Saturday, September 8, 2012

அன்பு தலைவன் - கடவுளின் தீர்ப்பு

பாடல்: அன்பு தலைவன்
திரைப்படம்: கடவுளின் தீர்ப்பு
இசை: ஜி.கோவர்த்தனம்
பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன் & வாணி ஜெயராம்

அன்பு தலைவன் காலடி சுவட்டில்
ஒன்று கலந்தால் என்ன தவறு
இன்ப முகத்தை நெஞ்சில் நிறுத்தி
எண்ணி மகிழ்ந்தால் என்ன தவறு

அன்பு தலைவன் காலடி சுவட்டில்
ஒன்று கலந்தால் என்ன தவறு
இன்ப முகத்தை நெஞ்சில் நிறுத்தி
எண்ணி மகிழ்ந்தால் என்ன தவறு


மாதுளம் பழத்தில் இருக்கும்
சிறு மணியென உன் இதழ் ஜொலிக்கும்
இதழ் ஜொலிக்கும்
மாதுளம் பழத்தில் இருக்கும்
சிறு மணியென உன் இதழ் ஜொலிக்கும்

மாதின் உளம் அந்த பழமே
இந்த மானிடம் பார்ப்பது குலமே

குங்குமம் இடுகின்ற போது
அது குலத்தினை கேட்பது இல்லை

சங்கமம் ஆகின்ற வேளை
அது ஜாதியை பார்ப்பது இல்லை
இல்லை...இல்லை...இல்லை


நல்ல மனதை சொந்தமாக்கி
நானும் கலந்தால் என்ன தவறு
உள்ளம் சொல்லும் அன்பின் வழியை
உறவு கொண்டால் என்ன தவறு


அன்பு தலைவன் காலடி சுவட்டில்
ஒன்று கலந்தால் என்ன தவறு
இன்ப முகத்தை நெஞ்சில் நிறுத்தி
எண்ணி மகிழ்ந்தால் என்ன தவறு


அல்லிக்கு ஆனந்த இரவு
அதை அணைக்கின்றதே அந்த நிலவு
அந்த நிலவு

அல்லிக்கு ஆனந்த இரவு
அதை அணைக்கின்றதே அந்த நிலவு

சொல்லி வராதது உறவு
இது சொர்க்கத்தில் எழுதிய வரவு

கொடியுடன் சேர்ந்தது முல்லை
அந்த கூட்டுறவில் தவறில்லை

கொடியுடன் நான் வந்து சேர்ந்தேன்
அந்த குணத்தினிலே தவறில்லை
இல்லை...இல்லை...இல்லை


அன்பு தலைவன் காலடி சுவட்டில்
ஒன்று கலந்தால் என்ன தவறு
இன்ப முகத்தை நெஞ்சில் நிறுத்தி
எண்ணி மகிழ்ந்தால் என்ன தவறு


நல்ல மனதை சொந்தமாக்கி
நானும் கலந்தால் என்ன தவறு
உள்ளம் சொல்லும் அன்பின் வழியை
உறவு கொண்டால் என்ன தவறு

No comments: