Monday, September 28, 2009

poove nee yaar solli - thaNiyaadha dhaagam

பாடல்: பூவே நீ யார் சொல்லி
திரைப்படம்: தணியாத தாகம்
இசை: A.A.ராஜ்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி

பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்
நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர்...புது மலர்

பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
இவள் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்
இவள் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர்...புது மலர்...பூவே

நீ கோவில் கொண்ட அந்த கண்ணனுக்கோ
நான்...என் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ
நீ கோவில் கொண்ட அந்த கண்ணனுக்கோ
நான்...என் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ
என் தேவன் தேரேறி வருகின்றான்
என் தேவன் தேரேறி வருகின்றான்
புன்னகையில் உன்னை அள்ளி தருகின்றான்

பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்
நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர்...புது மலர்...பூவே

கோவில் கலசம் போல் என் தேவி
கூந்தலில் ஆடிடும் உன் மேனி
கோவில் கலசம் போல் என் தேவி
இவள் கூந்தலில் ஆடிடும் உன் மேனி
பூவிலும் பூ அவள் பொன்மேனி
பூவிலும் பூ அவள் பொன்மேனி
இவள் புது உடல் தழுவிடும் என் மேனி

பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
இவள் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்
இவள் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர்...புது மலர்...பூவே

மார்கழி இளந்தென்றல் தாலாட்டு
என் மைவிழி மயங்கிட சீராட்டு
பூ போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு
இவள் பொன்னுடல் சிலிர்க்கட்டும் என் கரம்பட்டு
பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்
இவள் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர்
புது மலர்...புது மலர்...புது மலர்

http://www.esnips.com/doc/26e8a391-5049-46d9-a031-6441866c919b/Poove-Nee-Yaar-Solli

kaatru nadandhadhu - thuNai

பாடல்: காற்று நடந்தது
திரைப்படம்: துணை
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & வாணி ஜெயராம்

காற்று நடந்தது மெல்ல மெல்ல
காதல் கவிதைகள் சொல்ல சொல்ல
கண்கள் சிவந்தது என்ன என்ன
கன்னம் ரெண்டும் மின்ன மின்ன

காற்று நடந்தது மெல்ல மெல்ல
காதல் கவிதைகள் சொல்ல சொல்ல
கண்கள் சிவந்தது என்ன என்ன
கன்னம் ரெண்டும் மின்ன மின்ன
காற்று நடந்தது மெல்ல மெல்ல

மின்னல் நீ பெண்ணல்ல
என்னைப்பார் கண்ணல்ல
மேகம் பூ சுமக்க
இன்னும் தான் என்னென்ன
இன்றைக்கே சொல்லுங்கள்
கேட்டு நான் ரசிக்க
மின்னல் நீ பெண்ணல்ல
என்னைப்பார் கண்ணல்ல
மேகம் பூ சுமக்க
இன்னும் தான் என்னென்ன
இன்றைக்கே சொல்லுங்கள்
கேட்டு நான் ரசிக்க
உடல் தங்கமல்லவோ
அதில் தங்க எண்ணமோ
உடல் தங்கமல்லவோ
அதில் தங்க எண்ணமோ
மரகத மாணிக்க மேடை எங்கே

காற்று நடந்தது மெல்ல மெல்ல
காதல் கவிதைகள் சொல்ல சொல்ல
கண்கள் சிவந்தது என்ன என்ன
கன்னம் ரெண்டும் மின்ன மின்ன
காற்று நடந்தது மெல்ல மெல்ல

வெயில் காலம் வரும் நேரம்
குளிர் ஊட்டும் சாதனமா
தளிர் தேகம் குளிர் காலம்
ஒரு போர்வை ஆகட்டுமா
இளவேனில் வரும் மலர் தூவி விடும்
இளவேனில் வரும் மலர் தூவி விடும்
இளமைகள் அரங்கம் ஏறலாம்

காற்று நடந்தது மெல்ல மெல்ல
காதல் கவிதைகள் சொல்ல சொல்ல
கண்கள் சிவந்தது என்ன என்ன
கன்னம் ரெண்டும் மின்ன மின்ன
காற்று நடந்தது மெல்ல மெல்ல மெல்ல

சொந்தத்தில் உன்னைத்தா
சந்தங்கள் சொல்லித்தா
நானும் பாடுகிறேன்
முத்தம் தான் சந்தங்கள்
நித்தம் நீ கற்றுக்கொள்
கேட்கும் அதிசய ராகம்
சொந்தத்தில் உன்னைத்தா
சந்தங்கள் சொல்லித்தா
நானும் பாடுகிறேன்
முத்தம் தான் சந்தங்கள்
நித்தம் நீ கற்றுக்கொள்
கேட்கும் அதிசய ராகம்
இன்று பாட்டின் பல்லவி
அது போதும் கண்மணி
இன்று பாட்டின் பல்லவி
அது போதும் கண்மணி
சரணங்கள் நாளைக்கு
பார்ப்போம் கண்ணா

காற்று நடந்தது மெல்ல மெல்ல
காதல் கவிதைகள் சொல்ல சொல்ல
கண்கள் சிவந்தது என்ன என்ன
கன்னம் ரெண்டும் மின்ன மின்ன
லால லல லல லால லாலா
லால லல லல லால லாலா
லால லல லல லால லாலா

thalaivi thalaivi - mogana punnagai

பாடல்: தலைவி தலைவி
திரைப்படம்: மோகனப்புன்னகை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்

தலைவி தலைவி என்னை நீராட்டும் ஆனந்த அருவி
தலைவி தலைவி என்னை நீராட்டும் ஆனந்த அருவி
தலைவன் தலைவன் என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்
தலைவன் தலைவன் என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்
தலைவி தலைவி என்னை நீராட்டும் ஆனந்த அருவி

விரசம் எதுவுமின்றி சரசம் பயிலும்
இந்த வேடிக்கை நீடிக்குமோ
விரசம் எதுவுமின்றி சரசம் பயிலும்
இந்த வேடிக்கை நீடிக்குமோ
விளக்கம் எதற்கு இன்னும் நெருக்கம் வளர்ந்த
பின்னும் ஏனிந்த சந்தேகமோ
விளக்கம் எதற்கு இன்னும் நெருக்கம் வளர்ந்த
பின்னும் ஏனிந்த சந்தேகமோ
இது பெண்ணோடு உண்டானது
அது கூடாது பொல்லாதது

தலைவன் தலைவன் என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்

ரதியும் மதனும் தென்றல் ரதத்தில் உலவி
வந்து பூவாரம் போட்டாரம்மா
ரதியும் மதனும் தென்றல் ரதத்தில் உலவி
வந்து பூவாரம் போட்டாரம்மா
ரசனை மிகுந்த இந்த ரசிகன் இருக்க
கண்டு யாரென்று கேட்டாரய்யா
ரசனை மிகுந்த இந்த ரசிகன் இருக்க
கண்டு யாரென்று கேட்டாரய்யா
அது நானென்று யார் சொன்னது
அதை நானன்றி யார் சொல்வது

தலைவி தலைவி என்னை நீராட்டும் ஆனந்த அருவி தலைவன்
தலைவன் என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்

konjum malar manjam - janani

பாடல்: கொஞ்சும் மலர் மஞ்சம்
திரைப்படம்: ஜனனி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்

கொஞ்சும் மலர் மஞ்சம் அதில் தஞ்சம் இரு நெஞ்சம்
இங்கு வாராயோ நீ என் உயிரே
தங்கம் உனதங்கம் அதில் எங்கும் இசை பொங்கும்
அதை தாராயோ நான் இன்புறவே

கொஞ்சும் மலர் மஞ்சம் அதில் தஞ்சம் இரு நெஞ்சம்
இங்கு வாராயோ நீ என் உயிரே
தங்கம் உனதங்கம் அதில் எங்கும் இசை பொங்கும்
அதை தாராயோ நான் இன்புறவே
உன் மேனி நாதஸ்வரம் அதில் உருவாகும் ஏழு ஸ்வரம்

நான் ஆட எந்தன் மணிச்சதங்கை ஆடும்
நீ ஒரு தேவதை நாட்டிய தாரகை
நூலாக எந்தன் இடை மெலிந்து போகும்
இடை என்ன இறைவனா உள்ளதா இல்லையா
வானூரும் வண்ணம் மணிப்புறா உன் தேகம்
ஆடிடும் பாடிடும் ஆனந்தம் தேடிடும்
நாள்தோறும் என்மேல் மலர்ச்சிறகை மூடும்
தழுவிடும் நழுவிடும் அது தரும் புது சுகம்
வான் நிலவொளி பரவிடும் பால் மழையதில் பொழிந்திடும்
பார் இனிமைகள் துளிர்விடும் வா இளமைகள் பறந்திடும்
நாள் பார்த்து பாய் போடவா...அந்த நாள் தேடி நான் வாடவா

பொங்கும் புது இன்பம் இனி எங்கும் ஆரம்பம்
இங்கு வாராயோ நீ என் உயிரே
எங்கும் மலர் பொங்கும் மகரந்தம் தேன் சிந்தும்
அதை தாராயோ நான் இன்புறவே
நதியாக நான் ஆடினேன் தாகம் தணியாமல் நான் வாடினேன்

தீயாக உடல் கொதிப்பெழுந்து நோகும்
நான் உனை தழுவிடும் நாள்வரை பொறுத்திடு
போராடும் இளம் உடல் இரண்டும் கூடும்
வேர்வையின் போர்வையில் வேள்விகள் துவங்கிடும்
பால் அருவியில் குளித்திட நான் தினம் உனை அழைத்திட
நீ தனிமையில் அணைத்திட நான் ஒரு கணம் சிலிர்த்திட
தேனூற்று நீராட்டுது...நம்மை பூங்காற்று தாலாட்டுது

கொஞ்சும் மலர் மஞ்சம் அதில் தஞ்சம் இரு நெஞ்சம்
இங்கு வாராயோ நீ என் உயிரே
தங்கம் உனதங்கம் அதில் எங்கும் இசை பொங்கும்
அதை தாராயோ நான் இன்புறவே
அதை தாராயோ நான் இன்புறவே
அதை தாராயோ நான் இன்புறவே

malar manjangaL - saatchi

பாடல்: மலர் மஞ்சங்கள்
திரைப்படம்: சாட்சி
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: எஸ்.என்.சுரேந்தர் & வாணி ஜெயராம்

மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்
இள முத்தங்கள் இடும் சத்தங்கள்
இதழா இது...இடையா இது
ராவோடு பாய்போடு
விடியும் வரையில் நிலவில் நனையும்

மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்
இள முத்தங்கள் இடும் சத்தங்கள்
இதழா இது...இடையா இது
ராவோடு பாய்போடு
விடியும் வரையில் நிலவில் நனையும்
மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்
இள முத்தங்கள் இடும் சத்தங்கள்

மேலாடை மூடும் பாலாடை தேகம்
தரை மீது நிலவாக உலவும்
நீராடும் காலம் நீ காணும் நேரம்
நூலாடை தானாக நழுவும்
ஒளி வீசும் கூந்தல் உடையாகாதோ
காற்றில் அதுவும் கலைந்திடாதோ

மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்
இள முத்தங்கள் இடும் சத்தங்கள்
இதழா இது...இடையா இது
ராவோடு பாய்போடு
விடியும் வரையில் நிலவில் நனையும்
மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்
இள முத்தங்கள் இடும் சத்தங்கள்

நீ சூடும் பூக்கள் என் பேரைச் சொல்லும்
உறங்காமல் உன் நெஞ்சில் உருகும்
கண்ணாடி முன்னால் நான் சென்று நின்றால்
உன் பிம்பம் தான் அங்கு தெரியும்
மலர் சோலைக்குள்ளே மழை வாராதோ
மழையை மழையே நனைத்திடுமோ

மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்
இள முத்தங்கள் இடும் சத்தங்கள்
இதழா இது...ம்ம் இடையா இது...ம்ம்
ராவோடு பாய்போடு
விடியும் வரையில் நிலவில் நனையும்
மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்
இள முத்தங்கள் இடும் சத்தங்கள்

moovagai paalil - aththi pooththadhu

பாடல்: மூவகை பாலில்
திரைப்படம்: அத்தி பூத்தது
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
 
மூவகை பாலில் மூன்றாம் பால்தான் இன்பம்
அந்த மூன்றாம் பாலில் தோன்றுவதே உன் பிம்பம்
மூவகை பாலில் மூன்றாம் பால்தான் இன்பம்
அந்த மூன்றாம் பாலில் தோன்றுவதே
உன் பிம்பம்...இன்பம்...பிம்பம்

ஏழ்வகை பிறப்பில் எல்லா பிறப்பிலும் சொந்தம்
ஏழ்வகை பிறப்பில் எல்லா பிறப்பிலும் சொந்தம்
அந்த சொந்தத்தினாலே வந்ததன்றோ இந்த பந்தம்
வந்ததன்றோ இந்த பந்தம்

தாழை மடலின் வாசம்
தினம் தாங்கிடும் பூங்குழல் மேகம்
தங்கப்பேழையின் வண்ணம் கன்னம்
அதில் பதித்திட வேண்டும் சின்னம்

கோவை இதழின் ஓரம்
பல கோலங்கள் தீட்டிடும் நேரம்
வண்ணப்பாவையின் அங்கம் மின்னும்
இரு பாதங்கள் நாணத்தில் பின்னும்

மூவகை பாலில் மூன்றாம் பால்தான் இன்பம்
அந்த மூன்றாம் பாலில் தோன்றுவதே
உன் பிம்பம்...இன்பம்...பிம்பம்

நாதன் உறவைத் தேடும்
இரு நேத்திரம் கீர்த்தனம் பாடும்
இந்த மாதவன் கொஞ்சும் பிள்ளை
தினம் மடியினில் ஆடும் முல்லை

காமன் கணைகள் பாய
இளங்கோதை என் தோள்களில் சாய
கட்டில் காவியம் கண்கள் சொல்லும்
அது கம்பன் பாட்டையும் வெல்லும்

மூவகை பாலில் மூன்றாம் பால்தான் இன்பம்
அந்த மூன்றாம் பாலில் தோன்றுவதே
உன் பிம்பம்...இன்பம்...பிம்பம்

thogai pullaankuzhal - iLanjOdigaL

பாடல்: தோகை புல்லாங்குழல்
திரைப்படம்: இளஞ்சோடிகள்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

தோகை புல்லாங்குழல் தேகம் ரோஜா இதழ்
தோகை புல்லாங்குழல் தேகம் ரோஜா இதழ்
ஏழிசை பாட்டு இளமையில் மீட்டு
இன்பத்தின் எல்லைக்கு போவோம் இன்று

தோகை புல்லாங்குழல் தேகம் ரோஜா இதழ்
தோகை புல்லாங்குழல் தேகம் ரோஜா இதழ்
ஏழிசை பாட்டு இளமையில் மீட்டு
இன்பத்தின் எல்லைக்கு போவோம் இன்று

தோகை புல்லாங்குழல் தேகம் ரோஜா இதழ்

மல்லிகையை வண்டு வந்து பெண் பார்க்கும்
பொன்மாலை வரும் வந்தவுடன் கல்யாணம்
மொட்டு மல்லி கட்டவிழ்ந்த சந்தோஷம்
வண்டு முன்னும் பின்னும் பாடுதங்கு சங்கீதம்

தினம் மாலை வேளையில்
ராஜலீலைகள் நாமும் காண்போமா
தினம் மாலை வேளையில்
ராஜலீலைகள் நாமும் காண்போமா
பனிமழைக்காலம் பௌர்ணமி நேரம்
நீ வரவேண்டும் அந்தப்புரம்
பனிமழைக்காலம் பௌர்ணமி நேரம்
நீ வரவேண்டும் அந்தப்புரம்

தோகை புல்லாங்குழல் தேகம் ரோஜா இதழ்
தோகை புல்லாங்குழல் தேகம் ரோஜா இதழ்
ஏழிசை பாட்டு இளமையில் மீட்டு
இன்பத்தின் எல்லைக்கு போவோம் இன்று

தோகை புல்லாங்குழல் தேகம் ரோஜா இதழ்

செம்பவளம் என்ன விலை முத்தோடு
பூச்செண்டு ரெண்டுக்கென்ன விலை கொத்தோடு
முத்த விலை நித்தம் ஒரு தாலாட்டு
அதில் பத்து விரல் சித்திரங்கள் நீ தீட்டு

அடி இன்று மாத்திரம் காமசூத்திரம்
சொன்னால் ஆகாதோ
அடி இன்று மாத்திரம் காமசூத்திரம்
சொன்னால் ஆகாதோ

இளங்கலைப்பாடம் எதுவரை போகும்
என்பதை கொஞ்சம் சொல்லுங்களேன்
இளங்கலைப்பாடம் எதுவரை போகும்
என்பதை கொஞ்சம் சொல்லுங்களேன்

தோகை புல்லாங்குழல் தேகம் ரோஜா இதழ்
ஏழிசை பாட்டு இளமையில் மீட்டு
இன்பத்தின் எல்லைக்கு போவோம் இன்று
தோகை புல்லாங்குழல் தேகம் ரோஜா இதழ்
தோகை புல்லாங்குழல் தேகம் ரோஜா இதழ்