SPB 70'S TAMIL SONGS

பாடல்: பொன்னென்றும் பூவென்றும்
திரைப்படம்: நிலவே நீ சாட்சி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்


பொன்னென்றும் பூவென்றும்
தேனென்றும் சொல்வேனோ
பொன்னென்றும் பூவென்றும்
தேனென்றும் சொல்வேனோ
பெண்ணைப் பார்த்தால் சொல்லத் தோன்றும்
இன்னும் நூறாயிரம் இன்னும் நூறாயிரம்

மூன்று கனிச்சாறு ஒன்றாக பிழிந்து
மோக ரசம் கொஞ்சம் அளவோடு கலந்து
மூன்று கனிச்சாறு ஒன்றாக பிழிந்து
மோக ரசம் கொஞ்சம் அளவோடு கலந்து
போதை மதுவாக பொன்மேனி மலர்ந்து
பூவை வந்தாள் பெண்ணாகப் பிறந்து
பூவை வந்தாள் பெண்ணாகப் பிறந்து

பொன்னென்றும் பூவென்றும்
தேனென்றும் சொல்வேனோ
பெண்ணைப் பார்த்தால் சொல்லத் தோன்றும்
இன்னும் நூறாயிரம்

கோடை வசந்தங்கள் குளிர்காலம் என்று
ஓடும் பருவங்கள் கண நேரம் நின்று
கோடை வசந்தங்கள் குளிர்காலம் என்று
ஓடும் பருவங்கள் கண நேரம் நின்று
காதல் கவிபாடும் அவள் மேனி கண்டு
காண கண் வேண்டும் ஒரு கோடி இன்று
காண கண் வேண்டும் ஒரு கோடி இன்று

கன்னி இளங்கூந்தல் கல்யாணப் பள்ளி
கண்கள் ஒளி வீசும் அதிகாலை வெள்ளி
கன்னி இளங்கூந்தல் கல்யாணப் பள்ளி
கண்கள் ஒளி வீசும் அதிகாலை வெள்ளி
தென்றல் விளையாடும் அவள் பேரைச் சொல்லி
இன்பம் அவள் இன்னும் அறியாத கல்வி
இன்பம் அவள் இன்னும் அறியாத கல்வி

பொன்னென்றும் பூவென்றும்
தேனென்றும் சொல்வேனோ
பெண்ணைப் பார்த்தால் சொல்லத் தோன்றும்
இன்னும் நூறாயிரம் இன்னும் நூறாயிரம்

****      *****     *****     *****     *****     *****

பாடல்: பொன் என்பதோ பூவென்பதோ
திரைப்படம்: அன்னப்பறவை
இசை: ஆர்.ராமானுஜம்



பொன் என்பதோ பூவென்பதோ
காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ
பொன் என்பதோ பூவென்பதோ
காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ

காவியமே பாடும் கண்ணில் ரகசியம் துடிக்கின்றது
ஓவியம் போல் ஆடும் நெஞ்சில் அதிசயம் பிறக்கின்றது
காவியமே பாடும் கண்ணில் ரகசியம் துடிக்கின்றது
ஓவியம் போல் ஆடும் நெஞ்சில் அதிசயம் பிறக்கின்றது
இடை என்ன இடையோ கொடி வந்த மலரோ
அழகே...உயிரே...பூச்சரமே

பொன் என்பதோ பூவென்பதோ
காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ

மோகத்திலே வாடும் உள்ளம் புதுமையை ரசிக்கின்றது
மூடுபனி வாடைத்தென்றல் இளமையும் கொதிக்கின்றது
மோகத்திலே வாடும் உள்ளம் புதுமையை ரசிக்கின்றது
மூடுபனி வாடைத்தென்றல் இளமையும் கொதிக்கின்றது
இனி என்ன தடையோ இனிக்கின்ற கனியோ
வருவாய்...தருவேன்...இதழ்ரசமே

பொன் என்பதோ பூவென்பதோ
காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ
பொன் என்பதோ பூவென்பதோ
காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ

**** ***** ***** ***** ***** *****

பாடல்: மணி விளக்கே மாந்தளிரே
திரைப்படம்: உன்னைத்தான் தம்பி
இசை: விஜயபாஸ்கர்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & B.வசந்தா


மணி விளக்கே மாந்தளிரே
உண்மையிலா?
மது ரசமே ரகசியமே
என்னிடமோ?
கொலுவிருக்க நானிருக்க
கோபுர வாசல் ஏன் மறைத்தாய்
...பொறுத்திருங்கள்
மணி விளக்கே மாந்தளிரே
மது ரசமே ரகசியமே
கொலுவிருக்க நானிருக்க
கோபுர வாசல் ஏன் மறைத்தாய்

லாலால லலலா...லாலல லாலல லா
மன்மதனை அழைத்து வந்தேன்
மந்திர மணியால் பூஜை செய்வேன்
அபிஷேகம் நடத்த வந்தேன்
அந்தியிலே சாந்தி செய்வேன்
லலால லலால லா
ரசிகனுக்கு இடம் தருவாய்
மடியில் வைத்து தாலாட்டுவாய்
தாளாதம்மா

மணி விளக்கே மாந்தளிரே
மது ரசமே ரகசியமே
கொலுவிருக்க நானிருக்க
கோபுர வாசல் ஏன் மறைத்தாய்
தாரா தரத்தர தரத்தர தாரார ராரார

விருந்து வந்து அழைத்ததடி
விதவிதமாய் நினைத்ததடி
மறைந்து நின்றால் என்ன சுகம்
மலரணையில் கதை சொல்லடி
லலால லலால லா
மனம் கொடுத்தாள் மஹராணி
சுகம் இல்லையேல் தீராதடி
ம்ம்...காலம் வரும்

...மணி விளக்கே மாந்தளிரே
மது ரசமே ரகசியமே
கொலுவிருக்க நானிருக்க
கோபுர வாசல் ஏன் மறைத்தாய்

கை அழகு முல்லைச்செண்டு
கால் அழகு வாழைத்தண்டு
இடை அழகு அல்லிக்கொடி
இருவருக்கும் பொருத்தமடி
லலால லலால லா
பாதி உடல் தெரியுதடி
பார்த்த வரை போதாதடி
ம்ம்...கூடாதம்மா

மணி விளக்கே மாந்தளிரே
மது ரசமே ரகசியமே
கொலுவிருக்க நானிருக்க
கோபுர வாசல் ஏன் மறைத்தாய்

**** ***** ***** ***** ***** *****




No comments: