Friday, September 14, 2012

ஏதோ நினைவுகள் கனவுகள் - அகல் விளக்கு

பாடல்: ஏதோ நினைவுகள் கனவுகள்
திரைப்படம்: அகல் விளக்கு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.பி.ஷைலஜா

ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பதுதான் ஏதோ


ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பதுதான் ஏதோ


மார்பினில் நானும் மாறாமல் சேரும்
காலம் தான் வேண்டும்...ம்ம் ம்ம் ம்ம்ம்
வான்வெளி எங்கும் என் காதல் கீதம்
பாடும் நாள் வேண்டும்...ம்ம் ம்ம் ம்ம்ம்
தேவைகள் எல்லாம் தீராத நேரம்
தேவன் நீ வேண்டும் சேரும் நாள் வேண்டும்


ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே


நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம்
இன்பம் பேரின்பம்...ம்ம் ம்ம் ம்ம்ம்
நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம்
ஆஹா ஆனந்தம்...ம்ம் ம்ம் ம்ம்ம்
காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம்
ஏங்கும் எந்நாளும் ஏக்கம் உள்ளாடும்


ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே

No comments: