Saturday, September 8, 2012

மந்திரப் புன்னகை - மணல் கயிறு

பாடல்: மந்திரப் புன்னகை
திரைப்படம்: மணல் கயிறு
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
 
மந்திரப் புன்னகை மின்னிடும் மேனகை சந்தனப் பூங்கொடியோ
இந்திரன் மாளிகை சுந்தர தேவதை சித்திர பைங்கிளியோ
அவள்தானோ இவள்தானோ இளமானோ இசைத்தேனோ
வண்ணமொழி வார்த்தை திருவாசகம் தானோ

மந்திரப் புன்னகை மின்னிடும் மேனகை சந்தனப் பூங்கொடியோ
இந்திரன் மாளிகை சுந்தர தேவதை சித்திர பைங்கிளியோ

கோபுரத்தின் கலசமதை ஆடைகள் மூட
கூந்தல்முதல் பாதம்வரை ஆசைகள் ஓட
கோபுரத்தின் கலசமதை ஆடைகள் மூட
கூந்தல்முதல் பாதம்வரை ஆசைகள் ஓட
உற்சவத்து மணிபோலே பொற்கரத்து வளையாட
நெஞ்சை அள்ளிப்போகும் இந்த நாயகி யாரோ

மந்திரப் புன்னகை மின்னிடும் மேனகை சந்தனப் பூங்கொடியோ
இந்திரன் மாளிகை சுந்தர தேவதை சித்திர பைங்கிளியோ

மாமதுரை வாழ்ந்திருக்கும் அங்கையர்கன்னி
தாமரையில் வீற்றிருக்கும் மங்களசெல்வி
கையிரண்டில் இசைவீணை வைத்திருக்கும் கலைவாணி
மங்கை இவள் யாரோ அந்த மூவரும் தானோ

மந்திரப் புன்னகை மின்னிடும் மேனகை சந்தனப் பூங்கொடியோ
இந்திரன் மாளிகை சுந்தர தேவதை சித்திர பைங்கிளியோ

கோலமிட்டு விளக்கேற்றி குடும்பத்தை காக்க
நான் வரைந்த ஓவியம்போல் நாயகி வாய்க்க
குங்குமத்து சிமிழோடு சங்கமத்தை எதிர்பார்க்க
வஞ்சிமகள் கூடும் இந்த வாலிபம் வாழ்க

மந்திரப் புன்னகை மின்னிடும் மேனகை சந்தனப் பூங்கொடியோ
இந்திரன் மாளிகை சுந்தர தேவதை சித்திர பைங்கிளியோ
இளமானோ இசைத்தேனோ கலைத்தேரோ கனிச்சாறோ
என்னை வந்து சேரும் இந்த ஏந்திழை வாழ்க
 
No comments: