Wednesday, October 29, 2008

kaNNE vaa kaNmaNiyE vaa - kuzhandhai yEsu

பாடல்: கண்ணே வா கண்மணியே வா
திரைப்படம்: குழந்தை இயேசு
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
இசை: ஷ்யாம்

(பொன்னோடை கீழ்வானில் பாய்கின்றது
பூபாளம் என் காதில் கேட்கின்றது
தீராத துன்பங்கள் தீர்கின்றது
என் தேவன் உன் வண்ணம் நேர் நின்றது)

கண்ணே வா கண்மணியே வா
கண்ணே வா கண்மணியே வா
விடிகாலை பொழுதாக ஒளிதர நீ வா
திருச்சபை முழுதும் அருள்மழை
பொழியும்...குழந்தை இயேசுவே
சரணம் சரணம் திருவடி சரணம்
கண்ணே வா கண்மணியே வா
விடிகாலை பொழுதாக ஒளிதர நீ வா

(ஆற்றாக ஊற்றாக வந்தானவன்
கண்ணோடும் நெஞ்சோடும் நின்றானவன்
நேற்றாகி இன்றாகி வாழ்கின்ற‌வன்
செய்கின்ற‌ பாவ‌ங்க‌ள் தீர்க்கின்ற‌வ‌ன்)

நினையாத முன்னே அழகான பொன்னே
வரவேண்டும் இங்கே என் தேவனே
ஒருபோதும் உன்னை மறவாது நாளும்
நான் பாட வேண்டும் உன் நாமமே
மன ஆலயம் உனதல்லவோ
மன ஆலயம் உனதல்லவோ
குழந்தை இயேசுவே...சரணம் சரணம் திருவடி சரணம்

கண்ணே வா கண்மணியே வா
விடிகாலை பொழுதாக ஒளிதர நீ வா

(ஆகாய‌ ராஜாங்க‌ம் ஆள்கின்ற‌வ‌ன்
அன்பென்னும் வண்ணத்தில் வாழ்கின்றவன்
மேய்பானும் காப்பானும் தானானவன்
வேதங்கள் போதங்கள் எல்லாமவன்)

ஒருகோடி செல்வம் இருந்தென்ன லாபம்
எதிர்காலம் எங்கள் பேர் சொல்லுமோ
உன் போல பிள்ளை என் வீட்டில் இல்லை
மனம் கொண்ட ஏக்கம் நான் சொல்லவோ
அருளன்னையின் ஒரு பிள்ளையே
அருளன்னையின் ஒரு பிள்ளையே
குழந்தை இயேசுவே...சரணம் சரணம் திருவடி சரணம்

கண்ணே வா கண்மணியே வா
விடிகாலை பொழுதாக ஒளி தர நீ வா
திருச்சபை முழுதும் அருள்மழை பொழியும்
குழந்தை இயேசுவே...சரணம் சரணம் திருவடி சரணம்

(பொன்னோடை கீழ்வானில் பாய்கின்றது
பூபாளம் என் காதில் கேட்கின்றது
தீராத துன்பங்கள் தீர்கின்றது
என் தேவன் உன் வண்ணம் நேர் நின்றது)

No comments: