Thursday, September 20, 2012

முத்தமிழ் சொந்தங்கள் - மாடிவீட்டு ஏழை

பாடல்: முத்தமிழ் சொந்தங்கள்
திரைப்படம்: மாடிவீட்டு ஏழை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன் & வாணி ஜெயராம்

முத்தமிழ் சொந்தங்கள் எத்தனை சந்தங்கள்
முத்தமிழ் சொந்தங்கள் எத்தனை சந்தங்கள்
கவிதையில் வரும் கலை வண்ணங்கள்


சித்திர கன்னங்கள் சந்தன கிண்ணங்கள்
சித்திர கன்னங்கள் சந்தன கிண்ணங்கள்
பருகிட வரும் பல எண்ணங்கள்
பருகிட வரும் பல எண்ணங்கள்

சித்திர கன்னங்கள் சந்தன கிண்ணங்கள்
பருகிட வரும் பல எண்ணங்கள்


மோகம் ஒரு தாகம் அதை தீர்க்கும் மழைமுகிலே
ஏழை மன யாழை தினம் மீட்டும் வளைக்கரமே

மென்மை இந்த பெண்மை இதை தாக்கும் மலர்க்கணையே
இன்றும் இனி என்றும் எனை தாங்கும் உயிர்த்துணையே

மாதுளை முத்துக்கள் மல்லிகை மொட்டுக்கள்
பார்த்தேன் மடி சேர்த்தேன்

மாவிலை பந்தல்கள் மங்கல மேளங்கள்
காணும் நிலை வேணும்
காணும் நிலை வேணும்


முத்தமிழ் சொந்தங்கள் எத்தனை சந்தங்கள்
கவிதையில் வரும் கலை வண்ணங்கள்


பொங்கும் அலை புரளும் தத்தித் தாவும் கரை தழுவ
மாலை இந்த வேளை தங்க மணலில் கதை எழுத

பொன்னே சிறு பூவே கடல் நீயோ கரை நானோ
துள்ளும் கதை சொல்லும் விழி மீனோ இளம் மானோ

கண்டதும் என்னென்ன கற்பனை அம்மம்மா
நாளும் மனம் நாணும்

காதலில் எல்லோரும் கம்பனின் பிள்ளைதான்
கண்ணே தமிழ் பெண்ணே
கண்ணே தமிழ் பெண்ணே


முத்தமிழ் சொந்தங்கள் எத்தனை சந்தங்கள்
கவிதையில் வரும் கலை வண்ணங்கள்


சித்திர கன்னங்கள் சந்தன கிண்ணங்கள்
பருகிட வரும் பல எண்ணங்கள்
பருகிட வரும் பல எண்ணங்கள்

No comments: