Sunday, December 18, 2011

sindhu paadum chinna poonguyilE - thangaikku oru thaalaattu

பாடல்: சிந்து பாடும் சின்னப் பூங்குயிலே
திரைப்படம்: தங்கைக்கு ஓர் தாலாட்டு
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: மனோ & சித்ரா

சிந்து பாடும் சின்னப் பூங்குயிலே
என் எண்ணம் போலே
நெஞ்சில் ஆட நித்தம் வா மயிலே

சிந்து பாடும் சின்னப் பூங்குயிலே
என் எண்ணம் போலே
நெஞ்சில் ஆட நித்தம் வா மயிலே
நதியில் நீந்தி வா பொன் மீனே
இதழில் ஏந்தி வா செந்தேனே
நதியில் நீந்தி வா பொன் மீனே
இதழில் ஏந்தி வா செந்தேனே

சிந்து பாடும் சின்னப் பூங்குயிலே
என் எண்ணம் போலே
நெஞ்சில் ஆட நித்தம் வா மயிலே
நதியில் நீந்தி வா பொன் மீனே
இதழில் ஏந்தி வா செந்தேனே
நதியில் நீந்தி வா பொன் மீனே
இதழில் ஏந்தி வா செந்தேனே

உன் மேனி தொட தென்றல் வந்ததோ
உடலைத் தீண்டும் நேரம்
மனம் கடல் போலே அலை மோதும்
இந்நாளில் வரும் அந்தி நேரம்தான்
புதுமை கதைகள் பேசும்
இளம் மலரின் வாசம் வீசும்
பூவனமே நீ வரவே வாலிப நாள் இதுவே
பூவனமே நீ வரவே வாலிப நாள் இதுவே
நீ மொட்டை மெல்லத் தொட்டாய் பூவானதே

சிந்து பாடும் சின்னப் பூங்குயிலே
என் எண்ணம் போலே
நெஞ்சில் ஆட நித்தம் வா மயிலே
நதியில் நீந்தி வா பொன் மீனே
இதழில் ஏந்தி வா செந்தேனே

சிந்து பாடும் சின்னப் பூங்குயிலே
என் எண்ணம் போலே
நெஞ்சில் ஆட நித்தம் வா மயிலே

நெஞ்சோரம் இதம் தந்ததாரோ
நிழலாய் காக்கும் ஜீவன்
வழி வழியாய் சேரும் தேவன்
கண்ணோரம் நிதம் வந்ததாரோ
அழகை வானில் தூவி
என் இளமை வாழ்வின் தேவி
பொன் உலகம் என் இதயம் நீ அதில் வாழ வா
பொன் உலகம் என் இதயம் நீ அதில் வாழ வா
தஞ்சம் தந்தாய் நெஞ்சம் நீயே நாம் வாழலாம்

சிந்து பாடும் சின்னப் பூங்குயிலே
என் எண்ணம் போலே
நெஞ்சில் ஆட நித்தம் வா மயிலே
நதியில் நீந்தி வா பொன் மீனே
இதழில் ஏந்தி வா செந்தேனே
நதியில் நீந்தி வா பொன் மீனே
இதழில் ஏந்தி வா செந்தேனே

No comments: