Sunday, September 30, 2012

வசந்த காலங்கள் - ரயில் பயணங்களில்

பாடல்: வசந்த காலங்கள்
திரைப்படம்: ரயில் பயணங்களில்
இசை: டி.ராஜேந்தர்
பாடியவர்: பி.ஜெயசந்திரன்

வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்

வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
புது முகமான மலர்களே நீங்கள்
நதிதனில் ஆடி கவி பல பாடி
அசைந்து அசைந்து ஆடுங்கள்
அசைந்து அசைந்து ஆடுங்கள்
ஆ ஆஆ ஆ ஆஆ ஆ ஆ ஆ ஆ...ஆஹா ஹா
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்

கருவண்டு நடனம் தருகின்ற நளினம்
இதயத்தில் சலனம் அம்மம்மா

கருவண்டு நடனம் தருகின்ற நளினம்
இதயத்தில் சலனம் அம்மம்மா...அம்மம்மா
உன் மைவிழி குளத்தினில் தவழ்வது மீனினமோ
கவி கண்டிட மணத்தினில் கமழ்வது தமிழ்மணமோ
உன் மைவிழி குளத்தினில் தவழ்வது மீனினமோ
கவி கண்டிட மணத்தினில் கமழ்வது தமிழ்மணமோ
செம்மாந்த மலர்கள் அன்னாந்து பார்க்கும் உன் காந்த விழிகள்
ஒரு ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட ஏதேதோ உயிகள்
மலையில் நெளியும் மேகக்குழல்கள் தாகம் தீர்த்திடுமோ
பூவில் மோத பாதம் நோக நெஞ்சம் தாங்கிடுமோ
நெஞ்சம் தாங்கிடுமோ...

வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்

மாதுளம் இதழாள் மாதவி எழிலாள்
மாங்கனி நிறத்தாள் அம்மம்மா

மாதுளம் இதழாள் மாதவி எழிலாள்
மாங்கனி நிறத்தாள் அம்மம்மா...அம்மம்மா
சுருள் வாழையின் மென்மையை மேனியில் கொண்டவளே
இருள் காடெனும் கூந்தலை இடைவரை கண்டவளே
சுருள் வாழையின் மென்மையை மேனியில் கொண்டவளே
இருள் காடெனும் கூந்தலை இடைவரை கண்டவளே
நூல் தாங்கும் இடையாள் கால்பார்த்து நடக்க நெளிகின்ற வடிவம்
மத்தாளத்தைப் போலே தேகத்தையாக்கி குழல்கத்தை ஜாலம்
பாவை சூடும் வாடைகூட பெருமை கொள்ளுமடி
தேவை உந்தன் சேவை என்று இதழ்கள் ஊறுமடி
இதழ்கள் ஊறுமடி...இதழ் கள் ஊறுமடி

வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
புது முகமான மலர்களே நீங்கள்
நதிதனில் ஆடி கவி பல பாடி
அசைந்து அசைந்து ஆடுங்கள்
அசைந்து அசைந்து ஆடுங்கள்

No comments: