Tuesday, November 5, 2013

அவளே என் காதலி - பேரும் புகழும்

பாடல்: அவளே என் காதலி
திரப்படம்: பேரும் புகழும்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்


அவளே என் காதலி
கொடி நீருக்குள்ளே மலர் மேலே
பெண் குளிப்பது தாமரை போலே
கொடி நீருக்குள்ளே மலர் மேலே
பெண் குளிப்பது தாமரை போலே
நான் நீராய் பிறந்திருந்தாலும்
இந்நேரம் என்னென்னவோ

அவனே என் காதலன்
அவனே என் காதலன்
நடை மேடையிலே விழி இங்கே
அவன் நாடகம் பார்ப்பது எங்கே
நடை மேடையிலே விழி இங்கே
அவன் நாடகம் பார்ப்பது எங்கே
அவன் நீராய் பிறந்திருந்தாலும்
இந்நேரம் என்னென்னவோ

தாலாட்டும் பிள்ளை ஒன்று
சேலாட்டம் பெண்ணைக்கண்டு
வாலாட்டும் எண்ணம் என்ன
இலையோ...மலரோ...கனியோ

பால் வாசம் சிந்தும் சின்ன
பாப்பாவின் உள்ளம் இன்று
பூவாசம் கொண்டதென்ன
அதுவோ...இதுவோ...எதுவோ

அவளே என் காதலி
நடை மேடையிலே விழி இங்கே
அவன் நாடகம் பார்ப்பது எங்கே
அவன் நீராய் பிறந்திருந்தாலும்
இந்நேரம் என்னென்னவோ

தொட்டாலும் ஒட்டிக்கொள்ளும்
பட்டான வெள்ளிக்கன்னம்
எட்டாமல் செய்வதென்ன
இனமோ...குலமோ...பயமோ

பேராசை வெள்ளம் வந்து
போராடும் போதும் பெண்கள்
தாய்வீடு தந்த செல்வம்
அச்சம்...நாணம்...வெட்கம்

அவனே என் காதலன்
கொடி நீருக்குள்ளே மலர் மேலே
பெண் குளிப்பது தாமரை போலே
நான் நீராய் பிறந்திருந்தாலும்
இந்நேரம் என்னென்னவோ

அம்மன் அலங்காரம் - ஒரு வாரிசு உருவாகிறது

பாடல்: அம்மன் அலங்காரம்
திரைப்படம்: ஒரு வாரிசு உருவாகிறது
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்


அம்மன் அலங்காரம் ம்ம் ம்ஹ்ம் ம்ம் அந்திப்பகல் தோறும் ம்ஹ்ம் ம்ம்
அர்ச்சனைக்கு யோகம் ம்ம் ம்ஹ்ம் ம்ம் அர்த்த ஜாம நேரம் ம்ம்
அம்மன் அலங்காரம் ம்ம் ம்ஹ்ம் ம்ம் அந்திப்பகல் தோறும் ம்ஹ்ம் ம்ம்
அர்ச்சனைக்கு யோகம் ம்ம் ம்ஹ்ம் ம்ம் அர்த்த ஜாம நேரம்

கூந்தல் தொட்டுப் பாதம் கோடி நிலா வண்ணம்
கோயில் கொள்ளத்தானோ நாயகனின் உள்ளம்
கூந்தல் தொட்டுப் பாதம் கோடி நிலா வண்ணம்
கோயில் கொள்ளத்தானோ நாயகனின் உள்ளம்

கார்த்திகை சாரலில் கிராமத்து வயலில் நதிமகள் பாய்கின்றாள்
ஹா ஆ ஆ கார்த்திகை சாரலில் கிராமத்து வயலில் நதிமகள் பாய்கின்றாள்
அந்த நேர்த்தியைப் பார்க்கையில் நங்கையும் பூவுடல் தீயென காய்கின்றாள்
காய்ந்தவள் மேனியை காதலன் தழுவ பனியென குளிர்கின்றாள்
ஹா ஆ ஆ காய்ந்தவள் மேனியை காதலன் தழுவ பனியென குளிர்கின்றாள்
இரு கன்னத்து தாமரை கைப்பட கைப்பட பொன்னென ஒளிர்கின்றாள்
ஆடை கொண்டு தேரை மூடுவது என்ன
ஆசை கொண்டு ஏதோ தேடுவது என்ன

அஹ்ஹா அம்மன் அலங்காரம் ஆ ஹ ஹா அந்திப்பகல் தோறும் ஏ ஹெ ஹே
அர்ச்சனைக்கு யோகம் ஆ ஹ ஹா அர்த்த ஜாம நேரம்

பூந்தளிர் ஊஞ்சலில் காற்றெனும் தலைவன் அதிசயம் பார்க்கின்றான்
இந்தப் பூவையின் வாயிதழ் புன்னகை மீட்டிட ஸ்ருதிகள் சேர்க்கின்றான்
மேற்திசை வானத்தில் மேகத்தின் மடியில் கதிரவன் சாய்கின்றான்
இந்த மங்கையின் மார்பினில் மன்னவன் சாய்ந்து மையலில் தோய்கின்றான்
வானம் கொண்ட நீலம் வஞ்சி விழி கொள்ள
நாணம் என்ன தேவை நான் அறிய சொல்ல

அம்மன் அலங்காரம் ம்ம் ம்ஹ்ம் ம்ம் அந்திப்பகல் தோறும் ம்ம்
அர்ச்சனைக்கு யோகம் ம்ம் ம்ஹ்ம் ம்ம் அர்த்த ஜாம நேரம்

அலை மீது தடுமாறுதே - அன்புள்ள மலரே

பாடல்: அலை மீது தடுமாறுதே
திரைப்படம்: அன்புள்ள மலரே
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணிஜெயராம்
இசை: இளையராஜா


அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
சுமை தாங்காமலே கரை தேடும்
சென்று சேரும்வரை இவள் பாவம் பாவம்
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்

கண்ணில் இன்னும் சிந்தக்கண்ணீர் இல்லை
ஏதோ கொஞ்சம் இனிமை
பெண்ணை பெண்ணாய்க்காணும் காலம் இல்லை
போதும் போதும் தனிமை
பிள்ளை என்னும் கொடிமுல்லை கண் வளர
இல்லை இல்லை கவலை
ஆ ஆ ஆ ஆ...இந்த நேசம் சுகமாகுமே
இவள் வாழ்க்கை நிறம் மாறுமே
என்றாலும் கண்ணோரம் ஓர் சோகமே

அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
சுமை தாங்காமலே கரை தேடும்
சென்று சேரும்வரை இவள் பாவம் பாவம்
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்

ஜன்னல் எங்கும் கண்கள் பார்க்கின்றதே
ஏதோ சொல்லிச் சிரிக்கும்
தர்மம் பேசும் இந்த ஊர் உள்ளதே
சாகும் முன்பே எரிக்கும்
தானாய் ஏணி தரும் மேலே ஏறவிடும்
மீண்டும் ஏணி பறிக்கும்
ஆ ஆ ஆ ஆ...தடுமாறும் இங்கு நியாயங்கள்
இதனால் தான் பல காயங்கள்
கண்ணீரில் தள்ளாடும் பெண் தீபங்கள்

அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
சுமை தாங்காமலே கரை தேடும்
சென்று சேரும்வரை இவள் பாவம் பாவம்
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்

Monday, November 4, 2013

செந்தமிழில் ஒரு பாட்டெழுதி - புண்ணியம் செய்தவள்

பாடல்: செந்தமிழில் ஒரு பாட்டெழுதி
திரைப்படம்: புண்ணியம் செய்தவள்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்


ஹே...ஹே...ஆ...ஹா
ஹே...ஹே...லா...ல...லா
ல...லா...ல...லா
ல...லா...லா...ல...லா

செந்தமிழில் ஒரு பாட்டெழுதி
அதில் நான் உன்னை அழைத்தேன்
செந்தமிழில் ஒரு பாட்டெழுதி
அதில் நான் உன்னை அழைத்தேன்
சிந்தனையில் வந்த தேனருவி
சிந்தனையில் வந்த தேனருவி
அது நீயென்றே நினைத்தேன்

தென்பொதிகை வரும் தென்றல் எது
தென்பொதிகை வரும் தென்றல் எது
அது நீயென்றே நினைத்தேன்
கண் கவரும் ஒரு செங்கமலம்
கண் கவரும் ஒரு செங்கமலம்
என நான் உன்னை அணைத்தேன்

செந்தமிழில் ஒரு பாட்டெழுதி
அதில் நான் உன்னை அழைத்தேன்

ல லா ல லா ல லா ல லா ல லா ல லா ல ஹா
ல லா ல லா ல லா ல லா ல லா ல லா ல லா

சுந்தர வதனத்தில் சந்திரன கிரணங்கள்
வந்ததை நான் கண்டேன் அல்லவோ
சுந்தர வதனத்தில் சந்திரன கிரணங்கள்
வந்ததை நான் கண்டேன் அல்லவோ

மந்திரக்கண் கொண்டு மன்மதன் கதையொன்று
மந்திரக்கண் கொண்டு மன்மதன் கதையொன்று
உன்னிடம் நாள்தோறும் சொல்லவோ
உன்னிடம் நாள்தோறும் சொல்லவோ

மங்கையொரு குளிர் கங்கையென
தினம் நான் வந்தே குளிப்பேன்
உள்ளவரை எனை அள்ளியெடு
அதில் நான் என்னை மறப்பேன்

செந்தமிழில் ஒரு பாட்டெழுதி
அதில் நான் உன்னை அழைத்தேன்

லா லா லா லா ல ல ல் ல லா
லா லா லா லா ல ல ல் ல லா

லா லா ல லா...லா லா லா
லா லா ல லா...லா லா லா

அங்கொரு தம்பதிகள் ஆயிரம் சங்கதிகள்
சொல்வதைக் கேட்டாயோ கண்ணனே
அன்பெனும் சன்னதியில் மன்னனும் உன் மடியில்
துஞ்சிட வேண்டாமோ கண்மணி
துஞ்சிட வேண்டாமோ கண்மணி

உன் அடிமை இந்தப் பெண் அடிமை
எனை நான் அன்றே கொடுத்தேன்
செவ்விதழோ ஒரு செம்பவளம்
அதில் தேன் அள்ளிக் குடித்தேன்

செந்தமிழில் ஒரு பாட்டெழுதி
அதில் நான் உன்னை அழைத்தேன்
அதில் நான் உன்னை அழைத்தேன்

Saturday, November 2, 2013

இரு மனம் கொண்ட - அவர்கள்

பாடல்: இரு மனம் கொண்ட
திரைப்படம்: அவர்கள்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் & சதன்


ஜூனியர்! ஜூனியர்! ஜூனியர்! யெஸ் பாஸ்!
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்

இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்
இளகிய பெண்மை இருவர் கை பொம்மை
ஏன் இன்னும் நீயும் ஏங்குகின்றாய்
இளகிய பெண்மை இருவர் கை பொம்மை
ஏன் இன்னும் நீயும் ஏங்குகின்றாய்
கரையினில் ஆடும் நாணலே நீ
நாணல்? மீ? ஹீ ஹீ ஹீ ஹீ ஹீ
கரையினில் ஆடும் நாணலே நீ
நதியினில் சொந்தம் தேடுகின்றாய்

சிற்பம் ஒன்று சிரிக்கக்கண்டு
ரப்பர் பொம்மை ஏக்கம் கொண்டு
சின்னப்பையன் மனசும் கொஞ்சம்
பொம்மைக்கென்ன மனசா பஞ்சம்
ஒட்டிப்பார்த்தால் ஒன்றாய்ச் சேராதோ

ஜூனியர்! ஜூனியர்! ஜூனியர்!
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்

கடற்கரை தாகம் இதுதான் உந்தன் காதலடா
அடுத்தவர் ராகம் அதை நீ பாடுதல் பாவமடா
இஃப் இட் இஸ் அபூர்வ ராகம்?

கடற்கரை தாகம் இதுதான் உந்தன் காதலடா
அடுத்தவர் ராகம் அதை நீ பாடுதல் பாவமடா
வயலுக்குத்தேவை மேகம் என்பாய்
அவளது தேவை அறிவாயோ
வயலுக்குத்தேவை மேகம் என்பாய்
அவளது தேவை அறிவாயோ

பாட்டைக்கண்டு ராகம் போட்டேன்
நீரைக்கண்டு தாகம் கொண்டேன்
பாவம் கீவம் பார்க்கக்கூடாது
நோ இட்ஸ் பேட்...பட் ஐயாம் மேட்
பாவப்பட்ட ஜென்மம் ஒன்று
ஊமைக்கேள்வி கேட்கும் போது
ஆசை மோசம் செய்யக்கூடாது

ஹ ஹா ஹ ஹ ஹா ஹா ஹா
வாட்? கப கபா கப கபா ம்ம்?
ஜூனியர்! ம்ம்!

ஜூனியர்! ஜூனியர்! ஜூனியர்!
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்

சித்திரை மாதம் மழையைத்தேடி வாடுகின்றாய்
மார்கழி மாதம் வெயிலைத்தேடி ஓடுகின்றாய்
பாஸ்! லவ் ஹாஸ் சீஸன்! ஆர் ஈவன் ரீஸன்!
ஷட் உப்!

சித்திரை மாதம் மழையைத்தேடி வாடுகின்றாய்
மார்கழி மாதம் வெயிலைத்தேடி ஓடுகின்றாய்
உதயத்தைக் காண மேற்கு நோக்கி
ஒவ்வொரு நாளும் ஏங்குகின்றாய்
உதயத்தைக் காண மேற்கு நோக்கி
ஒவ்வொரு நாளும் ஏங்குகின்றாய்

அடைஞ்சவனுக்கு ஐப்பசி மாசம்
ஏமாந்தவனுக்கு ஏப்ரல் மாசம்
அடியேன் முடிவைச் சொல்லக்கூடாதோ
இட்ஸ் ஹைலி இடியாட்டிக்!
நோ பாஸ்! ஒன்லி ரொமாண்டிக்!

கொஞ்சும் பொம்மை பாடுது பாட்டு
குழம்பிய நெஞ்சம் சிரிக்குது கேட்டு
முடிவைச் சொல்லி சிரிக்கக்கூடாதோ
முடிவைச் சொல்லி சிரிக்கக்கூடாதோ

இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன்...மயங்குகிறாய்

உனை நான் அறிவேன் - கோடீஸ்வரன் மகள்

பாடல்: உனை நான் அறிவேன்
திரைப்படம்: கோடீஸ்வரன் மகள்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.பி.ஷைலஜா
இசை: சக்ரவர்த்தி


உனை நான் அறிவேன் எனை நீ அறியாய்
இந்தப் பூவையின் பூமனம் போராடுமோ
உந்தன் நாடகத்தில் எந்தன் பாத்திரத்தில்
கொண்ட கோலமும் காட்சியும் மாறாததோ
உண்மை வார்த்தையும் பார்வையும் புரியாததோ

உனை நான் அறிவேன் எனை நீ அறியாய்
இந்தப் பூவையின் பூமனம் போராடுமோ
எந்தன் நாயகியே இன்பக் காதலியே
அன்பு வார்த்தையும் பார்வையும் வேறாகுமோ
அந்த வானத்தில் என்றும் பிரிவாகுமோ

உனை நான் அறிவேன் எனை நீ அறியாய்
இந்தப் பூவையின் பூமனம் போராடுமோ

இது மன்னவன் கோயில் தீபமல்ல
முத்து மாலைகள் சூடிடும் ரூபமல்ல
இந்த சாகசப் பேச்சுக்கள் தேவையில்லை
எந்தன் கோயிலில் வேறொரு பாவையில்லை
மடி வரும் கொடியே நான் தானோ
மணி இதழ் யாவும் தேன் தானோ
சித்திரச்சிலை போல் இடைதான் ஆட
சிறு விழிதான் சரிகம பாட
சரசங்கள் பயிலும் சங்கீதமோ
சகலமும் புரியும் சந்தோஷமோ

உனை நான் அறிவேன் எனை நீ அறியாய்
இந்தப் பூவையின் பூமனம் போராடுமோ
எந்தன் நாயகியே இன்பக் காதலியே
அன்பு வார்த்தையும் பார்வையும் வேறாகுமோ
அந்த வானத்தில் என்றும் பிரிவாகுமோ

பசும் புல்வெளி மீதினில் பள்ளி கொள்ள
வரும் பைங்கிளி நீயென அள்ளிக்கொள்ள
திருமேனியில் ஏதோ மெல்ல மெல்ல
ஒரு மின் அலை பாய்வதை என்ன சொல்ல
மறந்தேன் நான் எனை மாலையிலே
மறைத்தேன் மேனியை சேலையிலே
கைதான் காதலில் பூமாலை
மங்கை அறிவாள் கண்ணன் லீலை
எனை கொஞ்சம் நெருங்கு இன்றாவது
இடம் கொஞ்சம் கொடுத்தால் என்னாவது

உனை நான் அறிவேன் எனை நீ அறியாய்
இந்தப் பூவையின் பூமனம் போராடுமோ
எந்தன் நாயகியே இன்பக் காதலியே
அன்பு வார்த்தையும் பார்வையும் வேறாகுமோ
அந்த வானத்தில் என்றும் பிரிவாகுமோ

உனை நான் அறிவேன் எனை நீ அறியாய்
இந்தப் பூவையின் பூமனம் போராடுமோ
உந்தன் நாடகத்தில் எந்தன் பாத்திரத்தில்
கொண்ட கோலமும் காட்சியும் மாறாததோ
உண்மை வார்த்தையும் பார்வையும் புரியாததோ

Friday, November 1, 2013

ஆழ்கடலில் தத்தளித்து - ராகம் தேடும் பல்லவி

பாடல்: ஆழ்கடலில் தத்தளித்து
திரைப்படம்: ராகம் தேடும் பல்லவி
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: டி.ராஜேந்தர்


ஆழ்கடலில் தத்தளித்து நான் எடுத்த முத்து ஒன்றை
விதியவன் பறித்தது ஏன்...ஏன்
உற்சவத்து சிலை இதன் பூச்சரமும் உதிர்ந்தது
பூஜையதும் கலைந்தது ஏன்...ஏன்

ஆழ்கடலில் தத்தளித்து நான் எடுத்த முத்து ஒன்றை
விதியவன் பறித்தது ஏன்...ஏன்
உற்சவத்து சிலை இதன் பூச்சரமும் உதிர்ந்தது
பூஜையதும் கலைந்தது ஏன்...ஏன்

காதல் மொழியைப் பொழிந்தவள்
கானல் நீராய் மறைந்தவள்
சாவு வந்திடினும் சேர்ந்து இறந்திடுவோம்
அன்று சொன்னவளை இன்று காணவில்லை அது ஏன்
அவள் வார்த்தை தொலைந்ததேன்
என் வாழ்க்கை குலைந்ததேன்

ஆழ்கடலில் தத்தளித்து நான் எடுத்த முத்து ஒன்றை
விதியவன் பறித்தது ஏன்...ஏன்
உற்சவத்து சிலை இதன் பூச்சரமும் உதிர்ந்தது
பூஜையதும் கலைந்தது ஏன்...ஏன்

மார்கழி மாதக் கோலமிட்டாள்
தண்ணீர் குடம் தூக்கி வந்தாள்
கரை போல் காத்திருந்தேன்
நதியை எதிர் பார்த்திருந்தேன்
கதை மாறிடவே கரை வேறு கண்டாள்
கால அலைகளுடன் புது நதியைக்கொண்டாள் அது ஏன்
என் மனதில் பாலைவனமானேன்
மணி விழியில் சோகக் கடலானேன்

ஆழ்கடலில் தத்தளித்து நான் எடுத்த முத்து ஒன்றை
விதியவன் பறித்தது ஏன்...ஏன்
உற்சவத்து சிலை இதன் பூச்சரமும் உதிர்ந்தது
பூஜையதும் கலைந்தது ஏன்...ஏன்

மேகம் அந்த மேகம் - ஆயிரம் பூக்கள் மலரட்டும்

பாடல்: மேகம் அந்த மேகம்
திரைப்படம்: ஆயிரம் பூக்கள் மலரட்டும்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: வி.எஸ்.நரசிம்மன்


மேகம் அந்த மேகம்
அது வழி தேடும் ஊமைதானே
மௌனம் உந்தன் மௌனம்
இது தேவன் கோயில் தெய்வீக ஶ்ரீராகம்

மேகம் அந்த மேகம்
அது வழி தேடும் ஊமைதானே
மௌனம் உந்தன் மௌனம்
இது தேவன் கோயில் தெய்வீக ஶ்ரீராகம்
மேகம் அந்த மேகம்

தென்றல் உன் சொந்தம்தான் முகம் நிலா முகம்
சிப்பிக்குள் முத்துப் போல் மௌனம்
இந்த சோலைக்காற்றில் வார்த்தை இல்லை
பூக்கள் யாவும் ஊமை வாசம் பேசுமே
லல லல லா...லல்ல லா...லல லா...லல்ல லா
லல லல லா...லா லல லா லல லா...லா...லா

தென்றல் உன் சொந்தம்தான் முகம் நிலா முகம்
சிப்பிக்குள் முத்துப் போல் மௌனம்
இந்த சோலைக்காற்றில் வார்த்தை இல்லை
பூக்கள் யாவும் ஊமை வாசம் பேசுமே
காதோரம் கீதாஞ்சலி சாய்ந்தாடும் பாவைக்கிளி
மனமே...உனையே...வணங்குதே

மேகம் அந்த மேகம்
அது வழி தேடும் ஊமைதானே
மௌனம் உந்தன் மௌனம்
இது தேவன் கோயில் தெய்வீக ஶ்ரீராகம்
மேகம் அந்த மேகம்

சொல்லெல்லாம் உன்னைத்தான் தினம் தொழும்
சொர்க்கங்கள் பக்கத்தில் மயங்கும்
ஒரு தாயின் மார்பில் சாயும் பிள்ளை
பாசம் பேசும் நேரம் பாஷை தேவையா
ம்ஹ் ம்ம்...லல்ல லா...ஆஹ ஹா...லல்ல லா
லல லல லா...லா லல லா லல லா...லா...லா

சொல்லெல்லாம் உன்னைத்தான் தினம் தொழும்
சொர்க்கங்கள் பக்கத்தில் மயங்கும்
ஒரு தாயின் மார்பில் சாயும் பிள்ளை
பாசம் பேசும் நேரம் பாஷை தேவையா
பாடாமல் ஊமைக்குயில் தாலாட்டும் வேளை இது
மலையும்...பனியும்...உறங்குதே

மேகம் அந்த மேகம்
அது வழி தேடும் ஊமைதானே
மௌனம் உந்தன் மௌனம்
இது தேவன் கோயில் தெய்வீக ஶ்ரீராகம்
மேகம் அந்த மேகம்

Thursday, October 31, 2013

சம்சாரம் என்பது வீணை - மயங்குகிறாள் ஒரு மாது

பாடல்: சம்சாரம் என்பது வீணை
திரைப்படம்: மயங்குகிறாள் ஒரு மாது
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: விஜய பாஸ்கர்


சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை

சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை

என் வாழ்க்கை திறந்த ஏடு
அது ஆசைக்கிளியின் கூடு
என் வாழ்க்கை திறந்த ஏடு
அது ஆசைக்கிளியின் கூடு
பல காதல் கவிதை பாடி
பரிமாறும் உண்மைகள் கோடி
இது போன்ற ஜோடி இல்லை
இது போன்ற ஜோடி இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை

சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை

தை மாத மேக நடனம்
என் தேவி காதல் நளினம்
தை மாத மேக நடனம்
என் தேவி காதல் நளினம்
இந்த காதல் ராணி மனது
அது காலந்தோறும் எனது
இதில் மூடும் திரைகள் இல்லை
இதில் மூடும் திரைகள் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை

சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை

விடுகதை ஒன்று - ஒரு விடுகதை ஒரு தொடர்கதை

பாடல்: விடுகதை ஒன்று
திரைப்படம்: ஒரு விடுகதை ஒரு தொடர்கதை
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
எஸ்.என்.சுரேந்தர் & எஸ்.ஜானகி
இசை: கங்கை அமரன்


ஆரிராரிரோ...ஆரிராரிராரோ...ஆரிராரிராரோ
விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று
விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று
யார் கதை எதுதான் என்று நீதான் அறிவாயோ
என் கண்ணே ஆரம்பம் முடிவும் எங்கே
அறிந்தால் சொல்வாயோ
விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று

மகன் போல உன்னை மடியேந்தும் என்னை
யாரென்று நீ கேளடா அன்னையை
அவள் சொல்லுவாள் உன்னிடம் உண்மையை
மாலை இளங்காற்றே மடல் வாழைக்கீற்றே
காலம் முழுதும் நலம் பெற கண்ணே வாழ்க

விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று
யார் கதை எதுதான் என்று நீதான் அறிவாயோ
என் கண்ணே ஆரம்பம் முடிவும் எங்கே
அறிந்தால் சொல்வாயோ

நாள்தோறும் எந்தன் நலம் நாடும் தெய்வம்
தாலாட்டவே வந்ததே உன்னையே
நீ சொல்லடா அன்னையின் நன்றியை
ஒரு மனதில் பாசம் ஒரு மனதில் பாவம்
தேவன் எழுதும் கதை இது கண்ணே காண்க

விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று
யார் கதை எதுதான் என்று நீதான் அறிவாயோ
என் கண்ணே ஆரம்பம் முடிவும் எங்கே
அறிந்தால் சொல்வாயோ

விதியோடு வாழ்க்கை விளையாடும் வேளை
விதியல்லவோ என்றுமே வெல்வது
இதுவல்லவோ இன்று நான் கண்டது
காலொடிந்த கிள்ளை நடமாடவில்லை
தேவையறிந்து துணை வரும் நெஞ்சே வாழ்க

விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று
யார் கதை எதுதான் என்று நீதான் அறிவாயோ
என் கண்ணே ஆரம்பம் முடிவும் எங்கே
அறிந்தால் சொல்வாயோ
ஆரிரோ...ஆராரோ ஆரிராரோ...ஆரிராரிரோ

Tuesday, October 22, 2013

சங்கீத மேகம் - உதயகீதம்

பாடல்: சங்கீத மேகம்
திரைப்படம்: உதயகீதம்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா


சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்

போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
கேளாய் பூமனமே...ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்

உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே
உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே
எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே
எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே
கேளாய் பூமனமே...ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே...ஓ
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்

அந்தரங்கம் யாவுமே - ஆயிரம் நிலவே வா

பாடல்: அந்தரங்கம் யாவுமே
திரைப்படம்: ஆயிரம் நிலவே வா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா


ம்ஹ்ம் எப்பிடி எப்பிடி ம்ஹ்ம் எப்பிடி எப்பிடி
அந்தரங்கம் யாவுமே எப்பிடி எப்பிடி
சொல்வதென்றால் பாவமே எப்பிடி எப்பிடி
அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் வாசனம் ம்ஹ்ம் ஹ்ம் அறியுமா

அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் வாசனம் ம்ஹ்ம் ஹ்ம் அறியுமா
அந்தரங்கம் யாவுமே...

காமனே நாணம் கொண்டால் சொல்லியது தீராது எப்பிடி எப்பிடி
கம்பனே வந்தால் கூட கட்டுப்படி ஆகாது எப்பிடி எப்பிடி
கண்டதில் இன்று நான் சொல்வது பாதியே
காவிய நாயகி கண்ணகி ஜாதியே
அன்று ஒரு நாள் அந்த மயிலாள் ஆடை நனைந்தாள்
காயும் வரையில் தோகை உடலில் என்னை அணிந்தாள்
நாணமே சேலையானதும் போதையானதும் என்னென்று சொல்ல

அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் வாசனம் ம்ஹ்ம் ஹ்ம் அறியுமா
அந்தரங்கம் யாவுமே...ஹா
எப்பிடி...எப்பிடி எப்பிடி எப்பிடி எப்பிடி

காதலை தானம் கேட்டேன் என்ன ஒரு தாராளம் எப்பிடி எப்பிடி
நான் அவள் தோளில் சாய்ந்து அள்ளியது ஏராளம் எப்பிடி எப்பிடி
தாவணிப் பூவினை சோதனை செய்கிறேன்
எத்தனை மச்சங்கள் கேள் அதைச் சொல்கிறேன்
பாவை உடலில் கோடி மலரில் ஆடை அணிவேன்
ஆடை அறியும் சேதி முழுதும் நானும் அறிவேன்
நீதியை நான் உரைப்பதும் நீ ரசிப்பதும் பண்பாடு இல்லை

அந்தரங்கம் யாவுமே எப்பிடி எப்பிடி
சொல்வதென்றால் பாவமே எப்பிடி எப்பிடி
அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் வாசனம் ம்ஹ்ம் ஹ்ம் அறியுமா
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் வாசனம் ம்ஹ்ம் ஹ்ம் அறியுமா

Thursday, October 17, 2013

பூவென்பதா பொன் என்பதா - உயிரே உனக்காக

பாடல்: பூவென்பதா பொன் என்பதா
திரைப்படம்: உயிரே உனக்காக
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


பூவென்பதா பொன் என்பதா பூமாலை நீயே ராதா
கட்டி வைத்த ஆசை காவல் மீறும்
வெட்கம் வந்து கன்னங்களில் முத்துக் குளிக்கும்
பூவென்பதா பொன் என்பதா பூமாலை நீயே ராதா

மேலாடையில் நூலாக வா
மேலாடையே நானாகவா
கேளாத ராகம் எந்தன் காதில் பாடு
கேளாத ராகம் எந்தன் காதில் பாடு
ஆனந்த மாறன் அம்பானது
நெஞ்சுக்குள் பாய்ந்து வம்பானது
உறங்கும் போது...னன னன னன னன
னன னன ...னா னா னா னா

பூவென்பதா பொன் என்பதா பூமாலை நீயே ராதா
கட்டி வைத்த ஆசை காவல் மீறும்
வெட்கம் வந்து கன்னங்களில் முத்துக் குளிக்கும்
பூவென்பதா பொன் என்பதா பூமாலை நீயே ராதா

ஆசை மனம் மூடாதடி
வாய் பேசுமோ உன் பூங்கொடி
மௌனங்கள் காவல் காக்கும் ஆசை கோடி
மௌனங்கள் காவல் காக்கும் ஆசை கோடி
புண்ணாகச் செய்யும் ஆலிங்கனம்
தாங்காது கண்ணா பிருந்தாவனம்
தழுவும் போது...லல லல லல லல
லல லல...லா லா லா லா

பூவென்பதா பொன் என்பதா பூமாலை நீயே ராதா
கட்டி வைத்த ஆசை காவல் மீறும்
வெட்கம் வந்து கன்னங்களில் முத்துக் குளிக்கும்
பூவென்பதா பொன் என்பதா பூமாலை நீயே ராதா

வெட்கம் வந்து கன்னங்களில் முத்துக் குளிக்கும்
பூவென்பதா பொன் என்பதா பூமாலை நீயே ராதா

ரோஜாவைத் தாலாட்டும் - நினைவெல்லாம் நித்யா

பாடல்: ரோஜாவைத் தாலாட்டும்
திரைப்படம்: நினைவெல்லாம் நித்யா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள் ஹா ஆ
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்

இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும் இளமை எழுதும் ஓர் கவிதை
இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும் இளமை எழுதும் ஓர் கவிதை
மௌனமே சம்மதம் என்று...தீண்டுதே மன்மத வண்டு
மௌனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல்

வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்
பூவிலே மெத்தைகள் தைப்பேன்...கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்
பூவிலே மெத்தைகள் தைப்பேன் கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்
நீ கட்டும் சேலைக்கும் நூலாவேன் ஹா ஹா

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்

Tuesday, October 15, 2013

அதிகாலை சுகவேளை - நட்பு

பாடல்: அதிகாலை சுகவேளை
திரைப்படம்: நட்பு
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
காதல் சொன்ன காகிதம் பூவாய்ப் போனது
வானில் போன தேவதை வாழ்த்துச் சொன்னது
ஒரு தத்தை கடிதத்தை தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க

அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது

அன்பே வா வா அணைக்கவா
நீ நிலவுக்கு பிறந்தவளா
போதை வண்டே பொறுத்திரு
இன்று மலருக்கு திறப்புவிழா
உன்னை வந்து பாராமல் தூக்கம் தொல்லையே
உன்னை வந்து பார்த்தாலும் தூக்கம் இல்லையே
ஒரு பாரம் உடை மீறும் நிறம் மாறும் கனியே
இதழ் ஓரம் அமுதூறும் பரிமாறும் இனியே
அடி தப்பிப் போகக்கூடாது

அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது

தென்றல் வந்து தீண்டினால்
இந்த தளிர் என்ன தடை சொல்லுமா
பெண்மை பாரம் தாங்குமா
அந்த இடை ஒரு விடை சொல்லுமா
என்னைச் சேர்ந்த உன் உள்ளம் ஈரம் மாறுமா
தங்கம் என்ன சுட்டாலும் சாரம் போகுமா
இளங்கோதை ஒரு பேதை இவள் பாதை உனது
மலர் மாலை அணியாமல் உறங்காது மனது
இது போதும் சொர்க்கம் வேறேது

அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
காதல் சொன்ன காகிதம் பூவாய்ப் போனது
வானில் போன தேவதை வாழ்த்துச் சொன்னது
ஒரு தத்தை கடிதத்தை தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க

அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது

Sunday, October 13, 2013

பூபாளம் இசைக்கும் - தூறல் நின்னு போச்சு

பாடல்: பூபாளம் இசைக்கும்
திரைப்படம்: தூறல் நின்னு போச்சு
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & உமா ரமணன்
இசை: இளையராஜா


பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ் நாளே

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ் நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே
மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே
நாயகன் ஜாடை நூதனமே நாணமே பெண்ணின் சீதனமே
மேக மழை நீராட தோகை மயில் வாராதோ
தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது
னன னன னன னன னா னன னன னன னன னா

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ் நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

பூவை எந்தன் தேவை உந்தன் தேவை அல்லவோ
பூவை எந்தன் தேவை உந்தன் தேவை அல்லவோ
மன்மதன் கோயில் தோரணமே மார்கழி திங்கள் பூமுகமே
நாளும் இனி சங்கீதம் ஆடும் இவள் பூந்தேகம்
அம்மம்மா அந்த சொர்க்கத்தில் சுகம்
னன னன னன னன னா னன னன னன னன னா

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ் நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

Thursday, October 10, 2013

கண் மலர்களில் அழைப்பிதழ் - தைப்பொங்கல்

பாடல்: கண் மலர்களில் அழைப்பிதழ்
திரைப்படம்: தைப்பொங்கல்
பாடியவர்கள்: இளையராஜா & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


கண் மலர்களில் அழைப்பிதழ்
பொன் இதழ்களின் சிறப்பிதழ்
இனி வரும் இரவுகள்
இளமையின் கனவுகள் தான்
காண்போமே சேர்ந்தே நாமே
கண் மலர்களில் அழைப்பிதழ்
பொன் இதழ்களின் சிறப்பிதழ்

நான் ஆளும் மனம் பூவோ
நீ நாளும் தமிழ்ப்பாவோ
பூவாடும் விழி தானோ
நீ பாட மொழி ஏனோ
என்ன இன்று...ஆஹா
கண்ணில் என்னை வென்று...ஆஹா
கண்ணன் எண்ணுவதோ
எனக்கென ஒரு கணமோ
விளக்கங்கள் தரும் மனமோ
நமக்கென விழித்திடும்
மலர்களோ...மனங்களோ

கண் மலர்களில் அழைப்பிதழ்
லல லல லல லல
பொன் இதழ்களின் சிறப்பிதழ்
லல லல லா

தாம்பூல நிறம் தானே
மாம்பூவின் இளம் மேனி
ஆ...தாங்காது இனிமேலே
தூங்காது மனம் நாளை
கண்ணில் என்ன...லாலா
மின்னல் கண்டபின்னும்...லாலா
இன்னும் மின்னுவதோ
உனக்கென்று ஒரு மனமோ
நமக்கென்று திருமணமோ
இணைக்கின்ற இயற்கையின்
உறக்கமோ...மயக்கமோ

கண் மலர்களில் அழைப்பிதழ்
ல லல லல லல லல
பொன் இதழ்களின் சிறப்பிதழ்
ல லல லல லல லல

இனி வரும் இரவுகள்
இளமையின் கனவுகள் தான்
காண்போமே சேர்ந்தே நாமே
கண் மலர்களில் அழைப்பிதழ்
பொன் இதழ்களின் சிறப்பிதழ்
ல லல லல லல லல
லல லல லல லல
ல லல லல லல லல
லல லல லல லல லா

மலர்களிலே ஆராதனை - கரும்புவில்

பாடல்: மலர்களிலே ஆராதனை
திரைப்படம்: கரும்புவில்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


மலர்களிலே ஆராதனை
மாலை நேரம் மயங்கும் நேரம்
மனங்களிலே காதலின் வேதனை
மலர்களிலே ஆராதனை

பொங்கும் தாபம் பூம்புனல் வேகம் போதையில் வாடுது
அங்கம் எங்கும் ஆசையின் ராகம் இன்னிசை பாடுது
மடி இதுதான் மலரணைகள் மயங்கும் நேரம் விடியாதோ
மலர்க்கணை தொடுக்காதோ...மலர்களிலே ஆராதனை

பார்வை ஒன்றும் ஒவ்வொரு வேதம் படித்திடக்கூறுது
பாவை எண்ணம் பனிவிழும் நேரம் தலைனைச்சேருது
ரதி மடியின் ரகசியங்கள் ரசித்தேன் லயித்தேன் நெடுநேரம்
ரசனை முடியாதது...மலர்களிலே ஆராதனை

மலர்களிலே ஆராதனை
மாலை நேரம் மயங்கும் நேரம்
மனங்களிலே காதலின் வேதனை
மலர்களிலே...ஆராதனை

மயிலே மயிலே - கடவுள் அமைத்த மேடை

பாடல்: மயிலே மயிலே
திரைப்படம்: கடவுள் அமைத்த மேடை
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & ஜென்ஸி
இசை: இளையராஜா


மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலம் அல்லவோ
தனிமையில் விடலாமோ தளிருடல் தொடலாமோ
மயிலே மயிலே மயிலே மயிலே

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தம் இல்லையோ
உறவுகள் வளராதோ நினைவுகள் மலராதோ
மயிலே மயிலே மயிலே மயிலே

தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
நீ அணைக்க நான் இருக்க நாள் முழுக்க தேன் அளக்க
பனி வாய் மலரே பல நாள் நினைவே
வரவா தரவா பெறவா நான் தொடவா

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தம் இல்லையோ
உறவுகள் வளராதோ நினைவுகள் மலராதோ
மயிலே மயிலே மயிலே மயிலே

மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டிமேளம் முழங்க
மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டிமேளம் முழங்க
பூங்குழலி தேனருவி தோளிரண்டும் நான் தழுவி
வரும் நாள் ஒரு நாள் அதுதான் திருநாள்
உறவாய் உயிராய் நிழலாய் நான் வருவேன்

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலம் அல்லவோ
தனிமையில் விடலாமோ தளிருடல் தொடலாமோ
மயிலே மயிலே மயிலே மயிலே

Wednesday, October 9, 2013

என் அன்பே அன்பே - உன்னைத்தேடி வருவேன்

பாடல்: என் அன்பே அன்பே
திரைப்படம்: உன்னைத்தேடி வருவேன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


என் அன்பே அன்பே என் மன் உன் வசம்
நீ சொன்னால் போதும் சம்மதம் சம்மதம்
உன் காதல் மாளிகை நான் அல்லவோ
உன் ராகமாலிகை நான் அல்லவோ
என் அன்பே அன்பே என் மன் உன் வசம்
நீ சொன்னால் போதும் சம்மதம் சம்மதம்

பூம்பாவை மனம் சிம்மாசனம் மன்னனே
இதழ்கள் பூந்தேன் தரும் பிருந்தாவனம் கண்ணனே
உன் பிரேமாயணம் பாராயணம் செய்கிறேன்
தினமும் காதல்கிளி கீதாஞ்சலி சொல்கிறேன்
காமாஸ்திரம் நீ போட ரோமாஞ்சனம் நான் காண
சந்திரோதயம் நீ ஆக சொர்க்காலயம் நான் காண
கண்ணா உன் கைவண்ணம் காணாத வைபோகம்
அன்பே உன் சிங்காரம் அழகான ஶ்ரீராகம்

ஓ...அன்பே அன்பே அன்பே வா
என் அன்பே அன்பே என் மன் உன் வசம்
நீ சொன்னால் போதும் சம்மதம் சம்மதம்

நீ வாராமலே பொழுதாயிரம் போனது
அழகே பல ராத்திரி சிவராத்திரி ஆனது
வா நான் பாடுவேன் நீலாம்பரி கீர்த்தனம்
இரவில் தூங்காதது நீங்காதது பெண் மனம்
உன் மேலொரு கண்ணாக உன்னோடு நான் ஒண்ணாக
என்னாகுமோ என் பாடு ஏதாகுமோ பெண் பாடு
மெதுவாகத் தொட்டாலும் பதமாகப் பட்டாலும்
புதுமேனி நோகாதோ புண்ணாகிப் போகாதோ

ஓ...அன்பே அன்பே அன்பே வா
என் அன்பே அன்பே என் மன் உன் வசம்
நீ சொன்னால் போதும் சம்மதம் சம்மதம்
உன் காதல் மாளிகை நான் அல்லவோ
உன் ராகமாலிகை நான் அல்லவோ
என் அன்பே அன்பே என் மன் உன் வசம்
நீ சொன்னால் போதும் சம்மதம் சம்மதம்

தேடும் கண்பார்வை - மெல்லத் திறந்தது கதவு

பாடல்: தேடும் கண்பார்வை
திரைப்படம்: மெல்லத் திறந்தது கதவு
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க
தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயம் ஆனதோ

தேடும் பெண்பாவை வருவாள் தொடுவாள்
தேடும் பெண்பாவை வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு
தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க

காண வேண்டும் சீக்கிரம் என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ என் ஆசைக் காவியம்
வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல்வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா
கனிவாய்...மலரே
உயிர் வாடும் போது ஊடலென்ன பாவம் அல்லவா
தேடும் பெண்பாவை வருவாள் தொடுவாள்

தேடித்தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ
காற்றில் ஆடும் தீபமும் உன் காதல் உள்ளமே
நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே
பிரிந்தோம்...இணைவோம்
இனி நீயும் நானும் வாழவேண்டும் வாசல் தேடிவா

தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க
தேடும் பெண்பாவை வருவாள் தொடுவாள்
சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ
வெறும் மாயம் ஆகுமோ
தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க

காவிரியே காவிரியே - அர்ச்சனைப் பூக்கள்

பாடல்: காவிரியே காவிரியே
திரைப்படம்: அர்ச்சனைப் பூக்கள்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


லா ல ல ல் லா லா ல ல ல் லா
காவிரியே...காவிரியே
காதலி போல் விளையாடுறியே
காவியம் ஆயிரம் பாடுறியே
இந்த காதலன் நெஞ்சத்தைக் கூடுறியே
ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது

காவிரியே...காவிரியே
காதலன் போல் விளையாடுறியே
காவியம் ஆயிரம் பாடுறியே
இந்த காதலி நெஞ்சத்தைக் கூடுறியே
ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது

காவிரியே...காவிரியே
காதலி போல் விளையாடுறியே

பொன்னை அள்ளித் தூவுதே மஞ்சள் நிற மேகம்
என்னை அள்ளிப் போகுதே கொஞ்சுகிற ராகம்
என்னமோ...ம்ம் பண்ணுதே...ம்ம்
இந்த மன வேகம்
அள்ளிக்கொள்ள வந்தேனம்மா
அன்பை அள்ளித் தந்தேனம்மா
இனிமேல் யாவும் நீதானம்மா

ஆசை வச்சேன் ஆசை வச்சேன்
அம்மன் கோவிலு பூஜை வச்சேன்
ஒன்ன பார்த்தொரு பாசம் வச்சேன்
உன் உள்ளம் பார்த்ததும் நேசம் வச்சேன்
காலம் நேரம் ஒண்ணாச் சேர்ந்தது

காவிரியே...காவிரியே
காதலி போல் விளையாடுறியே

காதலுக்கு மார்கழி ரொம்ப நல்ல மாசம்
ஹோய் கண்டபடி வீசுதே மல்லியப்பூ வாசம்
கையிலே...ஹா கையிலே...ம்ம்
கன்னிப்பொண்ணு பேசும்
புதுசா பாடம் சொல்லி
மெதுவாய் என்னை அள்ளி
சுகமா தாங்க வாழ் நாளெல்லாம்

காவிரியே...காவிரியே
காதலி போல் விளையாடுறியே
காவியம் ஆயிரம் பாடுறியே
இந்த காதலன் நெஞ்சத்தைக் கூடுறியே
ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது

லா ல ல ல் லா லா ல ல ல் லா
லா லா லா ல ல லா ல ல லா

ஆனந்தத்தேன் சிந்தும் - மண் வாசனை

பாடல்: ஆனந்தத்தேன் சிந்தும்
திரைப்படம்: மண் வாசனை
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


ஆனந்தத்தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர் கொண்டு வந்தேனம்மா
காதல் தேகம் அந்த சுகம் கண்டுகொள்ள
கொஞ்சம் இங்கே வந்தால் என்னம்மா

ஆனந்தத்தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர் கொண்டு வந்தவரே
காதல் வேகம் அந்த சுகம் கண்டுகொள்ள
மஞ்சள் தொட்டுத்தந்தால் என்னைய்யா

நீ நடந்து போகையிலே பூ நடந்து போகக்கண்டேன்
நீ சிரிக்கும் பொன்னழகில் பால் வழிந்து ஓடக்கண்டேன்
முத்தோ மணியோ எல்லாம் கவிதை
எங்கே கற்றுக்கொண்ட வித்தை இது
சொல்லித்தந்ததுந்தன் பார்வை அள்ளித்தந்ததுந்தன் ஜாடை
அன்பில் ஆடும் உள்ளம் கண்டேன்

ஆனந்தத்தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர் கொண்டு வந்தேனம்மா

நேரமுண்டு காலமுண்டு மாலையிட சொந்தமுண்டு
மாலையிட்ட பின்னால் இந்த சோலைக்கிளி கொஞ்சும் வந்து
பொன்னே பூவே எல்லாம் குறும்பு
எங்கே கற்றுக்கொண்ட வித்தை இது
அச்சம் தந்ததுந்தன் வேகம் வெட்கம் தந்ததுந்தன் மோகம்
அன்பில் ஆடும் உள்ளம் கண்டேன்

ஆனந்தத்தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர் கொண்டு வந்தவரே
காதல் வேகம் அந்த சுகம் கண்டுகொள்ள
மஞ்சள் தொட்டுத்தந்தால் என்னைய்யா

ஆனந்தத்தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர் கொண்டு வந்தேனம்மா

மாசி மாசம் ஆளான பொண்ணு - தர்மதுரை

பாடல்: மாசி மாசம் ஆளான பொண்ணு
திரைப்படம்: தர்மதுரை
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & ஸ்வர்ணலதா
இசை: இளையராஜா


மாசி மாசம் ஆளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே
நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே
பூவோடு ஆஆ ஆஆ ஆ தேனாட
தேனோடு ஓஓ ஓஓ ஓ நீ ஆடு
ஓஹோ மாசி மாசம் ஆளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே
நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே

ஆசை நூறாச்சு போங்க
நிலவு வந்தாச்சு வாங்க
நெருங்க நெருங்க பொறுங்க பொறுங்க
ஓ ஹோ ஹோ
ஹே ஆசை கொண்டு வந்தால்
அள்ளித் தேன் கொள்ள வந்தால்
மயங்கி கிறங்க கிறங்கி உறங்க
ஓ ஹோ ஹோ
வெப்பம் படருது படருது
வெட்கம் வளருது வளருது
கட்டும் பனியிலே பனியிலே
ஒட்டும் உறவிலே உறவிலே
ஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓஓ

மாசி மாசம் ஆளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே
நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே

காம லீலா வினோதம்
காதல் கவிதா விலாசம்
படித்துப் படித்து எடுக்க எடுக்க
ஓ ஹோ ஹோ
ஹோய் ஆசை ஆஹா பிரமாதம்
மோக கவிதா பிரவாகம்
தொடுத்துத் தொடுத்து முடிக்க முடிக்க
ஓ ஹோ ஹோ
கொடிதான் தவழுது தவழுது
பூபோல் சிரிக்குது சிரிக்குது
உறவோ நெருங்குது நெருக்குது
உலகம் மயங்குது உறங்குது
ஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓஓ

மாசி மாசம் ஆளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே
நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே
பூவோடு ஆஆ ஆஆ ஆ தேனாட
தேனோடு ஓஓ ஓஓ ஓ நீ ஆடு
ஓஹோ மாசி மாசம் ஆளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே
நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே

Tuesday, October 8, 2013

முத்து ரதமோ முல்லைச் சரமோ - பொன்னகரம்

பாடல்: முத்து ரதமோ முல்லைச் சரமோ
திரைப்படம்: பொன்னகரம்
பாடியவர்கள்:பி.ஜெயசந்திரன் & வாணி ஜெயராம்
இசை: ஷங்கர் கணேஷ்


முத்து ரதமோ முல்லைச் சரமோ

முத்து ரதமோ முல்லைச் சரமோ
மூன்று கனியோ பிள்ளைத் தமிழோ
கண்ணே நீ விளையாடு
கனிந்த மனதில் எழுந்த நினைவில்
காதல் உறவாடு

முத்து ரதமோ மோக சுகமோ
முன்னே வந்த மூன்று தமிழோ
கண்ணா நீ கவிபாடு
கனிந்த மனதில் எழுந்த நினைவில்
காதல் உறவாடு

உனது பார்வை எனது பாடல்
தினமும் நான் பாட
நினைவில் கனவில் சுகமோ
உலக நிலையை மறந்து கொஞ்சம்
விண்ணில் நான் ஆட
அமுதக் கனிகள் தருமோ
இரவுக்காலம் நிலவுக்கோலம்
இதயம் மயங்காதோ
உறவுத்தேரில் உரிமைப்போரில்
என்னை இழுக்காதோ ஓ ஓ ஓ ஓ

முத்து ரதமோ மோக சுகமோ
முன்னே வந்த மூன்று தமிழோ
கண்ணா நீ கவிபாடு

வானில் வசந்தம் தேனின் சுவைபோல்
நேரில் வாராதோ
உறவில் கலைகள் வளரும்
மனதில் பேதம் அதிக தூரம்
கண்ணில் தெரியாது
தினம் சுவைகள் மலரும்
உலக மயக்கம் விலகும் நேரம்
பருவம் விழிக்காதோ
உறவும் என்ன பகையும் என்ன
காலம் மாறாதோ ஓ ஓ ஓ ஓ

முத்து ரதமோ முல்லைச் சரமோ
மூன்று கனியோ பிள்ளைத் தமிழோ
கண்ணே நீ விளையாடு
காதல் உறவாடு

மெட்டி ஒலி காற்றோடு - மெட்டி

பாடல்: மெட்டி ஒலி காற்றோடு
திரைப்படம்: மெட்டி
பாடியவர்கள்: இளையராஜா & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட
மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட
மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக
மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக
கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே
கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே
மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட

ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ
வாழ்நாளெல்லாம் உன்னோடுதான் வாழ்ந்தாலே போதும்
வாழ்வென்பதின் பாவங்களை நாம் காண வேண்டும்
நாளும் பல நன்மை காணும் எழில் பெண்மை
பூவை வைத்த பூவாசம் போதை கொண்ட உன் நேசம்
தென்றல் சுகம் தான் வீசும் தேடாமல் சேராதோ
மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட

ஏஏ ஏஏ ஏஏ ஏஏ ஏஏ ஏஏ
வெண்முல்லையே என் கண்மணி ஊர்கோல நேரம்
பொன் காலடி படும் போதிலே பூந்தென்றல் பாடும்
பார்வை பட்ட காயம் பாவை தொட்டுக் காயும்
எண்ணம் தந்த முன்னோட்டம் என்று அந்த வெள்ளோட்டம்
கண்ட பின்பு கொண்டாட்டம் கண்டாடும் என் நெஞ்சம்

மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட
மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக
மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக
கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே
கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே
மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட

எனக்கொரு காதலி இருக்கின்றாள் - முத்தான முத்தல்லவோ

பாடல்: எனக்கொரு காதலி இருக்கின்றாள்
திரைப்படம்: முத்தான முத்தல்லவோ
பாடியவர்கள்: எம்.எஸ்.விஸ்வநாதன் & எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்


எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை
கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை தமிழோசை
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்

பஞ்சமம் பேசும் பார்வை இரண்டும்
பஞ்சமம் பேசும் பார்வை இரண்டும்
பஞ்சணை போடும் எனக்காக
தெய்வதம் என்னும் திருமகள் மேனி
கைகளை அணைக்கும் இனிதாக இனிதாக
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்

என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன்
என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன்
மெல்லிசை ஆகும் எந்நாளும்
வையகம் யாவும் என் புகழ் பேச
கைவசம் ஆகும் எதிர்காலம் எதிர்காலம்
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்

தேன்சுவைக் கிண்ணம் ஏந்திய வண்ணம்
நான் தரும் பாடல் அவள் தந்தாள்
மோகனம் என்னும் வாகனம் மீது
தேவதை போலே அவள் வந்தாள்
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை தமிழோசை

ஆசைய காத்துல தூது விட்டு - ஜானி

பாடல்: ஆசைய காத்துல தூது விட்டு
திரைப்படம்: ஜானி
பாடியவர்: எஸ்.பி.ஷைலஜா
இசை: இளையராஜா


ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய காத்துல வாடை பட்டு
சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒண்ணு
குயில் கேட்குது பாட்டை நின்னு

ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய காத்துல வாடை பட்டு

வாசம் பூவாசம் வாலிப காலத்து நேசம்
மாசம் தைமாசம் மல்லியப்பூ மணம் வீசும்
நேசத்துல வந்த வாசத்துல
நெஞ்சோ பாடுது சோடிய தேடுது
பிஞ்சோ வாடுது வாடையில
கொஞ்சும் ஜாடைய போடுது
பார்வையும் சொந்தம் தேடுது மேடையில

ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய காத்துல வாடை பட்டு

தேனோ பூந்தேனு தேன்துளி கேட்டது நானு
மானோ பொன்மானு தேயிலைத்தோட்டத்து மானு
ஓடிவர உன்னைத் தேடிவர
தாழம்பூவுல தாவுற காத்துல
தாகம் ஏறுது ஆசையில
பார்க்கும் போதுல ஏக்கம் தீரல
தேகம் வாடுது பேசையில

ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய காத்துல வாடை பட்டு
சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒண்ணு
குயில் கேட்குது பாட்டை நின்னு
குயில் கேட்குது பாட்டை நின்னு

Monday, October 7, 2013

என்ன சுகமோ முதல் முதல் - வலம்புரி சங்கு

பாடல்: என்ன சுகமோ முதல் முதல்
திரைப்படம்: வலம்புரி சங்கு
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
இசை: கங்கை அமரன்


என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்
என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்
புதிய சுக நாதம் உடல் முழுதும் கேட்கும் ஓஹ்
என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்
என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்

பொருள் இழந்த வாசகம் அவளும் கொஞ்சம் பேசினாள்
இருள் பொதிந்த கூந்தலில் அவனும் தன்னை மூடினான்
மதன கலைக்கூடமே பெண்ணானதோ என்றானவன்
உலகை மறந்தாள் கனவில் பறந்தாள்
உலகை மறந்தாள் கனவில் பறந்தாள்
பொன் மஞ்சம் எதற்கு என் நெஞ்சம் இருக்க
என்றாள் தந்தாள் நின்றாள் மயங்கி

என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்
என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்
புதிய சுக நாதம் உடல் முழுதும் கேட்கும் ஓஹ்
என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்

பத்து விரல் ஓவியம் உடலில் எங்கும் தீட்டினான்
பருவமெனும் வீணையை இடையில் மெல்ல மீட்டினான்
பவளமலை மீதிலே பொன்னூஞ்சலில் நின்றாடினான்
விரக நெருப்பில் விழுந்த துடிப்பில்
விரக நெருப்பில் விழுந்த துடிப்பில்
என்னென்ன தவிப்போ என்னென்ன சிலிர்ப்போ
அம்மா என்றாள் தன்னை இழந்தாள்

என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்
என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்
புதிய சுக நாதம் உடல் முழுதும் கேட்கும் ஓஹ்
என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்
என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்
முதல் முதலில் தொடும் சுகம்
முதல் முதலில் தொடும் சுகம்
முதல் முதலில் தொடும் சுகம்

Saturday, September 28, 2013

ராஜா ராணி ராஜ்ஜியம் - அந்த சில நாட்கள்

பாடல்: ராஜா ராணி ராஜ்ஜியம்
திரைப்படம்: அந்த சில நாட்கள்
பாடியவர்கள்: கிருஷ்ணசந்தர் & எஸ்.பி.ஷைலஜா
இசை: இளையராஜா


ராஜா ராணி ராஜ்ஜியம்
ராஜா ராணி ராஜ்ஜியம்
ராகம் பாடும் ராத்திரி நேரம்
ராகம் பாடும் ராத்திரி நேரம்
காதல் தானே சந்தம்
பாடும் கல்யாண ராகம் பேரானந்தம்
ராஜா ராணி ராஜ்ஜியம்

காதோரமாய் பேசும் காதல்கிளி
கண்ஜாடையில் கூறும் கீதாஞ்சலி
கேட்கத்தானோ பார்க்கத்தானோ பேரின்பம்
அது காவல்தாண்டி ஆவல் பொங்கும் ஆரம்பம்
பூபானங்கள் பாயலாம் பூவில் வண்டு சாயலாம்
மாயம் ஏதோ ஜாலம் ஏதோ உல்லாசக்காட்சி ஓராயிரம்

ராஜா ராணி ராஜ்ஜியம்
ராஜா ராணி ராஜ்ஜியம்
ராகம் பாடும் ராத்திரி நேரம்
ராகம் பாடும் ராத்திரி நேரம்
காதல் தானே சந்தம்
பாடும் கல்யாண ராகம் பேரானந்தம்
ராஜா ராணி ராஜ்ஜியம்

ஆகாயமும் நீல நீர் மேகமும்
ஏகாந்தமாய் கூடும் கார்காலமோ
தேகம் தொட்டு தேகம் தொட்டு அம்மம்மா
புது தாளம் இட்டு போடும் மெட்டு என்னம்மா
மையல் பொங்கும் பாத்திரம் மன்னன் தீண்ட மாத்திரம்
மேலும் மேலும் உண்ண உண்ண உண்டாகும் போதை தீராததோ

ராஜா ராணி ராஜ்ஜியம்
ராஜா ராணி ராஜ்ஜியம்
ராகம் பாடும் பா பா பா பா ராத்திரி நேரம்
பா பா பா பா ராகம் பாடும் ராத்திரி நேரம்
காதல் தானே சந்தம்
பாடும் கல்யாண ராகம் பேரானந்தம்
ராஜா ராணி ராஜ்ஜியம்

ராகம் தாளம் பாவம் பாடல் - காதோடுதான் நான் பேசுவேன்

பாடல்: ராகம் தாளம் பாவம் பாடல்
திரைப்படம்: காதோடுதான் நான் பேசுவேன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
இசை: ஷங்கர் கணேஷ்


ராகம் தாளம் பாவம் பாடல்
நான்கும் சேர்ந்தால் இசை வரும்
நான் பாடும் சங்கீதம் காதல்
என்றும் ஆனந்த கல்யாண வாசல்

ராகம் தாளம் பாவம் பாடல்
நான்கும் சேர்ந்தால் இசை வரும்
நான் பாடும் சங்கீதம் காதல்
என்றும் ஆனந்த கல்யாண வாசல்
நான் தேடும் சங்கீதம் நீயே
எந்தன் ராகத்தில் கல்யாணி நீயே

வெண் நீலக்கண்கள் விளையாடும் திங்கள்
பெண்ணாக உருவாகும் என் முன்னே
வெண் நீலக்கண்கள் விளையாடும் திங்கள்
பெண்ணாக உருவாகும் என் முன்னே
பொன்னான உள்ளம் என் இல்லம் தேடி
பொன்னான உள்ளம் என் இல்லம் தேடி
என் வாழ்வில் உறவாடக் கண்டேன்
நீ பேசும் மொழி கூட வீணை
நீதானே அறிவாய் பெண்மானை

ராகம் தாளம் பாவம் பாடல்
நான்கும் சேர்ந்தால் இசை வரும்
நான் தேடும் சங்கீதம் நீயே
எந்தன் ராகத்தில் கல்யாணி நீயே

யாழ் போல உன்னை நான் மீட்ட வேண்டும்
உன் மேனி பருவங்கள் என் கையில்
யாழ் போல உன்னை நான் மீட்ட வேண்டும்
உன் மேனி பருவங்கள் என் கையில்
அதில் ஏழு ஸ்வரமும் உருவாக வேண்டும்
அதில் ஏழு ஸ்வரமும் உருவாக வேண்டும்
நான் அறியாத கலைதானே கண்ணா
காற்றோடு இணைகின்ற ராகம்
கையோடு இணைகின்ற தேகம்

ராகம் தாளம் பாவம் பாடல்
நான்கும் சேர்ந்தால் இசை வரும்
நான் பாடும் சங்கீதம் காதல்
என்றும் ஆனந்த கல்யாண வாசல்

ராகம் தாளம் பல்லவி - தீர்ப்புகள் திருத்தப்படலாம்

பாடல்: ராகம் தாளம் பல்லவி
திரைப்படம்: தீர்ப்புகள் திருத்தப்படலாம்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
இசை: ஷங்கர் கணேஷ்


லா லா லா லா ல ல் ல லா
ல ல் ல லா லா லா லா ல லா
லா ல ல ல் ல லா லா
லா ல ல ல் ல லா லா
ல ல் லா ல ல ல் லா ல ல ல் லா

ராகம் தாளம் பல்லவி அது காதல் பூபாளமே
ராகம் தாளம் பல்லவி அது காதல் பூபாளமே

வானம் சிந்தும் நேரம் ஆசை நெஞ்சில் மோதும்
பொங்கும் இந்நாளே நம் பொன் நாள்
ஆ ஆ ஆ...ஆ ஆ
பொங்கும் இந்நாளே நம் பொன் நாள்

இதழ் தரும் மலரே பழரச நதியே என் தேகம் தீக்கடலே
கண்ணன் நெஞ்சின் தாகம் கங்கை கிண்ணம் தீர்க்கும்
உன் மோகம் மின் காற்று மெல்ல அள்ள வா

இதழ் தரும் மலரே பழரச நதியே என் தேகம் தீக்கடலே
கண்ணன் நெஞ்சின் தாகம் கங்கை கிண்ணம் தீர்க்கும்
உன் மோகம் மின் காற்று மெல்ல அள்ள வா

தோகை நீதான் காமன் பாலம்
ஆவல் தீர்க்கும் தேவ லோகம்
மாலைகள் சூடிக்கொள்ளும் தேதி பார்க்கட்டும்

ராகம் தாளம் பல்லவி அது காதல் பூபாளமே
வானம் சிந்தும் நேரம் ஆசை நெஞ்சில் மோதும்
பொங்கும் இந்நாளே நம் பொன் நாள்
ஆ ஆ ஆ...ஆ ஆ
பொங்கும் இந்நாளே நம் பொன் நாள்

வானும் மண்ணும் தீபமேற்றி மாறும் நேரமிது
வானும் மண்ணும் தீபமேற்றி மாறும் நேரமிது
பாவை மேனி பூவைப்போல ஆகும் வேளையிது
பாவை மேனி பூவைப்போல ஆகும் வேளையிது

காலங்கள் மேளங்கள்...நேரங்கள் தாளங்கள்
தேகங்கள் ராகங்கள்...கோலங்கள் போடுங்கள்

ராகம் தாளம் பல்லவி அது காதல் பூபாளமே
வானம் சிந்தும் நேரம் ஆசை நெஞ்சில் மோதும்
பொங்கும் இந்நாளே நம் பொன் நாள்
ஆ ஆ ஆ...ஆ ஆ
பொங்கும் இந்நாளே நம் பொன் நாள்

லா லா லா லா ல ல் ல லா
ல ல் ல லா லா லா லா ல லா

Wednesday, September 25, 2013

அழகே நீ அழலாமா - புதுயுகம்

பாடல்: அழகே நீ அழலாமா
திரைப்படம்: புதுயுகம்
பாடியவர்கள்: எஸ்.என்.சுரேந்தர் & ஷோபா
இசை: கங்கை அமரன்


அழகே நீ அழலாமா
விழி நீரும் விழலாமா
எதிர்காலம் நமக்காக
உயிரே நான் உனக்காக
மயக்கம் கலக்கம் எதற்காக
அழகே நீ அழலாமா
விழி நீரும் விழலாமா

மடியில் சுமந்தேன் மழலைதான்
மனதில் சுமந்தேன் கவலைதான்
மலரே உனக்கேன் முகவாட்டம்
விடிந்தால் கலையும் பனிமூட்டம்
நீ அறியாயோ நான் படும் பாடு
நீ இருந்தால்தான் எனக்கிது வீடு
விரைவில் காணலாம் வசந்தகாலமே

அழகே நீ அழலாமா
விழி நீரும் விழலாமா

நீயோ அங்கே ஒரு கரையில்
நானோ இங்கே மறு கரையில்
இருந்தோம் கண்ணே இதுவரையில்
இணைந்தோம் இன்று தனியறையில்
தலைவன் இல்லாத தலைவியின் ராகம்
இறைவன் இல்லாத ஆலய தீபம்
கோயில் தேடியே தெய்வம் வந்ததே

அழகே நீ அழலாமா
விழி நீரும் விழலாமா

Thursday, September 19, 2013

இலக்கணம் மாறுதோ - நிழல் நிஜமாகிறது

பாடல்: இலக்கணம் மாறுதோ
திரைப்படம்: நிழல் நிஜமாகிறது
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்


இலக்கணம் மாறுதோ...ஓ ஓ ஓ ஓஓ
இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ
இதுவரை நடித்தது அது என்ன வேடம்
இது என்ன பாடம்
இலக்கணம் மாறுதோ...ஓ ஓ ஓ ஓஓ

கல்லான முல்லை இன்றென்ன வாசம்
காற்றான ராகம் ஏன் இந்த கானம்
வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று
யார் சொல்லித்தந்தார் மழைக்காலம் என்று
மன்மதன் என்பவன் கண் திறந்தானோ
பெண்மை தந்தானோ
இலக்கணம் மாறுதோ...ஓ ஓ ஓ ஓஓ

என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன்
உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்
புரியாததாலே திரை போட்டு வைத்தேன்
திரை போட்ட போதும் அணை போட்டதில்லை
மறைத்திடும் திரைதனை விலக்கி வைப்பாயோ
விலக்கி வைப்பாயோ

தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை
தாலாட்டுப்பாட ஆதாரம் இல்லை
தெய்வங்கள் எல்லாம் உனக்காக பாடும்
பாடாமல் போனால் எது தெய்வமாகும்
மறுபடி திறக்கும் உனக்கொரு பாதை
உரைப்பது கீதை

மணி ஓசை என்ன இடி ஓசை என்ன
எது வந்த போதும் நீ கேட்டதில்லை
நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம்
நிஜமாக வந்து எனை காக்கக் கண்டேன்
நீ எது நான் எது ஏனிந்த சொந்தம்
பூர்வ ஜென்ம பந்தம்

ஆ ஆஆ ஆ ஆஆ ஆஆ ஆ
இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ
இதுவரை நடித்தது அது என்ன வேடம்
இது என்ன பாடம்

தலையைக் குனியும் தாமரையே - ஒரு ஓடை நதியாகிறது

பாடல்: தலையைக் குனியும் தாமரையே
திரைப்படம்: ஒரு ஓடை நதியாகிறது
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ராஜேஸ்வரி
இசை: இளையராஜா


தலையைக் குனியும் தாமரையே
தலையைக் குனியும் தாமரையே
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
தலையைக் குனியும் தாமரையே

நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
ஆஆ ஆஆ ஆ ஆஆஆ ஆஆஆ ஆ
நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
பார்க்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம்
பார்க்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம்
அமுதம் வழியும் இதழைத் துடைத்து
விடியும் வரையில் விருந்து நடத்து

தலையைக் குனியும் தாமரை நான்
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
தலையைக் குனியும் தாமரையே

காத்திருந்தேன் அன்பே
இனி காமனின் வீதியில் தேர் வருமோ
பூமகள் கன்னங்கள்
இனி மாதுளை போல் நிறம் மாறிடுமோ
ஆயிரம் நாணங்கள்
இந்த ஊமையின் வீணையில் இசை வருமா
நீயொரு பொன்வீணை
அதில் நுனிவிரல் தொடுகையில் பல சுரமா
பூவை நுகர்ந்தது முதல் முறையா
ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்
வேதனை வேளையில் சோதனையா
முதல் முறையாம்...இது சரியா
சரி சரி பூவாடைக்காற்று ஜன்னலைச் சாத்து
ஆ ஆஆ ஆஆ ஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆ

பூவாடைக்காற்று ஜன்னலைச் சாத்து
உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி
உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி
இரண்டு நதிகள் இணைந்து நடக்கும்
புதிய அலைகள் கரையை உடைக்கும்

தலையைக் குனியும் தாமரையே
தலையைக் குனியும் தாமரையே
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
தலையைக் குனியும் தாமரையே

Wednesday, September 18, 2013

தென்றல் வந்து என்னைத்தொடும் - தென்றலே என்னைத்தொடு

பாடல்: தென்றல் வந்து என்னைத்தொடும்
திரைப்படம்: தென்றலே என்னைத்தொடு
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு இரவே பாய்கொடு
நிலவே பன்னீரைத்தூவி ஓய்வெடு

தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்

தூறல் போடும் இந்நேரம்
தோளில் சாய்ந்தால் போதும்
சாரல் பாடும் சங்கீதம்
கால்கள் தாளம் போடும்

தெரிந்த பிறகு திரைகள் எதற்கு
நனைந்த பிறகு நாணம் எதற்கு
மார்பில்...சாயும்...போது

தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு இரவே பாய்கொடு
நிலவே பன்னீரைத்தூவி ஓய்வெடு

தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்

தேகம் எங்கும் மின்சாரம்
பாய்ந்ததேனோ அன்பே
மோகம் வந்து என் மார்பில்
வீழ்ந்ததேனோ கண்ணே

மலர்ந்த கொடியோ மயங்கி கிடக்கும்
இதழின் ரசங்கள் எனக்குப் பிடிக்கும்
சாரம்...ஊறும்...நேரம்

தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு இரவே பாய்கொடு
நிலவே பன்னீரைத்தூவி ஓய்வெடு

தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்

தூங்காத விழிகள் ரெண்டு - அக்னி ரட்சத்திரம்

பாடல்: தூங்காத விழிகள் ரெண்டு
திரைப்படம்: அக்னி நட்சத்திரம்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீயில்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

மாமர இலை மேலே...
ஆஆ ஆஆ ஆஆஆ ஆ ஆஆஆஆஆ ஆ
மாமர இலை மேலே மார்கழி பனி போலே
பூமகள் மடிமீது நான் தூங்கவோ
மாமர இலை மேலே மார்கழி பனி போலே
பூமகள் மடிமீது நான் தூங்கவோ
ராத்திரி பகலாக ஒரு போதும் விலகாமல்
ராஜனை கையேந்தி தாலாட்டவோ

நாளும் நாளும் ராகம் தாளம்
சேரும் நேரம் தீரும் பாரம்
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீயில்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேறும் நிலையென்னவோ
ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேறும் கதையல்லவோ
மாதுளம் கனியாட மலராட கொடியாட
மாருதம் உறவாடும் கலையென்னவோ
வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற
வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ

மேலும் மேலும் மோகம் கூடும்
தேகம் யாவும் கீதம் பாடும்
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீயில்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

Sunday, July 21, 2013

ஹேய் ஓராயிரம் - மீண்டும் கோகிலா

பாடல்: ஹேய் ஓராயிரம்
திரைப்படம்: மீண்டும் கோகிலா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா


ஹேய்...
ஹேய்...ஹேய் ஓராயிரம்
ஹேய்...ஹேய் ஓராயிரம்
மலர்களே மலர்ந்தது
உலகிலே சுகமே இதுதானோ
ஹேய்...ஹேய் ஓராயிரம்
ஹேய்...ஹேய் ஓராயிரம்

கீழ்வானிலே இளஞ்சூரியன்
தேரோட்டமே காண
கீழ்வானிலே இளஞ்சூரியன்
தேரோட்டமே காண
விடிகாலையின் பூந்தென்றலில்
நாம் காண்பது பேரின்பமே
எங்கும் பொங்கும் வண்ணம் கண்டேன்
புதுமையே இயற்கையை ரசிக்காதோ

ஹேய்...ஹேய் ஓராயிரம்
ஹேய்...ஹேய் ஓராயிரம்

நீ பார்த்ததும் நான் வந்ததும்
தேனானதே வாழ்வில்
நீ பார்த்ததும் நான் வந்ததும்
தேனானதே வாழ்வில்
இளஞ்சோடியின் விழிஜாடையில்
பேராசைகள் ஒரு கோடியே
அங்கம் மின்னும் தங்கம் கண்டேன்
இளமையே இனிமையை ரசிக்காதோ

ஹேய்...ஹேய் ஓராயிரம்
ஹேய்...ஹேய் ஓராயிரம்
மலர்களே மலர்ந்தது
உலகிலே சுகமே இதுதானோ
ஹேய்...ஹேய் ஓராயிரம்
ஹேய்...ஹேய் லாலாலலா

Friday, July 19, 2013

ஓராயிரம் திருவாசகம் - திருப்பங்கள்

பாடல்: ஓராயிரம் திருவாசகம்
திரைப்படம்: திருப்பங்கள்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்


ஓராயிரம் திருவாசகம்
உன்னோடு நான் பேசுவேன்
நாளாயிரம் பொழுதாயிரம்
சுகமாக உறவாடுவேன்

ஓராயிரம் திருவாசகம்
உன்னோடு நான் பேசுவேன்
நாளாயிரம் பொழுதாயிரம்
சுகமாக உறவாடுவேன்

காலையிலே தாமரை நீர் ஓடை
மாலையிலே மந்திரம் போல் மேடை
காலையிலே தாமரை நீர் ஓடை
மாலையிலே மந்திரம் போல் மேடை
கண்களிலே காதல் இளம் ஜாடை
கலந்துவிட்டால் மல்லிகைப்பூ வாடை

மோகம் எனும் கவியெழுதும் தேகம்
மூன்று தமிழ் பாடிவரும் ராகம்
தேடி உனை கண்டுகொண்ட யோகம்
தேவதையில் நீயும் ஒரு பாகம்

ஆயிரம் காலம் சொல்வேன்
ஆலயம் எங்கும் சொல்வேன்
நீ வந்த நாளே வாழ்வின்
நன்நாளாம் நன்நாளாம் நன்நாளாம்

ஓராயிரம் திருவாசகம்
உன்னோடு நான் பேசுவேன்
நாளாயிரம் பொழுதாயிரம்
சுகமாக உறவாடுவேன்

வள்ளுவனின் இல்லறத்தைக் கேட்டு
உள்ளமெல்லாம் மின்னியதோர் பாட்டு
வெள்ளமென ஆசைகொண்டேன் நேற்று
பிள்ளையிடம் பொங்குது தாலாட்டு

ஆரிரரோ ஆரிரரோ ஆராரிராரோ
ஆரிரரோ ஆராரிராரோ
ஆரிரரோ ஆரிரரோ ஆராரிராரோ
ஆரிரரோ ஆராரிராரோ

நம்மைவிட வாழ்பவர்கள் இல்லை
நாமிருக்கும் சொர்க்கமிதே எல்லை
தென்றலுடன் சேர்ந்தம்மா முல்லை
தினம் தினமும் தேன்நிலவு கொள்ளை

நாளைய வாழுவும் நீயே
கோவிலின் தெய்வம் நீயே
தேடிய செல்வம் நீயே
என் தேவி என் தேவி என் தேவி

ஓராயிரம் திருவாசகம்
உன்னோடு நான் பேசுவேன்
நாளாயிரம் பொழுதாயிரம்
சுகமாக உறவாடுவேன்

Monday, July 1, 2013

பூங்காற்றிலே உன் சுவாசத்தை - உயிரே

பாடல்: பூங்காற்றிலே உன் சுவாசத்தை
திரைப்படம்: உயிரே
பாடியவர்: உன்னிமேனன்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்


ஓ கண்ணில் ஒரு வலி இருந்தால்
கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலி இருந்தால்
கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலி இருந்தால்
கனவுகள் வருவதில்லை

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல்மேல் ஒரு துளி விழுந்ததே
அதை தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனைக் காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல்மேல் ஒரு துளி விழுந்ததே
அதை தேடித் தேடிப் பார்த்தேன்

காற்றின் அலைவரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும்
கண்ணீர் வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா
காற்றில் கண்ணீரை ஏற்றி
கவிதை செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல்மேல் ஒரு துளி விழுந்ததே
அதை தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனைக் காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்

கண்ணில் ஒரு வலி இருந்தால்
கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலி இருந்தால்
கனவுகள் வருவதில்லை

வானம் எங்கும் பொன் பிம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கை இல்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னை செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல்மேல் ஒரு துளி விழுந்ததே
அதை தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனைக் காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல்மேல் ஒரு துளி விழுந்ததே
அதை தேடித் தேடிப் பார்த்தேன்

Saturday, June 29, 2013

வசந்தமே அருகில் வா - அமரன்

பாடல்: வசந்தமே அருகில் வா
திரைப்படம்: அமரன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: ஆதித்யன்


வசந்தமே அருகில் வா
நெஞ்சமே உருக வா

வெண்பனி வீசிடும் மேகங்களே
சிந்திடும் மோகன ராகங்களே
உலா வரும் நிலா தொடும்
காதல் ராஜ வீதியில்
கானம் பாடி ஊர்வலம்
வசந்தமே அருகில் வா

கனவை சுமந்த கயல்விழி
உறவில் கலந்த உயிர்மொழி
இதயம் முழுதும் புது ஒளி
இரவல் தந்த அவள் மொழி
சொந்தமும் ஆகி பந்தமும் ஆகி
என்னுயிர் வாழும் சொர்க்கமும் ஆகி
இமைக்க மறந்து இணைந்தவள்

வெண்பனி வீசிடும் மேகங்களே
சிந்திடும் மோகன ராகங்களே
உலா வரும் நிலா தொடும்
காதல் ராஜ வீதியில்
கானம் பாடி ஊர்வலம்
வசந்தமே அருகில் வா

மழலை சுமந்த மரகதம்
மனதை சுமந்த தளிர்மரம்
நிழலை கொடுத்த வளைக்கரம்
உயிரும் அவளின் அடைக்களம்
புண்ணியம் கோடி செய்தவன் நானும்
ஜென்மங்கள் யாவும் என்னுடன் சேர
உறவின் சிறகை விரித்தவள்

வெண்பனி வீசிடும் மேகங்களே
சிந்திடும் மோகன ராகங்களே
உலா வரும் நிலா தொடும்
காதல் ராஜ வீதியில்
கானம் பாடி ஊர்வலம்
வசந்தமே அருகில் வா
நெஞ்சமே உருக வா

மழையும் நீயே - அழகன்

பாடல்: மழையும் நீயே
திரைப்படம்: அழகன்
பாடியவர்: எஸ்பி.பாலசுப்ரமணியம்
இசை: மரகதமணி


மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா...உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா

மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா...உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா

இது என்ன மண்ணில் கூட நிலவும் வருமா
சரசம் பயிலும் விழியில் வருமே
இது என்ன தென்றல் கூட அனலாய்ச் சுடுமா
தனிமை நினைவில் அனலாய்ச் சுடுதே
பார்க்காமல் மெல்லப் பார்த்தாளே
அது தானா காதல் கலை
தோளோடு அள்ளிச் சேர்த்தானே
அது தானா மோன நிலை
இதுதான்...சொர்க்கமா
இது காமதேவனின் யாகசாலையா

மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா...உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா

கலையெல்லாம் கற்றுக்கொள்ளும் பருவம் பருவம்
கடலின் அலைபோல் இதயம் அலையும்
கருநீலக்கண்கள் ரெண்டும் பவளம் பவளம்
எரியும் விரகம் அதிலே தெரியும்
ஏகாந்தம் இந்த ஆனந்தம்
அதன் எல்லை யார் அறிவார்
ஏதேதோ சுகம் போதாதோ
இந்த ஏக்கம் யார் அறிவார்
முதலாய்...முடிவாய்
இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான்

மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா...உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா

Friday, June 28, 2013

வானும் மண்ணும் - காதல் மன்னன்

பாடல்: வானும் மண்ணும்
திரைப்படம்: காதல் மன்னன்
பாடியவர்கள்: ஹரிஹரன் & சித்ரா
இசை: பரத்வாஜ்


வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக்கொண்டதே
ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே
காதல் இடம் பார்ப்பதில்லை அது இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று பூத்திடுதே
ஒரு நீரோடை மீனுக்கு கரை மேல் ஆசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக்கொண்டதே
ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே
காதல் இடம் பார்ப்பதில்லை அது இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று பூத்திடுதே
ஒரு நீரோடை மீனுக்கு கரை மேல் ஆசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

நியாயமா இது பாவமா என்று சொல்ல யாருமிங்கு இல்லை
மௌனமே மொழியானதால் அட பாஷை என்பதொரு தொல்லை
அடுத்தொன்று தோன்றவில்லை
வெண்ணிலா நீராற்றிலே என்றும் விழுந்து பார்த்தவர்கள் இல்லை
பெண் நிலா தங்கச்சேற்றிலே இன்று வீழ்ந்து போனதொரு தொல்லை
இலக்கணம் பார்க்கவில்லை
திறக்கும் மொட்டுகள் தேதி பார்ப்பதுவும் இல்லை
உறவு மாறலாம் உந்தன் கையில் அது இல்லை
ஒரு நீரோடை மீனுக்கு கரை மேல் ஆசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

எவ்விடம் மழை தூவலாம் என்று மேகம் யோசிப்பது உண்டோ
ஜாதகம் சுபயோகங்கள் கண்டு காதல் கூடுவதும் உண்டோ
உணர்ச்சிக்கு பாதை உண்டோ
விதியினும் காதல் வலியது இதில் வேறு வாதமொன்று உண்டோ
காதலின் திசை ஆயிரம் அதை கண்டு சொன்னவர்கள் உண்டோ
கனவுக்கு வேலி உண்டோ
காலம் சொல்லுவதை காதல் கேட்பதுவும் இல்லை
ஆசை என்ற நதி அணையில் நிற்பதுவும் இல்லை
ஒரு நீரோடை மீனுக்கு கரை மேல் ஆசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக்கொண்டதே

வசந்தமும் நீயே - கண்ணீர் பூக்கள்

பாடல்: வசந்தமும் நீயே
திரைப்படம்: கண்ணீர் பூக்கள்
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை: ஷங்கர் கணேஷ்


வசந்தமும் நீயே மலர்களும் நீயே
இளமாலை விளையாடும் இளந்தென்றல் நீயே
இசை கொஞ்சும் தமிழ் சிந்தும் சுகராகம் நீயே

வசந்தமும் நீயே மலர்களும் நீயே
இளமாலை விளையாடும் இளந்தென்றல் நீயே
இசை கொஞ்சும் தமிழ் சிந்தும் சுகராகம் நீயே

மாலை நான் மலரானவள் மார்பில் தேன் நதியானவள்
நாளும் நீ அதில் நீந்தவும் தேடும் ஓர் கரை காணவும்
நான் உன்னை மார்போடு தாலாட்டலாம்
ஒன்றான நெஞ்சங்கள் தழுவுவதும் உருகுவதும்
மயங்குவதும் மருவுவதும்
நூறாண்டு காலங்கள் நான் காணலாம்

வசந்தமும் நீயே மலர்களும் நீயே
இளமாலை விளையாடும் இளந்தென்றல் நீயே
இசை கொஞ்சும் தமிழ் சிந்தும் சுகராகம் நீயே

ஆடை ஏன் கலைகின்றது ஆசை ஏன் அலைகின்றது
மோகம் ஏன் எழுகின்றது தேகம் ஏன் சுடுகின்றது
ஏனிந்த மாயங்கள் யார் தந்தது
ஏழேழு ஜென்மங்கள் எனதிளமை உனதுரிமை
இது முதல் நாள் இனி வரும் நாள்
எல்லாமும் பேரின்ப நாளல்லவோ

வசந்தமும் நீயே மலர்களும் நீயே
இளமாலை விளையாடும் இளந்தென்றல் நீயே
இசை கொஞ்சும் தமிழ் சிந்தும் சுகராகம் நீயே

தீபங்கள் எரிகின்றன தேகங்கள் இணைகின்றன
ஆரம்பம் இதுவென்றது ஆனந்தம் வருகின்றது
செவ்வானம் தேன்மாரி பெய்கின்றது
சிங்கார ராகத்தில் இசை எழுந்தது துயில் கலைந்தது
உயிர் கலந்தது தனை மறந்தது
காணாத பேரின்பம் நான் காண்கிறேன்

வசந்தமும் நீயே மலர்களும் நீயே
இளமாலை விளையாடும் இளந்தென்றல் நீயே
இசை கொஞ்சும் தமிழ் சிந்தும் சுகராகம் நீயே
வசந்தமும் நீயே

கையில் மிதக்கும் கனவா - ரட்சகன்

பாடல்: கையில் மிதக்கும் கனவா
திரைப்படம்: ரட்சகன்
பாடியவர்: ஶ்ரீனிவாசன்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்


கனவா இல்லை காற்றா
கனவா நீ காற்றா
கையில் மிதக்கும் கனவா நீ
கைகால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே
நுரையால் செய்த சிலையா நீ

இப்படி உன்னை ஏந்திக்கொண்டு
இந்திரலோகம் போய் விடவா
வழியில் கொஞ்சம் வலி எடுத்தாலும்
சந்திர தரையில் பாயிடவா

கையில் மிதக்கும் கனவா நீ
கைகால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே
நுரையால் செய்த சிலையா நீ

நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேனடி
அதை கண்டு கொண்டேனடி

ம்ம்ம் நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேனடி
அதை கண்டு கொண்டேனடி

காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது
உன் பளிங்கு முகத்தைப் பார்த்துக்கொண்டால்
பசியோ வலியோ தெரியாது

காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது
உன் பளிங்கு முகத்தைப் பார்த்துக்கொண்டால்
பசியோ வலியோ தெரியாது

உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரம் தூரம் தெரியாது
உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரம் தூரம் தெரியாது
உன்மேல் வந்தொரு பூ விழுந்தால்
என்னால் தாங்க முடியாது

கையில் மிதக்கும் கனவா நீ
கைகால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே
நுரையால் செய்த சிலையா நீ

கையில் மிதக்கும் கனவா நீ
கைகால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே
நுரையால் செய்த சிலையா நீ

கனவா நீ காற்றா
கனவா நீ காற்றா

சந்தன புன்னகை - ஷங்கர் கணேஷ்

பாடல்: சந்தன புன்னகை
திரைப்படம்: நாடோடி ராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: ஷங்கர் கணேஷ்


சந்தன புன்னகை சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன்மழை பொழியும் இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்து விடும்

சந்தன புன்னகை சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன்மழை பொழியும் இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்து விடும்

சந்தன புன்னகை சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே

நெஞ்சோரம் இந்நேரம் கள்ளூறும்
இவள் ஒரு தாவணி மேகம்
இதயம் அமுதில் நனையும் தொடுகையில்
நெஞ்சோரம் இந்நேரம் கள்ளூறும்
இவள் ஒரு தாவணி மேகம்
இதயம் அமுதில் நனையும் தொடுகையில்
பார்வை வேறானது இங்கு வேர்வை ஆறானது
பார்வை வேறானது இங்கு வேர்வை ஆறானது
சேலைதொடு மாலையிடு இளமையை தூதுவிடு பாடு

சந்தன புன்னகை சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன்மழை பொழியும் இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்து விடும்

சந்தன புன்னகை சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன்மழை பொழியும் இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்து விடும்

என்னோடு கொண்டாடு பண்பாடு
தினம் தினம் ராத்திரி ராகம்
கரும்பும் இவளை விரும்பும் கனிரசம்
என்னோடு கொண்டாடு பண்பாடு
தினம் தினம் ராத்திரி ராகம்
கரும்பும் இவளை விரும்பும் கனிரசம்
நெஞ்சில் ஓர் வேதனை இனி தேனில் ஆராதனை
நெஞ்சில் ஓர் வேதனை இனி தேனில் ஆராதனை
கூந்தலிலே போர்வையிடு மன்மத சேதி கொடு பாடு

சந்தன புன்னகை சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன்மழை பொழியும் இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்து விடும் ஆஹா ஹா ஹா

சந்தன புன்னகை சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன்மழை பொழியும் இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்து விடும்

ரோஜா ஒன்று உள்ளங்கையில் - ஓ மானே மானே

பாடல்: ரோஜா ஒன்று உள்ளங்கையில்
திரைப்படம்: ஓ மானே மானே
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
வாசல் தாண்டி வந்து காதல் வேண்டி வந்து
ஆஹா நாணம் கொண்டு
ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது

உன் மார்பில் இடம் பிடித்தேன்
உன் தோள்களில் முகம் புதைத்தேன்
பேசாமல் மெல்ல எழுந்தேன்
உன் கைகளில் என்னை இழந்தேன்
உன் பெண்மைக்குள்ளே நான் என்னைத்தேட
என் ஆண்மைக்குள்ளே நீ உன்னைத்தேட
பெண் ஆற்றில் நான் இன்று நீராட

ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
வாசல் தாண்டி வந்து காதல் வேண்டி வந்து
ஆஹா நாணம் கொண்டு ஹோ
ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது

என் காட்டில் இன்று மழையா
என் ஜீவனே நனைகின்றதா
ஆஹா ஹா இது சரியா
உன் ஆடைக்கு விடுமுறையா
உன் கையில் என்னை நான் இன்று தந்தேன்
உன் பாடு கண்ணா வேறேன்ன சொல்வேன்
என் பெண்மை என்னென்று நான் கண்டேன்

ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
வாசல் தாண்டி வந்து காதல் வேண்டி வந்து
ஆஹா நாணம் கொண்டு

மௌனமான நேரம் - சலங்கை ஒலி

பாடல்: மௌனமான நேரம்
திரைப்படம்: சலங்கை ஒலி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


மௌனமான நேரம்...
மௌனமான நேரம் இளமனதில் என்ன பாரம்
மௌனமான நேரம் இளமனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏனென்று கேளுங்கள்...
இது மௌனமான நேரம் இளமனதில் என்ன பாரம்

இளமை சுமையை மனம் தாங்கிக்கொள்ளுமோ
புலம்பும் அலையை கடல் மூடிக்கொள்ளுமோ
குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர்த்துளி
குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர்த்துளி
கூதலான மார்கழி நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி...
மௌனமான நேரம் இளமனதில் என்ன பாரம்

இவளின் மனதில் இன்னும் இரவின் ஈரமோ
கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ
பாதை தேடியே பாதம் போகுமோ
பாதை தேடியே பாதம் போகுமோ
காதலான நேசமோ கனவு கண்டு கூசுமோ
தனிமையோடு பேசுமோ...

மௌனமான நேரம் இளமனதில் என்ன பாரம்
இது மௌனமான நேரம் இளமனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏனென்று கேளுங்கள்...
இது மௌனமான நேரம் இளமனதில் என்ன பாரம்

Thursday, June 27, 2013

இருந்தா நல்லா இரு - மேயர் மீனாட்சி

பாடல்: இருந்தா நல்லா இரு
திரைப்படம்: மேயர் மீனாட்சி
பாடியவர்கள்: எம்.எஸ்.விஸ்வநாதன் & வாணி ஜெயராம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்


இருந்தா நல்லா இரு
நீ எப்போதும் ஒண்ணா இரு
எனக்கும் கண்ணா இரு
புத்தி இல்லேன்னா ரெண்டா இரு

இருந்தா நல்லா இரு
நீ எப்போதும் ஒண்ணா இரு
எனக்கும் கண்ணா இரு
புத்தி இல்லேன்னா ரெண்டா இரு

ஒழுங்கா இருந்தா ஊரே மதிக்கும்
உனக்குண்டு எதிர்காலம்
மது உண்ணே விழுந்தா உறவே வெறுக்கும்
உனக்கே புரியோணும்

இருந்தா நல்லா இரு
நீ எப்போதும் ஒண்ணா இரு
எனக்கும் கண்ணா இரு
புத்தி இல்லேன்னா ரெண்டா இரு

பருவம் வந்த நேரம் பார்த்து
அறிவு கெட்டு ஆடாதே
பருவம் வந்த நேரம் பார்த்து
அறிவு கெட்டு ஆடாதே
பழகும் கூட்டம் விலகிப் போயி
தனியே நின்னு வாடாதே

நிலையே தண்ணி போட்ட பின்னும்
நிதானம் மட்டும் மாறாது
நெருப்பு பொட்டி எங்கே வச்சேன்
அதுதான் கொஞ்சம் புரியாது
அடச்சீ...கம்முன்னு கெட

ஒழுங்கா இருந்தா ஊரே மதிக்கும்
உனக்குண்டு எதிர்காலம்
மது உண்ணே விழுந்தா உறவே வெறுக்கும்
உனக்கே புரியோணும்

இருந்தா நல்லா இரு
நீ எப்போதும் ஒண்ணா இரு
எனக்கும் கண்ணா இரு
புத்தி இல்லேன்னா ரெண்டா இரு

முள்ளில் பட்ட வேட்டி ஆகும்
கள்ளைத் தொட்ட உன் வாழ்வு
முள்ளில் பட்ட வேட்டி ஆகும்
கள்ளைத் தொட்ட உன் வாழ்வு
புண்ணில் பட்ட ஈட்டி ஆகும்
உன்னைத் தொட்ட என் வாழ்வு

சொர்க்கம் பார்க்கப் போகும் போது
நீ பக்கம் வந்து நிக்காதே
வெட்கம் மானம் பார்க்கப் போனா
விஷயம் ஒண்ணும் நிக்காதே
அடச்சீ...கம்முன்னு கெட

ஒழுங்கா இருந்தா ஊரே மதிக்கும்
உனக்குண்டு எதிர்காலம்
மது உண்ணே விழுந்தா உறவே வெறுக்கும்
உனக்கே புரியோணும்

இருந்தா நல்லா இரு
நீ எப்போதும் ஒண்ணா இரு
எனக்கும் கண்ணா இரு
புத்தி இல்லேன்னா ரெண்டா இரு

சந்திரப்பிறை பார்த்தேன் - கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன

பாடல்: சந்திரப்பிறை பார்த்தேன்
திரைப்படம்: கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன
பாடியவர்: வாணி ஜெயராம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்


சந்திரப்பிறை பார்த்தேன்
தோழி சந்திப்பு நிகழ்ந்ததடி
சந்திரப்பிறை பார்த்தேன்
தோழி சந்திப்பு நிகழ்ந்ததடி
மந்திரம் போட்டது போல் எனக்கோர்
மாப்பிள்ளை கிடைத்ததடி
மந்திரம் போட்டது போல் எனக்கோர்
மாப்பிள்ளை கிடைத்ததடி
சந்திரப்பிறை பார்த்தேன்
தோழி சந்திப்பு நிகழ்ந்ததடி

நகரத்து வீதியில் நாயகன் வந்தார்
ஜாடையில் கண்டேனடி
நங்கையர் பலரங்கு திரையிட்டு வைத்தார்
திருமணம் முடிந்ததடி
நகரத்து வீதியில் நாயகன் வந்தார்
ஜாடையில் கண்டேனடி
நங்கையர் பலரங்கு திரையிட்டு வைத்தார்
திருமணம் முடிந்ததடி
திருமணம் முடிந்ததடி
திருமணம் முடிந்ததடி
முகத்திரை போட்ட பெண்ணுக்கும்
காதல் முத்திரை விழுந்ததடி
முதலிரவென்றால் அடியே மனது
மோகனம் படித்தது

சந்திரப்பிறை பார்த்தேன்
தோழி சந்திப்பு நிகழ்ந்ததடி

ஆடிய நதியின் ஓடத்திலே
ஓர் அழகிய மஞ்சமடி
ஆனந்தம் பாடிய நிலையில்
நான் அவரிடம் தஞ்சமடி
ஆடிய நதியின் ஓடத்திலே
ஓர் அழகிய மஞ்சமடி
ஆனந்தம் பாடிய நிலையில்
நான் அவரிடம் தஞ்சமடி
மூடிய உடலின் அழகை முழுவதும்
அவர் விழி பார்த்ததடி
முன்னிரவில் அவர் தொடங்கிய
கதையும் விடிந்தபின் முடிந்ததடி

சந்திரப்பிறை பார்த்தேன்
தோழி சந்திப்பு நிகழ்ந்ததடி

அல்லா உரைத்த கடமையை
முடித்தோர் ரம்ஸான் வந்ததடி
அவனை நினைத்து கால்களை மடித்து
மூன்றுளம் வணங்குதடி
மூன்றுளம் வணங்குதடி
மூன்றுளம் வணங்குதடி
அப்பா அம்மா என்று பையனின்
அன்பு வளர்ந்ததடி
ஆண்டவன் மீது நம்பிக்கை வைப்போம்
அடுத்ததும் பிறக்குமடி

சந்திரப்பிறை பார்த்தேன்
தோழி சந்திப்பு நிகழ்ந்ததடி
மந்திரம் போட்டது போல் எனக்கோர்
மாப்பிள்ளை கிடைத்ததடி
மாப்பிள்ளை கிடைத்ததடி
மாப்பிள்ளை கிடைத்ததடி
மாப்பிள்ளை கிடைத்ததடி

அன்பே அன்பே - சாதனை

பாடல்: அன்பே அன்பே
திரைப்படம்: சாதனை
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


அன்பே அன்பே...எங்கே எங்கே
அன்பே அன்பே எங்கே எங்கே
கண்ணீரின் ஈரங்கள் கல்லுக்குள் பாருங்கள்
காதல் மன்னவா கண்டு செல்லவா
அன்பே அன்பே எங்கே எங்கே

பாவை செய்த பாவம் என்ன
வந்து சொல்லக் கூடாதோ
சாவை இன்னும் கொஞ்ச நேரம்
தள்ளிப் போடக் கூடாது
கண்ணின் ஓரம் ஆவி தேங்க
காதல் தூரம் பார்க்கிறேன்
கண்ணின் ஓரம் ஆவி தேங்க
காதல் தூரம் பார்க்கிறேன்
தாங்கவில்லை பெண் மனம்
காண வேண்டும் உன் முகம்
கண்டு போக சம்மதம்

அன்பே அன்பே எங்கே எங்கே
கண்ணீரின் ஈரங்கள் கல்லுக்குள் பாருங்கள்
காதல் மன்னவா கண்டு செல்லவா
அன்பே அன்பே எங்கே எங்கே

தேகம் மாய்ந்து போகக்கூடும்
காதல் மாய்ந்து போகாது
நிலவு தேய்ந்து போகக்கூடும்
வானம் தேய்ந்து போகாது
காதல் என்னும் பூவின் மீது
பாறை ஏற்றிப் பார்ப்பதோ
காதல் என்னும் பூவின் மீது
பாறை ஏற்றிப் பார்ப்பதோ
நெஞ்சில் இன்று போர்க்களம்
நீரில் மூழ்கும் கண்களும்
சாவு மூன்று அங்குலம்

அன்பே அன்பே எங்கே எங்கே
கண்ணீரின் ஈரங்கள் கல்லுக்குள் பாருங்கள்
காதல் மன்னவா கண்டு செல்லவா
அன்பே அன்பே எங்கே எங்கே

Sunday, June 23, 2013

பொன்னி நதி வெள்ளம் - முதல் வசந்தம்

பாடல்: பொன்னி நதி வெள்ளம்
திரைப்படம்: முதல் வசந்தம்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா


பொன்னி நதி வெள்ளம் இன்று
பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே
ஆ ஆ...ஆ ஆ ஆ...ஆ ஆ ஆ ஆ

பொன்னி நதி வெள்ளம் இன்று
பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே
பூவின் வாசமே பூஜை நேரமே
என் காதலின் சங்கமம் இன்றுதான்
பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே

பனியில் நனைந்த பூமேனி
பருகத் துடிக்கும் நான் தேனீ
அது தந்த சுகம் இன்ப சுகமே
புது தங்க முகம் இந்த முகம்
தெய்வம் சேர்த்த நம் கைகள் சொந்தம் பாடுது
தென்றல் காற்றில் நம் பாடல் சொர்க்கம் தேடுது
இது இளமை...இனிமை...புதுமை

பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே

தென்றல் இசைக்கின்ற சங்கீதம்
சொல்லி வருவது உல்லாசம்
மனம் தன்னில் சுகம் சொல்ல வந்தது
மலர் தந்த மணம் கொண்டு வந்தது
பொங்கும் ஆசை வேகங்கள் மங்கை தந்தது
அங்கும் கூறும் மோகங்கள் தங்கம் போன்றது
இனி இனிமையின்...கனவுகள்...உதயம்

பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே
நாளும் உன்னிடம் நாடும் என்னிடம்
நீ தந்தது என்றுமே இன்பமே
பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே

Saturday, June 22, 2013

தேவன் மகளோ மலரோ - காட்டுக்குள்ளே திருவிழா

பாடல்: தேவன் மகளோ மலரோ
திரைப்படம்: காட்டுக்குள்ளே திருவிழா
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & வாணி ஜெயராம்
இசை: ஷங்கர் கணேஷ்


தேவன் மகளோ மலரோ உலவும் தேவதை
பௌர்ணமி இரவில் இந்நாளில் பவனி வந்தாளோ

தேவன் மகனோ மதனோ தழுவும் காதலன்
பௌர்ணமி இரவில் சங்கீதம் பாட வந்தானோ

ஆதியும் அந்தமும் பூமகள் மேனியில்
சந்தோஷ வெள்ளங்கள் ஓட
ஆடையில் வானவில் மேடையில் ஆடுதோ
ஆனந்த ராகங்கள் பாட
தாமரையின் இதழ்மீது தேன்துளிகள் விழும்போது
சுவைத்தால் சுகம்தான் ஏதோ ஏதோ

தேவன் மகனோ மதனோ தழுவும் காதலன்
பௌர்ணமி இரவில் சங்கீதம் பாட வந்தானோ

ஆயிரம் தீபங்கள் ஏற்றிய ராத்திரி
ஆணைகள் அம்பாரி தாங்க
ராஜனும் ராணியும் ஊர்வலம் போய்வர
வெண்மேகம் பன்னீரைத் தூவ
ஆசைகளை விழி பேச ஜாடைகளின் மொழி பேச
தொடங்கும் தொடரும் காதல் யாகம்

தேவன் மகளோ மலரோ உலவும் தேவதை
பௌர்ணமி இரவில் இந்நாளில் பவனி வந்தாளோ
பௌர்ணமி இரவில் சங்கீதம் பாட வந்தானோ
பௌர்ணமி இரவில் இந்நாளில் பவனி வந்தாளோ

தேவனே எந்தன் தேவனே - மறக்கமாட்டேன்

பாடல்: தேவனே எந்தன் தேவனே
திரைப்படம்: மறக்கமாட்டேன்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகி
இசை: கங்கை அமரன்


தேவனே எந்தன் தேவனே
மலர் தூவும் நாள் தானோ
தேவனே எந்தன் தேவனே
மலர் தூவும் நாள் தானோ
அணை மீறலாம் நதியாகியே
தினம் காணலாம் சுகமே
தேவதை இளம் தேவதை
மலர் சூடும் நாள் தானே

பார்க்காதே சாமியே தாங்காது பூமியே
ராக்காலம் பூங்குயில் கூவாமல் போகுமோ
வான்மீது வெண்முகில் ஆடாதோ ஆண்மயில்
மான்சூட பூச்சரம் நான் வாங்கும் நாள் வரும்
வா வா வா பொன்நாளே வா மண்மேலே நீதான்

தேவனே எந்தன் தேவனே
மலர் தூவும் நாள் தானோ
தேவதை இளம் தேவதை
மலர் சூடும் நாள் தானே

தேனூறும் தேகமே நீ தீண்டும் நேரமே
நாம் சேர்ந்து வாழவே நீ ஏந்து மாலையே
தூவாதோ தேன்மழை தீராதோ தீ அலை
தூங்காத ராத்திரி நீ வந்து ஆதரி
வா வா வா பொன்மானே வா மண்மேலே நீதான்

தேவதை இளம் தேவதை
மலர் சூடும் நாள் தானே
ஒளி பாயலாம் வழி மீதிலே
இனி காணலாம் நலமே

தேவனே எந்தன் தேவனே
மலர் தூவும் நாள் தானோ
தேவதை இளம் தேவதை
மலர் சூடும் நாள் தானே

அந்தியில் சந்திரன் வருவதேன் - என்ன தவம் செய்தேன்

பாடல்: அந்தியில் சந்திரன் வருவதேன்
திரைப்படம்: என்ன தவம் செய்தேன்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & வாணி ஜெயராம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்


அந்தியில் சந்திரன் வருவதேன்
அது ஆனந்த போதையைத் தருவதேன்
சந்திரன் வருவது ஒளி தர
அது தமிழுக்கு ஆயிரம் கவி தர

அந்தியில் சந்திரன் வருவதேன்
அது ஆனந்த போதையைத் தருவதேன்
சந்திரன் வருவது ஒளி தர
அது தமிழுக்கு ஆயிரம் கவி தர

இலைகளில் இளந்தென்றல் படிப்பதென்னவோ
அது இலையென்று தெரியாத குழப்பமல்லவோ
அது இலையென்று தெரியாத குழப்பமல்லவோ
மலைகளில் வெண்மேகம் விழுவதென்னவோ
மலைகளில் வெண்மேகம் விழுவதென்னவோ
அது மரியாதை பொன்னாடை தருவதல்லவோ
அது மரியாதை பொன்னாடை தருவதல்லவோ

அந்தியில் சந்திரன் வருவதேன்
அது ஆனந்த போதையைத் தருவதேன்

பெண் மனம் ஒன்றோடு இணைவதென்னவோ
அது பிழையாக இருந்தாலும் இருக்குமல்லவோ
அது பிழையாக இருந்தாலும் இருக்குமல்லவோ
சம்மதம் தருவதில் தொல்லை என்னவோ
சம்மதம் தருவதில் தொல்லை என்னவோ
அதை தானாக கேளாது பெண்மை அல்லவோ
அதை தானாக கேளாது பெண்மை அல்லவோ

அந்தியில் சந்திரன் வருவதேன்
அது ஆனந்த போதையைத் தருவதேன்

தலைவனின் சந்தோஷம் தலைவனல்லவோ
அது இருபேரும் நினைத்தால்தான் பிறக்குமல்லவோ
அது இருபேரும் நினைத்தால்தான் பிறக்குமல்லவோ
இதுவரை என் கேள்வி புரிந்ததல்லவோ
இதுவரை என் கேள்வி புரிந்ததல்லவோ
சரி இத்தோடு உன் கேள்வி முடிந்ததல்லவோ
சரி இத்தோடு உன் கேள்வி முடிந்ததல்லவோ

அந்தியில் சந்திரன் வருவதேன்
அது ஆனந்த போதையைத் தருவதேன்

பள்ளியிலே வெள்ளிநிலா - கலியுகம்

பாடல்: பள்ளியிலே வெள்ளிநிலா
திரைப்படம்: கலியுகம்
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
இசை: சந்திரபோஸ்


பள்ளியிலே வெள்ளிநிலா பள்ளியிலே வெள்ளிநிலா
பார்க்கும் போது நேற்று வாழ்ந்த பழைய ஞாபகம்
வந்து வந்து போவதிங்கு என்ன நாடகம்
பள்ளியிலே வெள்ளிநிலா பள்ளியிலே வெள்ளிநிலா

அந்த நாள் பார்த்தது ஆனந்த இரவு
இந்த நாள் பார்ப்பது ஆசையின் கனவு
என் தோள்களில் நீ இல்லையே
தாலாட்டிடும் தாயும் இல்லையே
அன்னை பிள்ளை சொந்தம் போகுமா
பள்ளியிலே வெள்ளிநிலா பள்ளியிலே வெள்ளிநிலா

வானுக்கும் பூமிக்கும் பாதைகள் அமைத்தேன்
வாழ்க்கைக்கும் தேவைக்கும் ஆசைகள் விதைத்தேன்
தீபாவளி இருளானதே சூராவளி உருவானதே
பாடும் ராகம் கேட்கவில்லையா

பள்ளியிலே வெள்ளிநிலா பள்ளியிலே வெள்ளிநிலா
பார்க்கும் போது நேற்று வாழ்ந்த பழைய ஞாபகம்
வந்து வந்து போவதிங்கு என்ன நாடகம்
பள்ளியிலே வெள்ளிநிலா பள்ளியிலே வெள்ளிநிலா

ஒரு புல்லாங்குழல் - உனக்காக ஒரு ரோஜா

பாடல்: ஒரு புல்லாங்குழல்
திரைப்படம்: உனக்காக ஒரு ரோஜா
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
இசை: டி.ஆர்.ராஜேந்தர்


ஒரு புல்லாங்குழல் ஊமையானது
ஒரு பூவின் மணம் காயமானது
ஒரு புல்லாங்குழல் ஊமையானது
ஒரு பூவின் மணம் காயமானது
வானில் தோன்றும் மின்னல் போல
வாழ்வில் கொண்ட காதல் கலைய
விதிதானே சதி செய்தது
இவள் மதிதானே தடுமாறுது
விதிதானே சதி செய்தது
இவள் மதிதானே தடுமாறுது

ஒரு புல்லாங்குழல் ஊமையானது
ஒரு பூவின் மணம் காயமானது

சேலை அணிந்த மாது சோலை என்னும் போது
அவன் தானே அவள் தேடும் காத்து
காத்து அவனை நினைத்து காத்துக்கிடந்த போது
போனானே வேறு சோலை பாத்து
இனிக்கின்ற வசந்தம் இழந்தாளே சொந்தம்
இனிக்கின்ற வசந்தம் இழந்தாளே சொந்தம்
கோலம் கலைந்த வாசல் இவள்
மேகம் சூழ்ந்த நிலவு இவள்

ஒரு புல்லாங்குழல் ஊமையானது
ஒரு பூவின் மணம் காயமானது

நீலம் சிந்தும் நயனம் நீரில் ஆடும் துயரம்
ஸ்ருதி மாற தவிக்கின்ற ராகம்
அவனை பாதை என்று நினைத்த பாவை பயணம்
வழி மாற தடுமாறும் பாதம்
எழில் கொஞ்சும் மாடம் ஏற்றாளே சோகம்
எழில் கொஞ்சும் மாடம் ஏற்றாளே சோகம்
வார்த்தை தொலைந்த கவிதை இவள்
வாழ்க்கை குலைந்த பேதை இவள்

ஒரு புல்லாங்குழல் ஊமையானது
ஒரு பூவின் மணம் காயமானது
வானில் தோன்றும் மின்னல் போல
வாழ்வில் கொண்ட காதல் கலைய
விதிதானே சதி செய்தது
இவள் மதிதானே தடுமாறுது
ஒரு புல்லாங்குழல் ஊமையானது
ஒரு பூவின் மணம் காயமானது

ஆகாய வெண்ணிலாவே - அரங்கேற்ற வேளை

பாடல்: ஆகாய வெண்ணிலாவே
திரைப்படம்: அரங்கேற்ற வேளை
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & உமா ரமணன்
இசை: இளையராஜா


ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
மலர் சூடும் கூந்தலே மழைக்கால மேகமாய் கூட
உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் ஒன்று
பூவாரம் சூடிக்கொண்டு தலைவாசல் வந்ததின்று
தென்பாண்டி மன்னன் என்று திருமேனி வண்ணம் கண்டு
மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று
இளநீரும் பாலும் தேனும் இதழோரம் வாங்கவேண்டும்
கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்கவேண்டும்
கடல் போன்ற ஆசையில் மடல்வாழை மேனிதான் ஆட
நடு ஜாம வேளையில் நெடுநேரம் நெஞ்சமே கூட

ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
மலர் சூடும் கூந்தலே மழைக்கால மேகமாய் கூட
உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

தேவாதி தேவர் கூட்டம் துதிபாடும் தெய்வ ரூபம்
பாதாதி கேசம் எங்கும் ஒளிவீசும் கோயில் தீபம்
வாடாத பாரிஜாதம் நடைபோடும் வண்ண பாதம்
கேளாத வேணுகானம் கிளிப்பேச்சில் கேட்கக்கூடும்
அடியாளின் ஜீவன் மேவி அதிகாரம் செய்வதென்ன
அலங்கார தேவதேவி அவதாரம் செய்ததென்ன
இசைவீணை வாடுதோ இதமான கைகளே மீட்ட
ஸ்ருதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
மலர் சூடும் கூந்தலே மழைக்கால மேகமாய் கூட
உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

காற்றில் எந்தன் கீதம் - ஜானி

பாடல்: காற்றில் எந்தன் கீதம்
திரைப்படம்: ஜானி
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே
அலை போல நினைவாக
சில்லென்று வீசும் மாலை
நேரக்காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே

எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட
என்னுள்ள வீணை ஒரு ராகம் தேட
அன்புள்ள நெஞ்சை காணாதோ
ஆனந்த ராகம் பாடாதோ
கண்கள் ஏங்க நெஞ்சின் தாபம் மேலும் ஏற்றும்
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே

நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும்
நீங்காத நெஞ்சில் அலை ஓய்ந்தால் போதும்
மோனத்தில் ராகம் கேளாதோ
மௌனத்தில் தாளம் போடாதோ
வாழும் காலம் யாவும் இங்கே நெஞ்சம் தேடும்

காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே
அலை போல நினைவாக
சில்லென்று வீசும் மாலை
நேரக்காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே

Friday, June 21, 2013

இது பால் வடியும் முகம் - அன்புள்ள அப்பா

பாடல்: இது பால் வடியும் முகம்
திரைப்படம்: அன்புள்ள அப்பா
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.பி.ஷைலஜா
இசை: ஷங்கர் கணேஷ்


இது பால் வடியும் முகம்
இதை பார்ப்பதுதான் சுகம்
இது கனவா உண்மையா
அட இதுதான் பெண்மையா

இது பால் வடியும் முகம்
இதை பார்ப்பதுதான் சுகம்
இது கனவா உண்மையா
அட இதுதான் ஆண்மையா

ஆடைகள் நூலுக்கு சொந்தம்
ஆசைகள் வாழ்வுக்கு சொந்தம்
வானுக்கு சூரியன் சொந்தம்
வார்த்தைகள் பாஷைக்கு சொந்தம்
நீ என் சொந்தம் நான் உன் சொந்தம்
தந்தம் யானைக்குத்தானே சொந்தம்

இது பால் வடியும் முகம்
இதை பார்ப்பதுதான் சுகம்
இது கனவா உண்மையா
அட இதுதான் ஆண்மையா

பொன்னுக்கு நீ நிறம் தந்தாய்
பூவுக்கு புன்னகை தந்தாய்
வீணைக்கு நாதங்கள் தந்தாய்
என் விரலுக்கு மோதிரம் தந்தாய்
என்னைத் தந்தேன் உன்னைத் தந்தாய்
காதல் சொர்க்கங்கள் கண்ணில் தந்தாய்

இது பால் வடியும் முகம்
இதை பார்ப்பதுதான் சுகம்
இது கனவா உண்மையா
அட இதுதான் பெண்மையா

இது பால் வடியும் முகம்
இதை பார்ப்பதுதான் சுகம்
இது கனவா உண்மையா
அட இதுதான் ஆண்மையா

லல லா லல லா லலா
லல லா லல லா லலா
லல லாலா லா லல்

ஹலோ மை டியர் - மன்மத லீலை

பாடல்: ஹலோ மை டியர்
திரைப்படம்: மன்மத லீலை
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எல்.ஆர்.ஈஸ்வரி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்


ஹலோ...ஹலோ
ஹலோ மை டியர் ராங் நம்பர்
ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கற்பனை ஓராயிரம் கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தால் என்ன

ஹலோ...ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்பத்தில் தீரும் உங்கள் தாகம்
நேரிலே பார்த்தால் என்ன லாபம்
கேட்பத்தில் தீரும் உங்கள் தாகம்
நேரிலே பார்த்தால் என்ன லாபம்
அற்புதம் ஏதும் இல்லை
அதிசய பெண்மை இல்லை

ஹலோ...ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்பத்தில் தீரும் உங்கள் தாகம்
நேரிலே பார்த்தால் என்ன லாபம்

காவிரியின் மீனோ...no
பூவிரியும் தேனோ...no no
காவிரியின் மீனோ பூவிரியும் தேனோ
தேவமகள் தானோ தேடி வரலாமோ
Not yet
பூவை என்னைப் பார்த்தால் காதல் வரக்கூடும்
Really
பூவை என்னைப் பார்த்தால் காதல் வரக்கூடும்
பூஜையறை பார்க்கும் ஆசை வரக்கூடும்
I don't mind

கற்பனை ஓராயிரம் கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தால் என்ன
ஹலோ...ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்

உன்னிடத்தில் காதல் உள்ளவர்கள் யாரோ
என்னவென்று சொல்வேன் உன்னையன்றி யாரோ
வேலி உள்ள முல்லை வேலி எனக்கில்லை
வேலி உள்ள முல்லை வேலி எனக்கில்லை
பொறுமையுடன் இருங்கள்
முதுமை வரும் வரையோ

ஹலோ...ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கற்பனை ஓராயிரம் கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தால் என்ன
ஹலோ...ஹலோ

அழகாகச் சிரித்தது - டிசம்பர் பூக்கள்

பாடல்: அழகாகச் சிரித்தது
திரைப்படம்: டிசம்பர் பூக்கள்
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


அழகாகச் சிரித்தது அந்த நிலவு
அதுதான் இதுவோ
அனலாகக் கொதித்தது இந்த மனது
இதுதான் வயதோ

மழைக்காலத்தில்...லல லல லா
நிழல் மேகங்கள்...லல லல லா
மலையோரத்தில்...லல லல லா
சிறு தூறல்கள்...லல லல லா
இளவேனிற்காலம் ஆரம்பம்
லல லல லல லல

அழகாகச் சிரித்தது அந்த நிலவு
அதுதான் இதுவோ
அனலாகக் கொதித்தது இந்த மனது
இதுதான் வயதோ

மழைக்காலத்தில்...லல லல லா
நிழல் மேகங்கள்...லல லல லா
மலையோரத்தில்...லல லல லா
சிறு தூறல்கள்...லல லல லா
இளவேனிற்காலம் ஆரம்பம்
லல லல லல லல

அழகாகச் சிரித்தது அந்த நிலவு
அதுதான் இதுவோ
அனலாகக் கொதித்தது இந்த மனது
இதுதான் வயதோ

நதியே நீராடத்தான் உன்னை அழைத்தேன்
பூவே நான் சூடத்தான் நாள் பார்த்தேன்
நாணல் நானாகத்தான் காத்துக் கிடந்தேன்
காற்றே உனைப் பார்த்ததும் கை சேர்த்தேன்
மானே உன் அழகினில் நானே
ஓவியம் வரைந்தேனே கண் ஜாடை சொல்ல
நானே என் இதயத்தை தானே
எடுத்துக் கொடுத்தேனே நீ சொந்தம் கொள்ள
பனி தூங்கும் ரோஜாவே
எனை வாங்கும் ராஜாவே
ஒரு நாள் திருநாள் இதுதான் வரவோ
நாணமென்ன அச்சமென்ன

அழகாகச் சிரித்தது அந்த நிலவு
அதுதான் இதுவோ
அனலாகக் கொதித்தது இந்த மனது
இதுதான் வயதோ

உன்னை நானல்லவோ கண்ணில் வரைந்தேன்
நாளும் என் ஓவியம் நீதானே
கண்ணே உன் கண்ணிலே செய்தி படித்தேன்
காதல் போராட்டமே நான் பார்த்தேன்
மோகம் பொங்கி வரும் தேகம்
கொண்டதொரு தாகம் நான் பெண்ணல்லவோ
நானும் கொஞ்சிட அது தீரும்
கட்டிலினில் இணை சேரும் என் கண்ணல்லவா
இளமாலைப் பொழுதாக
இரு நெஞ்சம் இனிதாக
இனிமை வழியும் இளமை இதுவோ
இரு விழி சிவந்திட

அழகாகச் சிரித்தது அந்த நிலவு
அதுதான் இதுவோ
அனலாகக் கொதித்தது இந்த மனது
இதுதான் வயதோ

Thursday, June 20, 2013

நான் நல்ல ரசிகன் - தேன் சிட்டுக்கள்

பாடல்: நான் நல்ல ரசிகன்
திரைப்படம்: தேன் சிட்டுக்கள்
பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன் & வாணி ஜெயராம்
இசை: விஜயரமணி


கயல்விழி காரிகையே
காவியத்தின் நாயகியே
மயில் கொடுத்த கழுத்தினிலே
மயங்க வைக்கும் பேரழகே
ஒயிலான இடை அசைய
ஓவியமாய் வந்தவளே
பறை அறியா நடை நடந்து
தென்றலென மிதப்பவளே

நான் நல்ல ரசிகன் நீ நல்ல ரசிகை
எழுந்து வா ஆடல் உண்டு
இசைந்து தா பாடல் ஒன்று
அச்சம் நாணம் இங்கே இன்னும் ஏனடி
மயக்கமா தயக்கமா மயக்கமா தயக்கமா

நான் நல்ல ரசிகை நீ நல்ல ரசிகன்
தொடங்க வா ஆடல் இங்கே
துணிந்து தா பாடல் ஒன்று
என்னை வெல்லும் மன்னன் இங்கே யாரைய்யா
மயக்கமா தயக்கமா மயக்கமா தயக்கமா

வண்ணம் பாடும் உள்ளம்
கன்னி உன்னை வெல்லும்
எந்தன் ராகம் தாளம் பல்லவி

வண்ணம் பாடும் உள்ளம்
என்னை என்ன செய்யும்
எங்கே ராகம் தாளம் பல்லவி

இது ஆட்டமா திண்டாட்டமா
சங்கீதமா சந்தேகமா
இது ஆட்டமா திண்டாட்டமா
சங்கீதமா சந்தேகமா
மயக்கமா தயக்கமா மயக்கமா தயக்கமா
நான் நல்ல ரசிகை நீ நல்ல ரசிகன்

தங்கப் பாதம் ஆடும்
மங்கை போடும் தாளம்
பாட்டுக்கு பரதக்கலை தோற்குமா

மங்கை ஆடும் போது
தங்கப் பாதம் நோகும்
பாட்டுக்கு பரதக்கலை தோற்குமே

இது ஆட்டமா திண்டாட்டமா
சங்கீதமா சந்தேகமா
இது ஆட்டமா திண்டாட்டமா
சங்கீதமா சந்தேகமா

Monday, June 17, 2013

தேரோட்டம் ஆனந்த - நூல்வேலி

பாடல்: தேரோட்டம் ஆனந்த செண்பகப்பூவாட்டம்
திரைப்படம்: நூல்வேலி
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்


தேரோட்டம் ஆனந்த செண்பகப்பூவாட்டம்
தேரோட்டம் ஆனந்த செண்பகப்பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் போராட்டம்

தேரோட்டம் ஆனந்த செண்பகப்பூவாட்டம்
தேரோட்டம் ஆனந்த செண்பகப்பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் போராட்டம்

ஹா...ஹா...ஆ ஆ ஆ ஆ
பொன்னாட்டம் அங்கு பெண்ணாட்டம்
என் கண்ணோட்டம் ஒரு வெள்ளோட்டம்
பொன்னாட்டம் அங்கு பெண்ணாட்டம்
என் கண்ணோட்டம் ஒரு வெள்ளோட்டம்
சின்னச்சின்ன நடை திண்டாட்டம்
அதைக் கண்டதும் நெஞ்சினில் கொண்டாட்டம்
சின்னச்சின்ன நடை திண்டாட்டம்
அதைக் கண்டதும் நெஞ்சினில் கொண்டாட்டம்

தேரோட்டம் ஆனந்த செண்பகப்பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் போராட்டம்

ஹா...ஆ ஆ ஆ ஆ...பூந்தோட்டம்
பூந்தோட்டம் கண்ட மானாட்டம்
பொன் வண்டாட்டம் இடும் தேனாட்டம்
பூந்தோட்டம் கண்ட மானாட்டம்
பொன் வண்டாட்டம் இடும் தேனாட்டம்
வண்ண வண்ண முகம் பாலாட்டம்
அந்த வஞ்சியின் மெல்லிடை நூலாட்டம்
வண்ண வண்ண முகம் பாலாட்டம்
அந்த வஞ்சியின் மெல்லிடை நூலாட்டம்

தேரோட்டம் ஆனந்த செண்பகப்பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் போராட்டம்

ஹா...ஆ ஆ ஆ ஆ
சேலாட்டம் விழி சீராட்டும்
இளந்தண்டாட்டம் உடல் பாராட்டும்
சேலாட்டம் விழி சீராட்டும்
இளந்தண்டாட்டம் உடல் பாராட்டும்
என்ன என்ன சுகம் உள்ளோட்டம்
எனை இந்திர லோகத்தில் தால்லாட்டும்
என்ன என்ன சுகம் உள்ளோட்டம்
எனை இந்திர லோகத்தில் தால்லாட்டும்

தேரோட்டம் ஆனந்த செண்பகப்பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் போராட்டம்
தேரோட்டம் ஆனந்த செண்பகப்பூவாட்டம்

Saturday, June 15, 2013

என்னுயிரே என்னுயிரே - உயிரே

பாடல்: என்னுயிரே என்னுயிரே
திரைப்படம்: உயிரே
பாடியவர்கள்: ஶ்ரீனிவாஸ் & சுஜாதா
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்


என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே ஹே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே
என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே ஹே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே ஹே

கண்கள் தாண்டிப் போகாதே
என் ஆருயிரே என் ஓருயிரே
ஒரு காதலிலே மொத்தம் ஏழு நிலை
இது எந்த நிலை என்று தோன்றவில்லை
என் ஆறறிவில் ரெண்டு காணவில்லை
என் ஆருயிரே...என் ஓருயிரே
வந்து சேர்ந்துவிடு என்னைச் சேரவிடு
இல்லை சாகவிடு

சூரியன் சந்திரன் வீழ்ந்தழிந்து போய்விடினும்
நம் காதலிலே வரும் ஜோதியிலே
இந்த பூமியிலே ஒளி கூட்டிடுவோம்
காதலர் கண்களே சந்திர சூரியன் ஆகாதோ

கைகள் நான்கும் தீண்டும் முன்னே
கண்கள் நான்கும் தீண்டிடுமே
மோகம் கொஞ்சம் முளை விடுமே
கண் பார்வை முதல் நிலையே
ஆருயிரே என்னுயிரே
உள்ளம் கொண்டது ஓர் மயக்கம்
இன்னுயிரே காதலில்
இரண்டாம் நிலைதான் பால் மயக்கம்
மெய் தீண்டும் நேசம் தொடங்கியதோ
இது காதலின் மூன்றாம் படி நிலையோ
என் உடல்வழி அமிர்தம் வழிகிறதோ
என் உயிர் மட்டும் புதுவித வலி கண்டதோ

என்னுயிரே என்னுயிரே உன்னை கொஞ்சம் தீண்டுவேன்
ஏழ்வகை காதலை எப்போதெங்கே தாண்டுவேன்
இதில் நான்காம் நிலையை அறிந்துவிட்டேன்
என் நறுமலரே உன்னை தொழுதுவிட்டேன்
என் சுயநிலை என்பதை இழந்துவிட்டேன்
அந்த சூரியன் எழும் திசை மறந்துவிட்டேன்

கண்கள் தாண்டிப் போகாதே
என் ஆருயிரே என் ஓருயிரே
ஒரு காதலிலே மொத்தம் ஏழு நிலை
நாம் இதுவரை கண்டது நான்கு நிலை
இனி என்ன நிலை என்று தோன்றவில்லை
என் ஆருயிரே...

என் உடல் பொருள் தந்தேன் சரண் புகுந்தேன்
என் உயிரை உனக்குள் ஊற்றி விட்டேன்
இதுதான் காதலின் ஐந்து நிலை
நான் உன் கையில் நீர்த்திவலை

என் உடல் பொருள் தந்தேன் சரண் புகுந்தேன்
என் உயிரை உனக்குள் ஊற்றி விட்டேன்
இதுதான் காதலின் ஐந்து நிலை
நான் உன் கையில் நீர்த்திவலை

ஒரு மோகத்தினால் வரும் பித்து நிலை
இது மோசமில்லை ஒரு முக்தி நிலை
ஒரு மோகத்தினால் வரும் பித்து நிலை
இது மோசமில்லை ஒரு முக்தி நிலை
நம் காதலிலே இது ஆறு நிலை

என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே ஹே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே
என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே ஹே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே ஹே

சூரியன் சந்திரன் வீழ்ந்தழிந்து போய்விடினும்
நம் காதலிலே வரும் ஜோதியிலே
இந்த பூமியிலே ஒளி கூட்டிடுவோம்
காதலர் கண்களே சந்திர சூரியன் ஆகாதோ

இந்த காதலில் மரணம்தான் ஏழு நிலை
இது இல்லையென்றால் அது தெய்வீக காதலில்லை
இந்த காதலில் மரணம்தான் ஏழு நிலை
இது இல்லையென்றால் அது காதலில்லை
உடல் மரிக்கின்ற காதல் மரிப்பதில்லை மரிப்பதில்லை
என் ஆருயிரே...என் ஓருயிரே
என் ஆருயிரே...என் ஓருயிரே

Wednesday, June 12, 2013

பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் - நினைவே ஒரு சங்கீதம்

பாடல்: பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன்
திரைப்படம்: நினைவே ஒரு சங்கீதம்
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா
பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா
அது உலவும் எந்தன் மனம் ஒரு வானம் பூங்காவனம்
புது மேகம் இவள் தேகம் அதில் மோதும் தினம் பலவித சுகம் தரும்
பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா

சேரும் காலம் தேடி தேகம் சிந்து பாடும்
தேவன் வந்து சேர தேவை சொல்லக் கூசும்
தோளில் ஒன்று கூட சோகம் மெல்ல ஓடும்
மேளம் தாளம் போட மோகம் மேலும் கூடும்
அங்கங்கள் உந்தன் சொந்தம் இன்பம் சிந்தும் அன்புசங்கம்
பாடல் ஒன்றைப் பாடும் நேரம் பாவை எண்ணம் வாடுதே
மாற வேண்டும் காதல் பாரம் மாலை ஒன்று மலரடி விழுந்திட
பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா

காற்றில் ஆடும் கூந்தல் காதல் சொல்லி ஆட
காதல் கொண்ட காமன் கைகள் வந்து கூட
தேகம் என்ற கோவில் பூஜை நேரம் தேட
தாகம் மோகம் பாட தாளம் ராகம் பாட
ஏதேதோ எண்ணம் வந்து சொல்லிச்சொல்லி என்னை கிள்ளி
ஏற்றும் இன்பம் கோடி கோடி ஏக்கம் தன்னை காட்டுதே
காற்றும் என்னை கூடி கூடி காதல் எனும் கனவுகள் கலந்திட

பகலிலே...பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா
அது உலவும் எந்தன் மனம் ஒரு வானம் பூங்காவனம்
புது மேகம் இவள் தேகம் அதில் மோதும் தினம் பலவித சுகம் தரும்
பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா

நான் இருக்கும் அந்த நாள் - அழியாத கோலங்கள்

பாடல்: நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
திரைப்படம்: அழியாத கோலங்கள்
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
நெஞ்சில் வாழும் பந்தமே சிந்து பாடும் சொந்தமே
வான் வரைக்கும் எண்ணமும் பறக்கும்
நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்

காலங்கள் யாவும் உன்னை கண்குளிர காணும்
கோலங்கள் தானே எந்தன் நிம்மதிக்கும் போதும்

காலங்கள் யாவும் உன்னை கண்குளிர காணும்
கோலங்கள் தானே எந்தன் நிம்மதிக்கும் போதும்
நீ வாழும் இதயம் முழுதும் ஏக்கங்கள் இல்லை தூக்கங்கள்
இனி என்னோடு...உன் எண்ணம்...ஒன்றாகும்

இனி என்ன...நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்

என் வாழ்வின் இன்பம் எல்லாம் நீ கொடுத்த எண்ணம்
ஏங்காமல் ஏங்கும் இங்கே பெண்மை என்ற வண்ணம்

என் வாழ்வின் இன்பம் எல்லாம் நீ கொடுத்த எண்ணம்
ஏங்காமல் ஏங்கும் இங்கே பெண்மை என்ற வண்ணம்
எங்கெங்கோ எனது மனது ஓடட்டும் இன்பம் பாடட்டும்
இனி ஏதோ...என் நெஞ்சில்...கூடட்டும்

இனி என்ன...நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
நெஞ்சில் வாழும் பந்தமே சிந்து பாடும் சொந்தமே
வான் வரைக்கும் எண்ணமும் பறக்கும்
நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்

Friday, June 7, 2013

உறக்கமில்லா இரவுகள் - ஸ்பரிசம்

பாடல்: உறக்கமில்லா இரவுகள்
திரைப்படம்: ஸ்பரிசம்
பாடியவர்கள்: முரளி & வாணி ஜெயராம்
இசை: ரவி


உறக்கமில்லா இரவுகள் இரக்கமில்லா உறவுகள்
உறக்கமில்லா இரவுகள் இரக்கமில்லா உறவுகள்
என் நினைவில் உனது அழகு முகம் அது சுகம்
கண் இமை நனைவது துயரம் எங்கே வசந்தம்
உறக்கமில்லா இரவுகள் இரக்கமில்லா உறவுகள்

கை அணைப்பினில் மெய் மறந்ததும்
பொய் சினத்தினில் மெய் கரைந்ததும்
கை அணைப்பினில் மெய் மறந்ததும்
பொய் சினத்தினில் மெய் கரைந்ததும்
கானல் நீரில் குளிக்கவா
வெறும் கனவுக்கனலில் குளிர் காயவா
உறக்கமில்லா இரவுகள் இரக்கமில்லா உறவுகள்

என் இதழில் பதித்ததென்ன ராகம்
ஏழிசையில் தணியுமோ இந்த தாகம்
என் இதழில் பதித்ததென்ன ராகம்
ஏழிசையில் தணியுமோ இந்த தாகம்
என் இதயம் உனது இந்த தனிமை சுடுவது அம்மம்மா
உதய ஒளி மழையில் சிறகு விரியும் என் கண்ணம்மா
என் இதயம் உனது இந்த தனிமை சுடுவது அம்மம்மா
உதய ஒளி மழையில் சிறகு விரியும் என் கண்ணம்மா

ஓர் நாள் பழக்கம் அல்ல - அண்ணி

பாடல்: ஓர் நாள் பழக்கம் அல்ல
திரைப்படம்: அண்ணி
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ்
இசை: கங்கை அமரன்


ஓர் நாள் பழக்கம் அல்ல
நான் நீ இருவர் அல்ல
காதல் பூத்தது கனியாய் கனிந்தது
காலம் வாய்த்தது கைமேல் விழுந்தது
வா வா...வா வா வா வா
ஓர் நாள் பழக்கம் அல்ல
நான் நீ இருவர் அல்ல

கோடாளி முடிச்சு போட்டு
கொண்டையைத்தான் மடிச்சிப்போட்டு
வாடாத மல்லியப்பூவு சிரிக்குறா
கண்ணுல வண்ணத்திப்பூச்சியாட்டம் பறக்குறா

ஏர் ஓட்ட மச்சக்கானி உண்டு
நீர் பாய்ச்ச ஆழக்கேணி உண்டு
வா புள்ள வயசுப்புள்ள ஆசை விடுமோ
ஏ மச்சான் இளைய மச்சான் ஏக்கம் வருமோ
பூவாடை பாவாடை பூவாடை பாவாடை காற்றில் வீச

ஓர் நாள் பழக்கம் அல்ல
நான் நீ இருவர் அல்ல

தை மாசம் மாலை போடப்போறேன்
நீ போட்டா நானும் கூட வாரேன்
பால் வச்சு பழமும் வச்சு பாய்தான் இடணும்
நான் வந்து நிக்கும் போது நீதான் தொடணும்
ஆனந்தம் ஆரம்பம் ஆனந்தம் ஆரம்பம் ஆகும் நேரம்

ஓர் நாள் பழக்கம் அல்ல
நான் நீ இருவர் அல்ல
காதல் பூத்தது கனியாய் கனிந்தது
காலம் வாய்த்தது கைமேல் விழுந்தது
வா வா...வா வா வா வா
ஓர் நாள் பழக்கம் அல்ல
நான் நீ இருவர் அல்ல

காதல் காதல் காதல் - காதல் காதல் காதல்

பாடல்: காதல் காதல் காதல்
திரைப்படம்: காதல் காதல் காதல்
பாடியவர்கள்: A.V.ரமணன் & உமா ரமணன்
இசை: ஷங்கர் கணேஷ்


காதல் காதல் காதல் என்று
கண்கள் சொல்வதென்ன
காதல் காதல் காதல் என்று
கண்கள் சொல்வதென்ன
ஒரு பன்னீரில் நீராடும் அன்னம்
ஒரு பன்னீரில் நீராடும் அன்னம்
இந்த பார்வை சொல்லாத
சொல்லேது இன்னும்
காதல் காதல் காதல் என்று
கண்கள் சொல்வதென்ன

தங்கங்கள் என்ன வைரங்கள் என்ன
அங்கங்கள் எங்கெங்கும் மின்னும் ஆ ஆ
சொல்லாததென்ன சொல்லுங்கள் மெல்ல
சொர்க்கத்தில் என் மேனி துள்ளும்
இனிய இரவிலே நிலவின் ஒளியிலே
அமுத மழையிலே நனையும் உயிர்களே
அந்திக்கலைகளை பயில்வது சுகமல்லவோ
காதல் காதல் காதல் என்று
கண்கள் சொல்வதென்ன

மும்தாஜும் நானல்லவோ
வண்டு மொய்க்காத தேனல்லவோ
மும்தாஜும் நானல்லவோ
வண்டு மொய்க்காத தேனல்லவோ
துள்ளும் கஸ்தூரி மானல்லவோ
உன்னைக்காணாத கண்ணென்னவோ
அந்த வானத்து முன்றாம் பிறை
நெற்றி வண்ணத்தில் நான் பார்க்கிறேன்
இன்பத்தை நான் கேட்கிறேன்

காதல் காதல் காதல் என்று
கண்கள் சொல்வதென்ன

நீல வானம் தந்த சீதனம்
அடடா விழியின் நிறமோ ஓ ஓ
நீந்தும் மேகம் தந்த சீதனம்
அதுதான் அசையும் குழலோ குழலோ

ஒடியும் இடை அசைய நெடிய குழல் சரிய
அழகு நடை பயிலும் அன்னமே
உனது விழிகள் எனை மதன கலை பயில
வருக வருகவென சொல்லுமே

கவிதை நடை அழகே வனிதை எனதுடலில்
விரக நினைவைத் தரும் மன்னவா
இரவு நிலவொளியில் இளமை உறவுகளின்
இனிய கதைகள் பல சொன்னவா

காதல் காதல் காதல் என்று
கண்கள் சொல்வதென்ன
காதல் காதல் காதல் என்று
கண்கள் சொல்வதென்ன

Wednesday, June 5, 2013

இசைபாடு நீ இளந்தென்றலே - இசைபாடும் தென்றல்

பாடல்: இசைபாடு நீ இளந்தென்றலே
திரைப்படம்: இசைபாடும் தென்றல்
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


இசைபாடு நீ இளந்தென்றலே
இளவேனில் தான் இந்நாளிலே
உருவாகும் சுகமான ராகம்
நான் கொண்ட காதல் நலமானது
பொட்டோடு பூச்சூடும் நாள்

இசைபாடு நீ இளந்தென்றலே
இளவேனில் தான் இந்நாளிலே

நெடுங்காலம் எதிர்பார்த்த என் தேவன் வந்தான்
நான் கேட்ட வரம் யாவும் தந்தான்
நெடுங்காலம் எதிர்பார்த்த என் தேவன் வந்தான்
நான் கேட்ட வரம் யாவும் தந்தான்
மணவாளன் கூட மடி ஊஞ்சல் ஆட
பாலோடு தேனும் விழி மீதில் ஓட
ஸ்ருதியும் லயமும் விலகாமல்
உறவாடும் பொழுதல்லவோ

இசைபாடு நீ இளந்தென்றலே
இளவேனில் தான் இந்நாளிலே

ஸா ஸ ஸ பா ப ப
ம ப ம ப கா க ம கா
க ம ப ம க ம க ம ரீ
ஸ ஸ ரீ ஸ ஸ ஸ ஸ கா
ஸ ஸ ரீ ஸ ஸ க ம பா
க ம ப த ப த ப த ப மா
க ம ப த ப த ப நி ஸா

யார் யார்க்கு யாரென்று தெய்வங்கள் சொல்லும்
அது தானே முடிவாக வெல்லும்
மனம் போல வாழ்வு எனை வந்து சேர
மகராஜன் கைகள் மாங்கல்யம் சூட
இரவும் பகலும் தொடர்கின்ற
ஆனந்தம் இதுவல்லவோ

இசைபாடு நீ இளந்தென்றலே
இளவேனில் தான் இந்நாளிலே
உருவாகும் சுகமான ராகம்
நான் கொண்ட காதல் நலமானது
பொட்டோடு பூச்சூடும் நாள்
இசைபாடு நீ இளந்தென்றலே

அதோ மேக ஊர்வலம் - ஈரமான ரோஜாவே

பாடல்: அதோ மேக ஊர்வலம்
திரைப்படம்: ஈரமான ரோஜாவே
பாடியவர்: மனோ (சுனந்தா)
இசை: இளையராஜா


அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே
இதோ காதல் ஊர்வலம் இதோ காமன் உற்சவம் இங்கே
ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன்
இதோ நான் உயிரினில் உனைச் சேர்த்தேன் வா
அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே

உனது பாதம் அடடட இளவம் பஞ்சு
நடக்கும் போது துடித்தது எனது நெஞ்சு
இரண்டு வாழைத் தண்டிலே ராஜகோபுரம்
நானும் இன்று கேட்கிறேன் உன்னை ஓர் வரம்
தேகம் தன்னை மூடவே கூந்தல் போதும் போதுமே
ஆடை என்ன வேண்டுமா நாணம் என்ன வா வா
அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே

குழலைப் பார்த்து முகிலென மயில்கள் ஆடும்
முகத்தைப் பார்த்து அடிக்கடி நிலவு தேயும்
தென்னம்பாண்டி முத்தைப்போல் தேவி புன்னகை
பந்து ஆடச்சொல்லுமே செண்டு மல்லிகை
உன்னைச்செய்த பிரம்மனே உன்னைப்பார்த்து ஏங்குவான்
காதல் பிச்சை வாங்குவான் இன்னும் என்ன சொல்ல

அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே
இதோ காதல் ஊர்வலம் இதோ காமன் உற்சவம் இங்கே
ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன்
இதோ நான் உயிரினில் உனைச் சேர்த்தேன் வா
அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே

ஆசை முகமே - என் வீடு என் கணவர்

பாடல்: ஆசை முகமே
திரைப்படம்: என் வீடு என் கணவர்
பாடியவர்: வாணி ஜெயராம்
இசை: B.சுரேந்தர்


ஆசை முகமே இங்கு உனக்காக ஒரு ஜீவன் பாட
நீலக்கடலில் எழும் அலைபோலே மனம் ஊஞ்சல் ஆட
மீண்டும் உனைச் சேர்ந்திட துடித்தேன்
வசந்தம் விளைய வா புதிய பொழுதுகள் விடிய
ஆசை முகமே இங்கு உனக்காக ஒரு ஜீவன் பாட

யாரைச் சொல்ல இறைவா அன்பில் என்ன குறைவா
பாதைவிட்டு நடந்தும் பாசம் வைத்த தலைவா
என்றும் இவள்தான் உந்தன் காவிய நாயகி இரவும் பகலும்
எனையே நினைத்தாய் நினைத்தே இளைத்தாய்
கண்ணான கண்ணா வா பிரிந்த உறவுகள் தொடர
ஆசை முகமே இங்கு உனக்காக ஒரு ஜீவன் பாட

தாயைப் போல இருப்பேன் தாவி உன்னை எடுப்பேன்
சேயைப் போல நினைத்து சேவை செய்யத் துடிப்பேன்
இவள் இதழ்தான் உந்தன் நோய்களைத் தீர்த்திடும் மருந்து விருந்து
நலம் நீ பெருக சுகம் நீ தருக
நீங்காமல் நாளும் நான் உனது நிழலென இருக்க

ஆசை முகமே இங்கு உனக்காக ஒரு ஜீவன் பாட
நீலக்கடலில் எழும் அலைபோலே மனம் ஊஞ்சல் ஆட
மீண்டும் உனைச் சேர்ந்திட துடித்தேன்
வசந்தம் விளைய வா புதிய பொழுதுகள் விடிய
ஆசை முகமே இங்கு உனக்காக ஒரு ஜீவன் பாட

Tuesday, June 4, 2013

அலைபாயும் காற்றே - பஞ்ச பூதம்

பாடல்: அலைபாயும் காற்றே
திரைப்படம்: பஞ்ச பூதம்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்: வாணி ஜெயராம்


அலைபாயும் காற்றே அருகே நீ வாராயோ
அலைபாயும் காற்றே அருகே நீ வாராயோ
இளம் மல்லிப்பூவில் விளையாட வாராயோ
இளம் மல்லிப்பூவில் விளையாட வாராயோ
ஓஓ ஓஓ...ஓஓஓஓ ஓஓஓஓ...ஓஓ ஓஓ
அலைபாயும் காற்றே அருகே நீ வாராயோ
இளம் மல்லிப்பூவில் விளையாட வாராயோ

மழைக்கால மேகங்கள் அழைக்கின்ற ராகங்கள்
மணிச்சங்கு ஓசை கண்டு புதுப்பாடல் பாடும் வண்டு
எங்கே உண்டு இங்கே உண்டு வாராய் இங்கே
ஓஓ ஓஓ...ஓஓஓஓ ஓஓஓஓ...ஓஓ ஓஓ
அலைபாயும் காற்றே அருகே நீ வாராயோ
இளம் மல்லிப்பூவில் விளையாட வாராயோ

ரதிதேவி நயனங்கள் மலர்மாறன் புருவங்கள்
விளைகின்ற காட்டில் இன்று எழிலான கலைமான் ஒன்று
ஆடல் கண்டு கூடல் கொள்ள வாராய் இங்கே
ஓஓ ஓஓ...ஓஓஓஓ ஓஓஓஓ...ஓஓ ஓஓ
அலைபாயும் காற்றே அருகே நீ வாராயோ
இளம் மல்லிப்பூவில் விளையாட வாராயோ