Thursday, September 20, 2012

போடி போகட்டும் போடி - அவள் ஒரு தமிழச்சி

பாடல்: போடி போகட்டும் போடி
திரைப்படம்: அவள் ஒரு தமிழச்சி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: பி.சுசீலா

போடி போகட்டும் போடி
போடி போகட்டும் போடி
இலவு காத்த கிள்ளை
இதழ் உதிர்ந்த முல்லை
உறவு கொண்ட நெஞ்சில்
உண்மை அன்பு இல்லை
போடி போகட்டும் போடி
போடி போகட்டும் போடி

இலை தாவிடும் பூஞ்சோலையில் மலர்வண்டு
வண்டின் இனம்போலவே இடம் மாறிடும் மனம் உண்டு
இலை தாவிடும் பூஞ்சோலையில் மலர்வண்டு
வண்டின் இனம்போலவே இடம் மாறிடும் மனம் உண்டு
எந்நாளும் உயிர்க்காதல் முடிவானதில்லை
எண்ணங்கள் பெரிதாகும் அதற்கேது எல்லை
எந்நாளும் உயிர்க்காதல் முடிவானதில்லை
எண்ணங்கள் பெரிதாகும் அதற்கேது எல்லை

போடி போகட்டும் போடி
போடி போகட்டும் போடி
இலவு காத்த கிள்ளை
இதழ் உதிர்ந்த முல்லை
உறவு கொண்ட நெஞ்சில்
உண்மை அன்பு இல்லை
போடி போகட்டும் போடி
போடி போகட்டும் போடி

No comments: