Friday, April 26, 2013

மேகமே வெண் மேகமே - வெங்காயம்

பாடல்: மேகமே வெண் மேகமே
திரைப்படம்: வெங்காயம்
பாடியவர்கள்: பெல்லி ராஜ் & தீபா மிரியம்
இசை: பரணி

மேகமே வெண் மேகமே நீ யாரைத் தேடுறாய்
என்னையே நீ தீண்டவே மழைச்சாரல் ஆகிறாய்

உன் மூச்சின் நீளம் வாழவே
என் ஆயுள் தூரம் போதுமே
உன் இருவிழி இசைமொழி பேசுதே
மேகமே வெண் மேகமே நீ யாரைத் தேடுறாய்

அழகழகாய் நீ நடக்கின்ற பொழுது
இசையிசையாய் எனை அழைத்திடும் கொலுசு
உயிரிலே என் உயிரிலே உனைக்கண்டேன்

இதழிதழாய் நீ சிரிக்கின்ற பொழுது
ஐந்தருவி பொங்கித் தெறிக்கின்ற அழகு
விழியிலே இரு விழியிலே உனை உண்டேன்

துளி விழுமோ இல்லை கடல் எழுமோ
என் மனசுக்குள்ளே கடல் எழுமோ

துளிர் விடுமோ இல்லை குளிர் விடுமோ
என் நிழல் உரச குளிர் விடுமோ

செம்புலப்பெயல் நீர் போல
நம் அன்பில் கலந்திட வேண்டும்
உன்னை என்னையும் சேர்த்து
ஒரு திருக்குறள் கூறிட வேண்டும்
ஆடும் ஆடும் ஊஞ்சல் ஆடும்
மேகமே வெண் மேகமே நீ யாரைத் தேடுறாய்

மழைமழையாய் நீ நனைக்கின்ற பொழுது
வரிவரியாய் வரும் கவிதையின் விழுது
பசியிலே உயர் பசியிலே நான் நின்றேன்

அலையலையாய் நீ அடிக்கின்ற பொழுது
அழகழகாய் அதை ரசித்திடும் நிலவு
இதழையே இரு இதழையே நான் தின்றேன்

முதல் மொழியோ இது முதல் மொழியோ
இந்த உயிருக்கெல்லாம் முதல் மொழியோ

சுழல் நதியோ இது சுழல் நதியோ
அடி நமை இழுக்கும் சுழல் நதியோ

சிறு இதழ் பெருமழையாக
நம் கனவில் மிதந்திட வேண்டும்
ஈருடல் ஓர் உயிராக
நம் இருவரும் இணைந்திட வேண்டும்
காலம் வாழ்த்திப் பூக்கள் தூவும்

மேகமே வெண் மேகமே நீ யாரைத் தேடுறாய்
என்னையே நீ தீண்டவே மழைச்சாரல் ஆகிறாய்

உன் மூச்சின் நீளம் வாழவே
என் ஆயுள் தூரம் போதுமே
உன் இருவிழி இசைமொழி பேசுதே
மேகமே வெண் மேகமே நீ யாரைத் தேடுறாய்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

/// உன்னை என்னையும் சேர்த்து
ஒரு திருக்குறள் கூறிட வேண்டும்
ஆடும் ஆடும் ஊஞ்சல் ஆடும்
மேகமே வெண் மேகமே நீ யாரைத் தேடுறாய் ///

ரசிக்க வைக்கும் வரிகள்... நன்றி...