Saturday, September 8, 2012

மலை முகப்பினில் - சட்டம் சிரிக்கிறது

பாடல்: மலை முகப்பினில்
திரைப்படம்: சட்டம் சிரிக்கிறது
இசை: டி.ராஜேந்தர்
பாடியவர்கள்: எஸ்.ஜானகி

மலை முகப்பினில் நடுக்காட்டினில்
தளிர்மேனி குளிராலே நடுங்காதோ நீ வா
மலை முகப்பினில் நடுக்காட்டினில்
தளிர்மேனி குளிராலே நடுங்காதோ நீ வா

வெளிச்சத்தை வெறுத்திடும் புத்தகம் படிக்கலாம்
விரகத்தை தீர்த்திடும் தத்துவம் பேசலாம்
வான் முற்றத்தில் நிலவொன்று வா வா வா
தேன் சொட்டிடும் மலரொன்று வா வா வா
வான் முற்றத்தில் நிலவொன்று வா வா வா
தேன் சொட்டிடும் மலரொன்று வா வா வா

காமத்தின் ஞானப்பால் கண்களில் காண வா
ஜாமத்தின் சீதனம் என்னிடம் சூட வா
தேகத்தின் ராகம் மீட்ட வா வா வா
தேராட்டம் ஆடிக்காட்ட வா வா வா
தேகத்தின் ராகம் மீட்ட வா வா வா
தேராட்டம் ஆடிக்காட்ட வா வா வா

மலை முகப்பினில் நடுக்காட்டினில்
தளிர்மேனி குளிராலே நடுங்காதோ நீ வா

No comments: