Friday, January 27, 2012

சந்திக்காத கண்களில் இன்பங்கள் - நூற்றெண்பது

பாடல்: சந்திக்காத கண்களில் இன்பங்கள்
திரைப்படம்: நூற்றெண்பது
இசை: சரத்
பாடியவர்கள்: K.S.சித்ரா, சௌம்யா & உன்னிமேனன்

சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்யப் போகிறேன்
அன்பின் ஆலை ஆனாய்
ஏங்கும் ஏழை நானாய்
தண்ணீரைத் தேடும் மீனாய்
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்

ஊகம் செய்தேன் இல்லை
மோகம் உன் மீதானேன்
கதைகள் கதைகள் கதைத்து
விட்டுப் போகாமல்
விதைகள் விதைகள் விதைத்து
விட்டுப் போவோமே

ரி...நி...க...ரி
திசை அறியா
ரி...ம...நி...ப...க...ரி
பறவைகளாய்
நி ரி ஸா...நீ...ரி...நான்...க
நீள்...ம...வான்...ப த நி ஸா
வெளியிலே மிதக்கிறோம்

சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்யப் போகிறேன்

போகும் நம் தூரங்கள்
நீளம் தான் கூடாதோ
இணையும் முனையம்
இதயம் என்று ஆனாலே
பயணம் முடியும் பயமும்
விட்டுப் போகாதோ

த...நி...த...ம...க...ரி
முடிவு அறியா
ரி...ப...ம...நி...ப...க...ரி
அடி வானமாய்
ரி நி ஸா...ஏன்...ரி...ஏன்...க
நீ...ம...நான்...ப த நி ஸா
தினம் தினம் தொடர்கிறோம்

சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்யப் போகிறேன்
அன்பின் ஆலை ஆனாய்
ஏங்கும் ஏழை நானாய்
தண்ணீரைத் தேடும் மீனாய்

No comments: