Saturday, September 8, 2012

நூறு இரவு நூறு உறவு - பால்காரி

பாடல்: நூறு இரவு நூறு உறவு
திரைப்படம்: பால்காரி
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்: எஸ்.ஜானகி

நூறு இரவு நூறு உறவு பார்த்ததுண்டு பருவ நிலவு
நூறு இரவு நூறு உறவு பார்த்ததுண்டு பருவ நிலவு
பொன்னத்தான் உன்னைத்தான் என்னை நான் கொடுத்தேன்
கன்னத்தின் கிண்ணத்தில் தேனைத்தான் அளப்பேன்
நூறு இரவு நூறு உறவு பார்த்ததுண்டு பருவ நிலவு

ஓடையில் உலவி வரும் வாடையில்
குலவும் மலர் ஜாடையில் என் பார்வைகள்
ஓடையில் உலவி வரும் வாடையில்
குலவும் மலர் ஜாடையில் என் பார்வைகள்
கண்ணுக்குள் என்னென்ன வண்ண்ங்கள் ஜாலங்கள்
பெண்ணுக்கும் ஆணுக்கும் எல்லாமே பாலங்கள்
ஓஓஓ...ஓஓஓ...ஓஓஓ...ஓஓஓ...ஓஓஓ...ஓஓஓ
நூறு இரவு நூறு உறவு பார்த்ததுண்டு பருவ நிலவு

வாலிபம் நடத்துகின்ற நாடகம்
நடு இரவில் ஆயிரம் அரங்கேற்றலாம்
வாலிபம் நடத்துகின்ற நாடகம்
நடு இரவில் ஆயிரம் அரங்கேற்றலாம்
மாமல்லன் காலத்தின் சிற்பங்கள் பெண்ணாகும்
காஷ்மீரின் தோட்டத்தின் புஷ்பங்கள் கண்ணாகும்
ஓஓஓ...ஓஓஓ...ஓஓஓ...ஓஓஓ...ஓஓஓ...ஓஓஓ
நூறு இரவு நூறு உறவு பார்த்ததுண்டு பருவ நிலவு

மன்மதன் எழுதி வைத்த மந்திரம்
மயங்க வைக்கும் தந்திரம் நான் சொல்லவோ
மன்மதன் எழுதி வைத்த மந்திரம்
மயங்க வைக்கும் தந்திரம் நான் சொல்லவோ
சந்திக்கும் பேரெல்லாம் சிந்திக்கும் நேரங்கள்
சிந்திக்கும் நெஞ்செல்லாம் தித்திக்கும் இன்பங்கள்
ஓஓஓ...ஓஓஓ...ஓஓஓ...ஓஓஓ...ஓஓஓ...ஓஓஓ

நூறு இரவு நூறு உறவு பார்த்ததுண்டு பருவ நிலவு
பொன்னத்தான் உன்னைத்தான் என்னை நான் கொடுத்தேன்
கன்னத்தின் கிண்ணத்தில் தேனைத்தான் அளப்பேன்
ஓஓஓ...ஓஓஓ...ஓஓஓ...ஓஓஓ...ஓஓஓ...ஓஓஓ

No comments: