Friday, September 14, 2012

பருவம் கனிந்து வந்த பாவை - யாரோ எழுதிய கவிதை

பாடல்: பருவம் கனிந்து வந்த பாவை
திரைப்படம்: யாரோ எழுதிய கவிதை
இசை: ஆனந்த் ஷங்கர்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & வாணி ஜெயராம்

பருவம் கனிந்து வந்த பாவை வருக
புடவை அணிந்து வந்த பூவே வருக
ஆஹா சொந்தம் ஆனந்தம்
சுகம் தெய்வீகம் இது நிரந்தர வரம் தரும்
ஆஹா சொந்தம் ஆனந்தம்
சுகம் தெய்வீகம் இது நிரந்தர வரம் தரும்
கண்ணோடு கண்ணாக ஒன்றோடு ஒன்றாக


பருவம் கனிந்து வந்த பாவை இவளே
புடவை அணிந்து வந்த பூவே இவளே

யாரோ எழுதிய கவிதை
மனப்பாடம் செய்தேன் வரிகளை
இவள் யாரோ எழுதிய கவிதை
மனப்பாடம் செய்தேன் வரிகளை


காதல் பருவம் கனிந்து வந்த பாவை இவளே
புடவை அணிந்து வந்த பூவே இவளே


கண்ணே...ஒரே பார்வைதான் பார்த்தாய்
நெஞ்சில் மழை வீழ்ந்ததே உறவுகள் துளிர்விட்டதே

ஒரே கேள்விதான் கேட்டாய் நெஞ்சம் அலைபாய்ந்ததே
முழுமதி என்றாலும் முகவரி சொல்லாது
உயிர் எங்கு சென்றாலும் உனைவிட்டு செல்லாது
நீ இல்லாது நானும் ஏது

காதல் பருவம் கனிந்து வந்த பாவை இவளே
புடவை அணிந்து வந்த பூவே இவளே


அன்பே...கண்ணால் பேசுங்கள் போதும்
நெஞ்சில் நிலா காயுமே உயிருக்குள் சுகம் வருமே

ஒரே புன்னகை போதும் உள்ளே வெள்ளம் பாயுமே
நிலவொன்று கண்ணீரில் மிதந்தது அப்போது
கறைகளும் இல்லாமல் கரை வந்ததிப்போது
தோளை சேர்த்து மாலை மாற்று

பருவம் கனிந்து வந்த பாவை வருக
புடவை அணிந்து வந்த பூவே வருக

ஆஹா சொந்தம் ஆனந்தம்
சுகம் தெய்வீகம் இது நிரந்தர வரம் தரும்

கண்ணோடு கண்ணாக ஒன்றோடு ஒன்றாக
லலல்ல லலல்ல லல்ல லாலா லல லா
லலல்ல லலல்ல லல்ல லாலா லல லா
லலல்ல லலல்ல லல்ல லாலா லல லா
லலல்ல லலல்ல லல்ல லாலா லல லா

No comments: