Friday, September 14, 2012

சந்தோஷம் காணாத வாழ்வுண்டா - வசந்தி

பாடல்: சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
திரைப்படம்: வசந்தி
இசை: சந்திரபோஸ்
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
 
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆருண்டா
உன் துன்பம் வந்தால் அதை இன்பம் என்று
எண்ணி வாழ்ந்துவிட்டால்
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆருண்டா

தென்னையின் கீற்று விழவில்லை என்றால்
தென்னைக்கு என்றும் வளர்ச்சி இல்லை
தங்கத்தை தீயில் சுடவில்லை என்றால்
மங்கையர் சூட நகையும் இல்லை
பிறப்பதில் கூட துயர் இருக்கும்
பெண்மைக்கு பாவம் சுமை இருக்கும்
வலி வந்துதானே வழி பிறக்கும்
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா

பாசங்கள் போதும் பார்வைகள் போதும்
பாலையில் நீரும் சுரந்து வரும்
புன்னகை போதும் பூமொழி போதும்
போர்களும் கூட முடிந்துவிடும்
பாதையை அன்பே திறந்துவிடும்
பாறையும் பழமாய் கனிந்துவிடும்
வாழ்க்கையின் ஆழம் விளங்கிவிடும்

சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆருண்டா
உன் துன்பம் வந்தால் அதை இன்பம் என்று
எண்ணி வாழ்ந்துவிட்டால்
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆருண்டா
 

No comments: