Saturday, September 22, 2012

என் பாதங்கள் - இது கதை அல்ல

பாடல்: என் பாதங்கள்
திரைப்படம்: இது கதை அல்ல
இசை: ஷ்யாம்
பாடியவர்கள்: ஷ்யாம் & வாணி ஜெயராம்

என் பாதங்கள் சொர்க்கங்களின் முத்தம் பெற்றது
எந்தன் மோகங்கள் ரத்தத்துக்குள் சத்தம் இட்டது
இன்று பூ அரும்பு தீக்குளித்து போராடுது
ஐய்யஹோ மன்மதன் சபைக்கு இன்று ஆளனுப்பு
வந்து வந்து கொஞ்சலாம் வண்டு வந்து கிண்டலாம்
பூவெடுத்து கிள்ளலாம் தேனெடுத்துக் கொள்ளலாம்
ஹோய்யா...ஹா ஹூ ஹா ஹூ...ஹைய்யா

ஆகாய கங்கைக்கொரு தாகம் வந்ததே
அமுத சுரபிக்கின்று பசி வந்ததே

ஆகாய கங்கைக்கொரு தாகம் வந்ததே
அமுத சுரபிக்கின்று பசி வந்ததே
கன்னங்கள் மொட்டு அதில் தென்னங்கள் சொட்டு
என் வெட்கத்தைத் தொட்டு நீ வைத்துக்கொள் பொட்டு
இரவுகளை விடியவிடு மல்லிகை மழையில் என்னை ஆடவிட்டு

வந்து வந்து கொஞ்சலாம் வண்டு வந்து கிண்டலாம்
பூவெடுத்து கிள்ளலாம் தேனெடுத்துக் கொள்ளலாம்
ஹோய்யா...ஹா ஹூ ஹா ஹூ...ஹைய்யா
என் பாதங்கள் சொர்க்கங்களின் முத்தம் பெற்றது
எந்தன் மோகங்கள் ரத்தத்துக்குள் சத்தம் இட்டது

நாணங்கள் என்னும் வேலி மேயச்சொல்லுமா
உள்ளங்கை வெப்பத்தில் கொஞ்சம் குளிர் காயவா

நாணங்கள் என்னும் வேலி மேயச்சொல்லுமா
உள்ளங்கை வெப்பத்தில் கொஞ்சம் குளிர் காயவா
கண்ணெல்லாம் மின்னல் அது சொர்க்கத்தின் ஜன்னல்
உன் நெஞ்செல்லாம் துள்ளல் நீ பெண்ணுக்கு வள்ளல்
முகிலினமே மலரணையோ வானத்து நிலவு ஒரு தலையணையோ

வந்து வந்து கொஞ்சலாம் வண்டு வந்து கிண்டலாம்
பூவெடுத்து கிள்ளலாம் தேனெடுத்துக் கொள்ளலாம்
ஹோய்யா...ஹூ ஹா ஹூ ஹா...ஹோய்யா

No comments: