது இளம்கொடி மலர்க்கொடி ரசிக்க ரசிக்க ரசிக்க
தேடுவது உனக்கொரு புது சுகம் சுவைக்க சுவைக்க சுவைக்க


தாகம் எடுக்குற நேரம் - எனக்காக காத்திரு

பாடல்: தாகம் எடுக்குற நேரம்
திரைப்படம்: எனக்காக காத்திரு
பாடியவர்: உமா ரமணன்
இசை: இளையராஜா

தாகம் எடுக்குற நேரம் வாசல் வருகுது மேகம்
தாகம் எடுக்குற நேரம் வாசல் வருகுது மேகம்
மது மழை பொழியுமா மலர்வனம் நனையுமா
இனி சந்தனப்பூக்களில் சிந்தும் மகரந்தம்
தாகம் எடுக்குற நேரம் வாசல் வருகுது மேகம்

இமயம் பனிமலர் சூடும் விழியில் கனவுகள் ஆடும்
இதயம் முழுவதும் நாதம் இதுதான் சங்கம மாதம்
பேசும் கிளிகளே புல்வெளிகளே ஓ நனைந்த பூவே
தேவன் வந்தான் கொண்டாடுங்கள் சத்தமின்றி பண்பாடுங்கள்
இனி நான் ஆடும் நீரோடை தேனோடை ஆகும் தானே

தாகம் எடுக்குற நேரம் வாசல் வருகுது மேகம்

பனிகள் உருகிடும் ஓசை பேசிடும் மன்மத பாஷை
இமைகள் துடித்திடும் ஓசை இதயத்தின் ரகசிய பாஷை
காதல் அமுதமா இல்லை விஷமமா இல்லை அமுத விஷமா
கண்ணுக்குள்ளே தூக்கம் இல்லை காதல் சொல்ல நாக்கும் இல்லை
இனி நான் பாடும் பூபாளம் பாதாளம் வரையில் போகும்

தாகம் எடுக்குற நேரம் வாசல் வருகுது மேகம்
மது மழை பொழியுமா மலர்வனம் நனையுமா
இனி சந்தனப்பூக்களில் சிந்தும் மகரந்தம்
தாகம் எடுக்குற நேரம் வாசல் வருகுது மேகம்


சரணம் சரவணனே - அவள் சுமங்கலிதான்

பாடல்: சரணம் சரவணனே
திரைப்படம்: அவள் சுமங்கலிதான்
பாடியவர்: வாணி ஜெயராம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

சுடராக ஒளியாக தித்திக்கும் சுவையாக
தமிழினம் காத்திடும் தூயவா
விழியாக மொழியாக மதியாக நிதியாக
காத்தருள் கார்த்திகை பாலகா

சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே
இந்த உலகினில் அனைவரும் நலம் பெறவே

சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே
இந்த உலகினில் அனைவரும் நலம் பெறவே
அறுபடை நாயகனே உனை நாடிய
ஏழைகள் வாழ்வினில் வளம் பெற

அறுபடை நாயகனே உனை நாடிய
ஏழைகள் வாழ்வினில் வளம் பெற
சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே

குன்றாடும் கோமகன் வாசலின் அருகில்
ஆறுமுகன் பாடல்கள் இசைத்தேன் நான்

குன்றாடும் கோமகன் வாசலின் அருகில்
ஆறுமுகன் பாடல்கள் இசைத்தேன் நான்
எந்நாளும் உன் இரு திருவடி நிழலில்
பணிவுடன் வாழ்ந்திட அருள்வாய் நீ

இவளது பேரின்பம் கதி நீ என
நான் உனை அனுதினம் வலம் வர

சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே
இந்த உலகினில் அனைவரும் நலம் பெறவே
சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே

பொன்னான தாலியை பூமகள் சூட
ஒரு மருமகனை தர வேண்டும்
பொன்னான தாலியை பூமகள் சூட
ஒரு மருமகனை தர வேண்டும்

செந்தூர குங்கும கோலத்தில் திகழ
திருமண வேளையும் வர வேண்டும்
ஷண்முக வடிவேலா வரும் மருமகன்
உறவினில் மகன் என விளங்கிட

ஷண்முக வடிவேலா வரும் மருமகன்
உறவினில் மகன் என விளங்கிட

சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே
இந்த உலகினில் அனைவரும் நலம் பெறவே

அறுபடை நாயகனே உனை நாடிய
ஏழைகள் வாழ்வினில் வளம் பெற
சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே

ஆசையோ சுவையானது - மதன மாளிகை

பாடல்: ஆசையோ சுவையானது
திரைப்படம்: மதன மாளிகை
பாடியவர்: பி.சுசீலா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

ஆசையோ சுவையானது
அதில் ஆடையும் சுமையானது
போதையோ சுகமானது
அதில் பூவுடல் தடுமாறுது

ஆசையோ சுவையானது
அதில் ஆடையும் சுமையானது
போதையோ சுகமானது
அதில் பூவுடல் தடுமாறுது

இருவருக்கும் இளமை
நாம் இருக்குமிடம் தனிமை
நம் இருவருக்கும் இளமை
நாம் இருக்குமிடம் தனிமை

இன்று எனக்கும் இது புதுமை
சொல்ல இடம் தருமா எந்தன் பெண்மை

ஆசையோ சுவையானது
அதில் ஆடையும் சுமையானது
போதையோ சுகமானது
அதில் பூவுடல் தடுமாறுது

இளமைக்கு அழகல்ல தூக்கம்
என் நெஞ்சில் ஒரு கோடி ஏக்கம்
இளமைக்கு அழகல்ல தூக்கம்
என் நெஞ்சில் ஒரு கோடி ஏக்கம்

தழுவாமல் தணியாது யார்க்கும்
தள்ளாடி மனம் தள்ளாடி
துணை தேடிப் பார்க்கும்

ஆசையோ சுவையானது
அதில் ஆடையும் சுமையானது
போதையோ சுகமானது
அதில் பூவுடல் தடுமாறுது

இடையென்னும் நன்நூலின் பாடம்
இதுதானே நீ கேட்கும் காலம்
இடையென்னும் நன்நூலின் பாடம்
இதுதானே நீ கேட்கும் காலம்

அழகான இடம் காணும் நேரம்
அடையாளக்குறி போட வேண்டும்

ஆசையோ சுவையானது
அதில் ஆடையும் சுமையானது
போதையோ சுகமானது
அதில் பூவுடல் தடுமாறுது

ஆத்தோர நிலவே - வெள்ளை மனசு

பாடல்: ஆத்தோர நிலவே
திரைப்படம்: வெள்ளை மனசு
பாடியவர்: வாணி ஜெயராம்
இசை: ஷங்கர் கணேஷ்

ஆத்தோர நிலவே ஆகாய மலரே
ஈரேழு வயசு நீராடுதே
குயில் கூவும் தோப்புக்குள்ளே
சின்னச்சின்ன  முத்தத்தின் சத்தங்களோ
கேட்கும் முத்தத்தின் சத்தங்களோ

ஆத்தோர நிலவே ஆகாய மலரே
ஈரேழு வயசு நீராடுதே
குயில் கூவும் தோப்புக்குள்ளே
சின்னச்சின்ன முத்தத்தின் சத்தங்களோ
கேட்கும் முத்தத்தின் சத்தங்களோ

தூங்காத கண்ணில் கதை சொல்லவா
சூடாகும் தீபம் பகை அல்லவா
என் தீபமே நீயல்லவா
நீ இன்னும் வாராத போது

தூங்காத கண்ணில் கதை சொல்லவா
சூடாகும் தீபம் பகை அல்லவா
என் தீபமே நீயல்லவா
நீ இன்னும் வாராத போது
வயலோரமே துணைதேடி
துணைதேடி தவிக்கின்ற நேரம்

ஆத்தோர நிலவே ஆகாய மலரே
ஈரேழு வயசு நீராடுதே
குயில் கூவும் தோப்புக்குள்ளே
சின்னச்சின்ன முத்தத்தின் சத்தங்களோ
கேட்கும் முத்தத்தின் சத்தங்களோ

பூவாடை கட்டி நதி போகுதோ
பாவாடை தொட்டு விளையாடுதோ
ஊரோடுதான் ஆறோடுதோ
தேகங்கள் சூடேறும் காலம்

பூவாடை கட்டி நதி போகுதோ
பாவாடை தொட்டு விளையாடுதோ
ஊரோடுதான் ஆறோடுதோ
தேகங்கள் சூடேறும் காலம்
மனசோரமா எனக்காக இடம் போடு
சுகம் தேடு மாமா

ஆத்தோர நிலவே ஆகாய மலரே
ஈரேழு வயசு நீராடுதே
குயில் கூவும் தோப்புக்குள்ளே
சின்னச்சின்ன முத்தத்தின் சத்தங்களோ
கேட்கும் முத்தத்தின் சத்தங்களோ