Saturday, August 25, 2012

ஏழிசை கீதமே - ரசிகன் ஒரு ரசிகை

பாடல்: ஏழிசை கீதமே
திரைப்படம்: ரசிகன் ஒரு ரசிகை
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
இசை: ரவீந்திரன்


ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே
வாழும் காலம் யாவும் உனக்காக நான்தான்
காவிய வீணையில் ஸ்வரங்களை மீட்டுவேன் கானம்
கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே
ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே

ஏதோ ராகம் எனது குரலின் வழி
தாளம் பாவம் இரண்டும் இணைந்து வர
கேட்கும் யாரும் உருகி உருகி விழ
காதில் பாயும் புதிய கவிதை இது
அழகு மொழியில் ஒரு அமுத மழையும் வர
நினைவும் மனமும் அதில் நனைய நனைய
சுகமோ...ஏதோ
நாளெல்லாம் சந்தோஷம் நெஞ்செல்லாம் சங்கீதம்
உயிரே...உயிரே
ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே

கையில் ஏந்தும் மதுவின் மயக்கமுண்டு
கண்ணில் நீந்தும் கனவில் இனிமையுண்டு
நெஞ்சே நெஞ்சே எதையும் மறந்துவிடு
போதை ஆற்றில் மனதை மிதக்கவிடு
உறவும் எதுவுமில்லை கவலை சிறிதுமில்லை
தனிமை கொடுமையில்லை இனிமை இனிமை
இதுதான்...நான்தான்
பாசங்கள் கொள்ளாத பந்தங்கள் இல்லாத
மனிதன்...மனிதன்

ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே
வாழும் காலம் யாவும் உனக்காக நான்தான்
காவிய வீணையில் ஸ்வரங்களை மீட்டுவேன் கானம்
கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே
ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே

No comments: