Friday, January 27, 2012

மல்லிகை மலரெடுத்து - இளங்கேஸ்வரன்

பாடல்: மல்லிகை மலரெடுத்து
திரைப்படம்: இளங்கேஸ்வரன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: வாணி ஜெயராம்

மல்லிகை மலரெடுத்து மாறன் கணை தொடுக்க
மன்னவன் நினைவெடுத்து மங்கை மனம் துடிக்க
கிடைத்ததோ அவன் தரிசனம் இனித்ததோ ஓர் இள மனம்

மல்லிகை மலரெடுத்து மாறன் கணை தொடுக்க
மன்னவன் நினைவெடுத்து மங்கை மனம் துடிக்க
கிடைத்ததோ அவன் தரிசனம் இனித்ததோ ஓர் இள மனம்
தேவன் வடிவோ என் தெய்வம் இதுவோ
தையல் மனதில் ஓர் மையல் தருமோ
அவன் மணிக்கரம் எனை தழுவுமோ
இவள் மனக்குறை இனி தணியுமோ

மல்லிகை மலர் எடுத்து மாறன் கணை தொடுக்க
மன்னவன் நினைவெடுத்து மங்கை மனம் துடிக்க
கிடைத்ததோ அவன் தரிசனம் இனித்ததோ ஓர் இள மனம்

வனத்திலும் மனத்திலும் வசிப்பவன் வசப்படும்
வேளை நான் கண்டேன் சேரும் தோளை நான் கண்டேன்
வளைக்கரம் குலுங்கிட மதுக்குடம் ததும்பிட
பாவை நான் வந்தேன் ஏதோ தேவை நான் வந்தேன்
என் நெஞ்சில் தாபம் மிஞ்ச என் கண்கள் ரெண்டும் கெஞ்ச
என் நெஞ்சில் தாபம் மிஞ்ச என் கண்கள் ரெண்டும் கெஞ்ச
ஒரு மயக்கம் பிறக்க நடுக்கம் எடுக்க
மோகம் உருவாக இளம் தேகம் தனலாக
ஹா மோகம் உருவாக இளம் தேகம் தனலாக
அவன் விழிப்புனல் எனை நனைக்குமோ
உடல் பனிக்கடல் என குளிருமோ

கரங்களை தொடுப்பவன் சடைமுடி சரிப்பவன்
காட்டில் வந்தானோ காம கானம் கேட்டானோ
எனக்கொரு வரம் தர விரும்பிய சுகம் தர
நேரில் வந்தானோ வேண்டும் நேசம் தந்தானோ
என் அச்சம் நாணம் கொள்ள நான் இன்னும் என்ன சொல்ல
இனி நெருங்க நெருங்க அணைத்தும் வழங்க
நேரம் இனிதாக அந்தி மாலைப்பொழுதாக
நேரம் இனிதாக அந்தி மாலைப்பொழுதாக
அவன் மடித்தளம் நிழல் கொடுக்குமோ
இவள் நலம்பெற அருள் கிடைக்குமோ

மல்லிகை மலரெடுத்து மாறன் கணை தொடுக்க
மன்னவன் நினைவெடுத்து மங்கை மனம் துடிக்க
கிடைத்ததோ அவன் தரிசனம் இனித்ததோ ஓர் இள மனம்
 

No comments: