Saturday, September 22, 2012

இளம் மானே உன்னைத்தானே - தாலாட்டத்தாய் வேண்டும்

பாடல்: இளம் மானே உன்னைத்தானே
திரைப்படம்: தாலாட்டத்தாய் வேண்டும்
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & வாணி ஜெயராம்

இளம் மானே உன்னைத்தானே
முல்லைத்தேனே மௌனம் ஏனோ
இளம் பூவே எப்போது ஆளானாய்
இதழ் ஓரம் வற்றாத ஆறானாய்
இனி மீனாய் நெஞ்சில் நீராடு


இளம் மானே உன்னைத்தானே
முல்லைத்தேனே மௌனம் ஏனோ
இதழ் ஈரம் காயாத தேனாறு
குழல் பாரம் தாங்காது நீ ஏந்து
இள நீராய் மாறும் பூமாது


இளம் மானே உன்னைத்தானே
முல்லைத்தேனே மௌனம் ஏனோ

மன்மதன் மாலை மந்திரக்கோலை
மலர்விழி எடுக்கின்றதோ

மல்லிகைச் சோலை தென்றலில் ஓலை
தரும் இடம் குறிக்கின்றதோ

புள்ளி மானே பள்ளி ஏனோ
இரு தோள் இன்று பசி கொண்டதோ


இளம் மானே உன்னைத்தானே
முல்லைத்தேனே மௌனம் ஏனோ


மல்லிகை மொட்டு பந்தலில் நின்று
இதழ்களை விரிக்கின்றதோ

பெண் குயில் ஒன்று என் கையில் நின்று
சுகம்பெற துடிக்கின்றதோ

தின்னும் தேனோ பங்கு தானோ
இமைதான் இங்கு திரை இட்டதோ


இளம் மானே உன்னைத்தானே
முல்லைத்தேனே மௌனம் ஏனோ

இதழ் ஈரம் காயாத தேனாறு
குழல் பாரம் தாங்காது நீ ஏந்து

இனி மீனாய் நெஞ்சில் நீராடு
 

No comments: