Monday, September 28, 2009

moovagai paalil - aththi pooththadhu

பாடல்: மூவகை பாலில்
திரைப்படம்: அத்தி பூத்தது
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
 
மூவகை பாலில் மூன்றாம் பால்தான் இன்பம்
அந்த மூன்றாம் பாலில் தோன்றுவதே உன் பிம்பம்
மூவகை பாலில் மூன்றாம் பால்தான் இன்பம்
அந்த மூன்றாம் பாலில் தோன்றுவதே
உன் பிம்பம்...இன்பம்...பிம்பம்

ஏழ்வகை பிறப்பில் எல்லா பிறப்பிலும் சொந்தம்
ஏழ்வகை பிறப்பில் எல்லா பிறப்பிலும் சொந்தம்
அந்த சொந்தத்தினாலே வந்ததன்றோ இந்த பந்தம்
வந்ததன்றோ இந்த பந்தம்

தாழை மடலின் வாசம்
தினம் தாங்கிடும் பூங்குழல் மேகம்
தங்கப்பேழையின் வண்ணம் கன்னம்
அதில் பதித்திட வேண்டும் சின்னம்

கோவை இதழின் ஓரம்
பல கோலங்கள் தீட்டிடும் நேரம்
வண்ணப்பாவையின் அங்கம் மின்னும்
இரு பாதங்கள் நாணத்தில் பின்னும்

மூவகை பாலில் மூன்றாம் பால்தான் இன்பம்
அந்த மூன்றாம் பாலில் தோன்றுவதே
உன் பிம்பம்...இன்பம்...பிம்பம்

நாதன் உறவைத் தேடும்
இரு நேத்திரம் கீர்த்தனம் பாடும்
இந்த மாதவன் கொஞ்சும் பிள்ளை
தினம் மடியினில் ஆடும் முல்லை

காமன் கணைகள் பாய
இளங்கோதை என் தோள்களில் சாய
கட்டில் காவியம் கண்கள் சொல்லும்
அது கம்பன் பாட்டையும் வெல்லும்

மூவகை பாலில் மூன்றாம் பால்தான் இன்பம்
அந்த மூன்றாம் பாலில் தோன்றுவதே
உன் பிம்பம்...இன்பம்...பிம்பம்

No comments: