Saturday, September 22, 2012

அமுத நதிக்கரையில் - வாழ்வு மலர்ந்தது

பாடல்: அமுத நதிக்கரையில்
திரைப்படம்: வாழ்வு மலர்ந்தது
இசை: ஜி.தேவராஜன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.மாதுரி

அமுத நதிக்கரையில் வரும் ஐந்து மலர்க்கணைகள்
குமுத முகம்தனிலே விழுந்து கொஞ்சும் இளங்கனிகள்

அமுத நதிக்கரையில் வரும் ஐந்து மலர்க்கணைகள்
குமுத முகம்தனிலே விழுந்து கொஞ்சும் இளங்கனிகள்
அமுத நதிக்கரையில்


இளமை என்ற ரதத்தில் வரும் இன்பசுக சிலையே
இரவில் வரும் நிலவில் எனை ஏங்கவைக்கும் நிலையே
அழகின் ரகசியமே நான் அருவியில் குளிக்கட்டுமா
உலகின் அதிசயமே நான் உடன்பட்டு நிற்கட்டுமா
அமுத நதிக்கரையில்

இருண்ட குழலும் திரண்ட உடலும் என்னை மயக்கியதே
மருண்ட விழியில் மிதந்த நீலம் மஞ்சம் விரிக்கின்றதே
தேன் மலர்களில் ஆயிரம் எடுத்து திருப்பள்ளி அமைக்கட்டுமா
நான் உனக்கொரு பூங்கதை? சொல்லி ரசித்து மகிழட்டுமா
சுகத்திலே குளிக்கையில் சொர்க்கம் காட்டட்டுமா
சொர்க்கமே பக்கத்தில் கூர்ந்து பார்க்கட்டுமா

பூவுக்குள்ளே தேன் இருப்பதில் பொறுத்தம் என்னடியோ
நான் புரிந்துகொள்ளும் விதத்தில் நீயும் திறந்து சொல்லடியோ

தென்றல் வந்து சரம் சரமாய் சேதி சொல்லுதய்யா
நீ சேர்த்துக்கொண்டால் தென்றலுக்கு பாதை இல்லையா

முன்னழகிலும் பின்னழகிலும் மோகம் நிற்பதென்ன
உன் அழகிய உடலைக்கண்டு யோகம் வந்ததென்ன
அகம் புறம் இரண்டையும் அணைத்துக் கொள்ளட்டுமா
மது ரசம் உனக்கென எடுத்து வைக்கட்டுமா
வெண்ணிலா...பெண் நிலா
விடிய விடிய இன்றுதான் இளமைத் திருவிழா
விடிய விடிய இன்றுதான் இளமைத் திருவிழா
திருவிழா...திருவிழா...திருவிழா
திருவிழா...திருவிழா...திருவிழா
 

No comments: