Monday, September 28, 2009

malar manjangaL - saatchi

பாடல்: மலர் மஞ்சங்கள்
திரைப்படம்: சாட்சி
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: எஸ்.என்.சுரேந்தர் & வாணி ஜெயராம்

மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்
இள முத்தங்கள் இடும் சத்தங்கள்
இதழா இது...இடையா இது
ராவோடு பாய்போடு
விடியும் வரையில் நிலவில் நனையும்

மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்
இள முத்தங்கள் இடும் சத்தங்கள்
இதழா இது...இடையா இது
ராவோடு பாய்போடு
விடியும் வரையில் நிலவில் நனையும்
மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்
இள முத்தங்கள் இடும் சத்தங்கள்

மேலாடை மூடும் பாலாடை தேகம்
தரை மீது நிலவாக உலவும்
நீராடும் காலம் நீ காணும் நேரம்
நூலாடை தானாக நழுவும்
ஒளி வீசும் கூந்தல் உடையாகாதோ
காற்றில் அதுவும் கலைந்திடாதோ

மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்
இள முத்தங்கள் இடும் சத்தங்கள்
இதழா இது...இடையா இது
ராவோடு பாய்போடு
விடியும் வரையில் நிலவில் நனையும்
மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்
இள முத்தங்கள் இடும் சத்தங்கள்

நீ சூடும் பூக்கள் என் பேரைச் சொல்லும்
உறங்காமல் உன் நெஞ்சில் உருகும்
கண்ணாடி முன்னால் நான் சென்று நின்றால்
உன் பிம்பம் தான் அங்கு தெரியும்
மலர் சோலைக்குள்ளே மழை வாராதோ
மழையை மழையே நனைத்திடுமோ

மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்
இள முத்தங்கள் இடும் சத்தங்கள்
இதழா இது...ம்ம் இடையா இது...ம்ம்
ராவோடு பாய்போடு
விடியும் வரையில் நிலவில் நனையும்
மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்
இள முத்தங்கள் இடும் சத்தங்கள்

No comments: