Saturday, September 22, 2012

அஞ்சாறு நாட்களாச்சு தூங்கி - பணம் பத்தும் செய்யும்

பாடல்: அஞ்சாறு நாட்களாச்சு தூங்கி
திரைப்படம்: பணம் பத்தும் செய்யும்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்: எஸ்.பி.ஷைலஜா

அஞ்சாறு நாட்களாச்சு தூங்கி
அத்தானை எண்ணி எண்ணி ஏங்கி
அஞ்சாறு நாட்களாச்சு தூங்கி
அத்தானை எண்ணி எண்ணி ஏங்கி
சாயங்கால நேரம் பார்த்து
ஜாதி மல்லிப்பூவும் பூத்து ஆட வாட
சாமக்கோழி சத்தம் கேட்டு
சேவல் வந்து முத்தம் கேட்டு கெஞ்ச கொஞ்ச
ஓ ஹோ ஹோ ஹோ...ஓ ஹோ ஹோ ஹோ
அஞ்சாறு நாட்களாச்சு தூங்கி
அத்தானை எண்ணி எண்ணி ஏங்கி

ஊரில் உள்ள ஆண்களில் உன்னாட்டமா
யாரும் இல்லை வீரனே யம்மா யம்மா
எல்லோருமே பாராட்டிடும் கில்லாடி நீ எந்நாளிலும்
கழுவும் பொழுதில் நழுவும் மீன்தான் நீயல்லவா

ஓ ஹோ ஹோ ஹோ...ஓ ஹோ ஹோ ஹோ
அஞ்சாறு நாட்களாச்சு தூங்கி
அத்தானை எண்ணி எண்ணி ஏங்கி

ஜாடைகொண்டு பேசுவேன் அங்கங்கு நான்
கண்டுக்கொள்ள வேண்டும் நீ என்னென்று தான்
எந்நாளும் நான் உன் பக்கமே அன்பானது பெண் வர்க்கமே
உனையே தினமும் வலமாய் வருவேன் வண்டாட்டமே

ஓ ஹோ ஹோ ஹோ...ஓ ஹோ ஹோ ஹோ
அஞ்சாறு நாட்களாச்சு தூங்கி
அத்தானை எண்ணி எண்ணி ஏங்கி
சாயங்கால நேரம் பார்த்து
ஜாதி மல்லிப்பூவும் பூத்து ஆட வாட
சாமக்கோழி சத்தம் கேட்டு
சேவல் வந்து முத்தம் கேட்டு கெஞ்ச கொஞ்ச
ஓ ஹோ ஹோ ஹோ...ஓ ஹோ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ ஹோ...ஓ ஹோ ஹோ ஹோ
 

No comments: