Saturday, September 8, 2012

இன்று வரும் காற்றினிலே - கடவுளின் தீர்ப்பு

பாடல்: இன்று வரும் காற்றினிலே
திரைப்படம்: கடவுளின் தீர்ப்பு
இசை: ஜி.கோவர்த்தனம்
பாடியவர்கள்: வாணி ஜெயராம்

இன்று வரும் காற்றினிலே என்ன விசேஷம்
அது ஏந்தி வரும் வாசனையில் என்ன விசேஷம்
இன்று வரும் காற்றினிலே என்ன விசேஷம்
அது ஏந்தி வரும் வாசனையில் என்ன விசேஷம்
இளமை...புதுமை...தனிமை...இனிமை
இன்று வரும் காற்றினிலே என்ன விசேஷம்
அது ஏந்தி வரும் வாசனையில் என்ன விசேஷம்

வண்ணமழை மேகத்திலே ஓவியம் உண்டோ
அது மனதில் உள்ள ஓவியத்தை வரைவதும் உண்டோ
அன்னநடை போடுதம்மா ஆற்று வெள்ளமே
ஏதோ ஆசைவலை பட்டதம்மா நதியின் உள்ளமே
ஆலமரம் தலைவிரித்து நிற்பதும் என்ன
ஒரு அரசனுக்கு மாலையிட துடிப்பதும் என்ன
மயக்கம்...கலக்கம்...அதற்கும்...தயக்கம்

இன்று வரும் காற்றினிலே என்ன விசேஷம்
அது ஏந்தி வரும் வாசனையில் என்ன விசேஷம்

கோழியிடம் சேவல் ஒன்று கொஞ்சுவதென்ன
ரெண்டு குருவிகளும் மரக்கிளையில் பேசுவதென்ன
தாமரைப்பூ வானத்தையே பார்ப்பதும் என்ன
அதை தழுவ வந்த சூரியனின் ஜாதிதான் என்ன
ஞான கும்மி பாடுவதேன் கோகிலம் எல்லாம்
சுக ராஜபோகம் நடத்துவதேன் தோகைகள் எல்லாம்
பருவம்...உருவம்...ரசனை...அதிகம்

இன்று வரும் காற்றினிலே என்ன விசேஷம்
அது ஏந்தி வரும் வாசனையில் என்ன விசேஷம்

நெஞ்சில் உள்ள வார்த்தைக்கெல்லாம் பாஷைகள் உண்டோ
அந்த நினைவுகளை படம் பிடிக்கும் கருவியும் உண்டோ
கண்களுக்கு உலகத்திலே காவலும் உண்டோ
எந்த கன்னியர்க்கும் மனதுக்குள்ளே கோவிலும் உண்டோ
இனம் மறந்த குலம் மறந்த பந்தங்கள் உண்டோ
இங்கே எந்த எந்த உள்ளங்களில் சொந்தங்கள் உண்டோ
கேள்வி...நானே...பதிலும்...நானே

இன்று வரும் காற்றினிலே என்ன விசேஷம்
அது ஏந்தி வரும் வாசனையில் என்ன விசேஷம்
இன்று வரும் காற்றினிலே என்ன விசேஷம்
அது ஏந்தி வரும் வாசனையில் என்ன விசேஷம்

No comments: