Sunday, December 18, 2011

sondham ennum sandham - thai maasam poo vaasam

பாடல்: சொந்தம் என்னும் சந்தம்
திரைப்படம்: தை மாசம் பூ வாசம்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.பி.ஷைலஜா

சொந்தம் என்னும் சந்தம்
சொன்னாள் செம்மாங்குயில்
சுகம்தான் ஓர் ஆயிரம்
மன்றம் வந்து தென்றல்
கொஞ்சும் பொன்மாலையில்
தொடுத்தேன் ஓர் பூச்சரம்
கண்ணே உன் மாலைதான்
நான் சூடும் வேளைதான்
ஆனந்த லீலைதான்
கண்டேன் உன்னை
தந்தேன் என்னை தொடர்ந்திடும்

சொந்தம் என்னும் சந்தம்
சொன்னாள் செம்மாங்குயில்
சுகம்தான் ஓர் ஆயிரம்

வேதங்கள் ஓதும் முனிவனின் மகளே
சகுந்தலை மானே வா
மாடங்கள் சூழும் அரண்மனை வாழும்
மணிமுடி மன்னா வா
மாணிக்க வீணையை மெதுவாய் மீட்டிட
இதுதான் ஆனந்த நேரம்
ஆணிப்பொன் மோதிரம்
அளித்தாய் சீதனம்
இனிமேல் நான் உந்தன் தாரம்
அம்மாடி நெஞ்சம்தான்
அல்லிப்பூ மஞ்சம்தான்
அங்கே நான் தஞ்சம்தான்
அச்சம் இன்னும்
மிச்சம் என்ன தொடர்ந்திடும்

சொந்தம் என்னும் சந்தம்
சொன்னாள் செம்மாங்குயில்
சுகம்தான் ஓர் ஆயிரம்

ஆடவர் நெஞ்சம் அடிக்கடி கொஞ்சம்
இலக்கணம் மீறாதோ
ஆயினும் என்ன அவசர காதல்
இலக்கியம் ஆகாதோ
நீ செல்லும் பாதையில்
நிழல் போல் நான் வர
நமக்குள் ஏதிங்கு பேதம்
ஈரேழு ஜென்மமும்
இது போல் சேர்ந்திட
வகுப்போம் காதலின் வேதம்
நீயென்றால் நீயல்ல
நானென்றால் நானல்ல
நாமென்றும் வேறல்ல
இன்பம் உண்டு
இங்கே அள்ள தொடர்ந்திடும்

சொந்தம் என்னும் சந்தம்
சொன்னாள் செம்மாங்குயில்
சுகம்தான் ஓர் ஆயிரம்
மன்றம் வந்து தென்றல்
கொஞ்சும் பொன்மாலையில்
தொடுத்தேன் ஓர் பூச்சரம்

No comments: