Sunday, December 18, 2011

manja kuLichidum - vaLartha kadA

பாடல்: மஞ்ச குளிச்சிடும்
திரைப்படம்: வளர்த்த கடா
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: எஸ்.என்.சுரேந்தர் & வாணி ஜெயராம்

மஞ்ச குளிச்சிடும் வஞ்சி மலர்க்கொடி
கொச்சை மொழி சொல்லும் பச்சை பசுங்கிளி
பொன்னாட்டம் சிரிச்சா பூவாட்டம்
இடை ஒரு தேராட்டம் இங்கே ஆட முந்தானை மூட
ஒரு கும்மாளம் கொண்டாட்டம் உல்லாசம்

மஞ்ச குளிச்சிடும் வஞ்சி மலர்க்கொடி
கொச்சை மொழி சொல்லும் பச்சை பசுங்கிளி
உன்னோடு இருக்கா பின்னோடு
இடை ஒரு தேராட்டம் இங்கே ஆட முந்தானை மூட
என்ன கும்மாளம் கொண்டாட்டம் உல்லாசம்

ஒவ்வொரு ராத்திரியும் உன் உறக்கம் கலையும்
வந்திழுக்கும் வேளை வரை உன் நினைப்பாகும்
எத்தனை சொப்பனமோ என் விழியில் வருமோ
பாய் விரிச்சி நான் படுத்தா உன் கனவாகும்
மேனி மெலிந்ததென்ன மேலாடை சுடுவதென்ன
காதல் விளைஞ்சதடி கல்யாணம் வேண்டுதடி
நீதானய்யா நாள் பார்த்து வா
நாள் பார்க்கும் முன் தோள் சேர வா

மஞ்ச குளிச்சிடும் வஞ்சி மலர்க்கொடி
கொச்சை மொழி சொல்லும் பச்சை பசுங்கிளி
உன்னோடு இருக்கா பின்னோடு
இடை ஒரு தேராட்டம் இங்கே ஆட முந்தானை மூட
என்ன கும்மாளம் கொண்டாட்டம் உல்லாசம்

மல்லிகை செண்டல்லவா நான் மெதுவாய் தொடவா
தொட தொடத்தான் சுட சுடத்தான் சுகம் பிறக்காதா
மெல்லிடை துள்ளிடவா துள்ளி மடியில் விழவா
முதல் முதல் உன் விரல் படத்தான் முகம் சிவக்காதா
உடம்பு கொதிக்குதடி ஓயாமல் உருகுதடி
எனக்கும் அப்படித்தான் ஏதேதோ கற்பனைதான்
மாமான்னு தான் நீ கொஞ்சணும்
ஆஹா ஏம்மான்னு தான் நீ கெஞ்சணும்

மஞ்ச குளிச்சிடும் வஞ்சி மலர்க்கொடி
கொச்சை மொழி சொல்லும் பச்சை பசுங்கிளி
உன்னோடு இருக்கா பின்னோடு
இடை ஒரு தேராட்டம் இங்கே ஆட முந்தானை மூட
என்ன கும்மாளம் கொண்டாட்டம் உல்லாசம்

No comments: