Monday, January 16, 2012

மாதென்னை படைத்தான் - ராஜ ராஜ சோழன்

பாடல்: மாதென்னை படைத்தான்
திரைப்படம்: ராஜ ராஜ சோழன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி,
எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எம்.ஆர்.விஜயா

மாதென்னை படைத்தான் உனக்காக
மாதங்கள் படைத்தான் நமக்காக
மாதென்னை படைத்தான் உனக்காக
மாதங்கள் படைத்தான் நமக்காக

கீதங்கள் படைத்தான் இசைக்காக
காதலை படைத்தான் கணக்காக
கீதங்கள் படைத்தான் இசைக்காக
காதலை படைத்தான் கணக்காக

மாதென்னை படைத்தான் உனக்காக
மாதங்கள் படைத்தான் நமக்காக

கார்த்திகை மாதத்து தீபங்கள் போல்
எந்தன் கண் பறிக்கும் உந்தன் பேரழகு
கார்த்திகை மாதத்து தீபங்கள் போல்
எந்தன் கண் பறிக்கும் உந்தன் பேரழகு

மார்கழி மாதத்து பனிமுத்து போல்
இன்று மயக்கியதே உந்தன் சொல்லழகு
மார்கழி மாதத்து பனிமுத்து போல்
இன்று மயக்கியதே உந்தன் சொல்லழகு

தை மகளே அத்தை மகளே
என்னை தழுவிட பிறந்த தமிழ் மகளே
தை மகளே அத்தை மகளே
என்னை தழுவிட பிறந்த தமிழ் மகளே

மாசில்லாத என் மாமணியே
இந்த மணமகள் தேடிய மன்னவனே
மாசில்லாத என் மாமணியே
இந்த மணமகள் தேடிய மன்னவனே

பங்குனி என் வாழ்வில் பங்கு நீ
இந்த பார்த்திபன் பார்வையில் எங்கும் நீ
பங்குனி என் வாழ்வில் பங்கு நீ
இந்த பார்த்திபன் பார்வையில் எங்கும் நீ

சித்திரை மாதத்து வானம் நீ
எங்கள் தெய்வ புலவரின் வேதம் நீ
சித்திரை மாதத்து வானம் நீ
எங்கள் தெய்வ புலவரின் வேதம் நீ

வைகாசி பிறையின் வடிவமே
வாடாத அழகு பருவமே
வைகாசி பிறையின் வடிவமே
வாடாத அழகு பருவமே

ஆணி மஞ்சனம் போலவே
புது அலங்காரம் செய்த தெய்வமே
ஆணி மஞ்சனம் போலவே
புது அலங்காரம் செய்த தெய்வமே

ஆடி காவிரி வெள்ளமே
வரும் ஆவணி மாதத்து மேகமே
ஆடி காவிரி வெள்ளமே
வரும் ஆவணி மாதத்து மேகமே

புரட்டாசி திங்களில் ஒரு மனம்
ஐப்பசி மாதத்தில் திருமணம்
புரட்டாசி திங்களில் ஒரு மனம்
ஐப்பசி மாதத்தில் திருமணம் நம் திருமணம்

மாதென்னை படைத்தான் உனக்காக
மாதங்கள் படைத்தான் நமக்காக

கீதங்கள் படைத்தான் இசைக்காக
காதலை படைத்தான் கணக்காக

மாதென்னை படைத்தான் உனக்காக
மாதங்கள் படைத்தான் நமக்காக

No comments: