Monday, January 16, 2012

உசுர திருடி போறா ஒருத்தி - கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை

பாடல்: உசுர திருடி போறா ஒருத்தி
திரைப்படம்: கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை
இசை: பரணி
பாடியவர்கள்: ஶ்ரீராம் பார்த்தசாரதி & பவதாரிணி

உசுர திருடி போறா ஒருத்தி
அட உள்ளுக்குள்ள வெளக்க பொறுத்தி
என் உசுர திருடி போறா ஒருத்தி
அட உள்ளுக்குள்ள வெளக்க பொறுத்தி
எனக்குத்தான் என்ன ஆச்சு
மனசுக்குள் நூறாள் பேச்சு
தெசையெல்லாம் ஒண்ணா போச்சுது
முழிச்சாடும் கண்ணாமூச்சு

உசுர திருடி போறான் ஒருத்தன்
என் ஒறக்கம் கெடுத்த பாச கிறுக்கன்

அல்லிப்பூ மாரால ஆளக்கொன்னு போறவளே
மனப்பாடம் செஞ்சதெல்லாம் மறந்து போகுதே
ஆடைக்குள்ள கோடையிலே அருகினிலே நீயும் வந்தால்
வெளியூறு போன வெட்கம் உள்ளூர் வருமே
முழிக்கின்ற நேரங்கள் முன்னாலே நீ வேண்டும்
எப்போதும் உன்னை படிக்க
அன்புக்கு வயிறில்லை ஆனாலும் பசி கொள்ளும்
அணுவெல்லாம் கூடி துடிக்க
கொலைவாள் கொண்ட அழகே அழகே
குருதியில் காதல் கலந்தாயே

உசுர திருடி போறா ஒருத்தி
அட உள்ளுக்குள்ள வெளக்க பொறுத்தி

வெண்டக்கா நறுக்கையிலே உன் நெனப்பில் விரல் அறுத்தேன்
விடிஞ்சாலும் கனவுக்குள்ள முத்தம் இடுவேன்
மூக்குத்தி சுரபோல உன்னோட நான் இருப்பேன்
முடியாம போனா நானும் மூச்ச விடுவேன்
துணையாக நீ வந்தாய் தோள்மீது சாய்ந்தேனே
இணையான தெய்வம் இல்லையே
கடல் மட்டம் மேலேறி உடல் மூடி போனாலும்
அணையாது காதல் ஒளியே
நெடுநாள் காதல் நிலை கொண்டாடும்
திருநாள் ஒரு நாள் வந்திடுமே

உசுர திருடி போறா ஒருத்தி
அட உள்ளுக்குள்ள வெளக்க பொறுத்தி
என் உசுர திருடி போறா ஒருத்தி
அட உள்ளுக்குள்ள வெளக்க பொறுத்தி
எனக்குத்தான் என்ன ஆச்சு
மனசுக்குள் நூறாள் பேச்சு
தெசையெல்லாம் ஒண்ணா போச்சுது
முழிச்சாடும் கண்ணாமூச்சு

உசுர திருடி போறான் ஒருத்தன்
என் ஒறக்கம் கெடுத்த பாச கிறுக்கன்

No comments: