Saturday, September 22, 2012

மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி - இவர்கள் இந்தியர்கள்

பாடல்: மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி
திரைப்படம்: இவர்கள் இந்தியர்கள்
இசை: மனோஜ் கியான்
பாடியவர்கள்: எஸ்.என்.சுரேந்தர் & வாணி ஜெயராம்

மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி நெஞ்சைக் கிள்ளாதே
முன்னும் பின்னும் கிள்ளக்கிள்ள மெல்லத் துள்ளாதே
ஹோ மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி நெஞ்சைக் கிள்ளாதே
ஆஹா முன்னும் பின்னும் கிள்ளக்கிள்ள மெல்லத் துள்ளாதே
நீரினில் ஆடும் தாமரைத் தண்டு
தாமரை மீது வாலிப வண்டு
தேன் தரும் பாத்திரம் நான் துடிக்க
மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி நெஞ்சைக் கிள்ளாதே
முன்னும் பின்னும் கிள்ளக்கிள்ள மெல்லத் துள்ளாதே

மோகங்கள் ஆயிரம் மாமாங்கம்
தீராமல் வாழ்வது வாழ்வாகும்

ஆரம்பம் ஆனது ராஜாங்கம்
ஆசைகள்தான் அதன் பூர்வாங்கம்

அம்மம்மா பூபானம் பாயாதோ
அங்கங்கள் காயங்கள் ஆகாதோ
ஆடையில் மேனியை நான் மறைக்க
ஆயினும் பூக்களை நான் பறிக்க

மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி நெஞ்சைக் கிள்ளாதே
முன்னும் பின்னும் கிள்ளக்கிள்ள மெல்லத் துள்ளாதே

கைவீணை நீயென நான் மீட்ட
கல்யாணி மோஹனம் நான் காட்ட

கச்சேரி வேளையில் பாராட்ட
கல்யாண மாலையை நான் சூட்ட

தெய்வீகம் வைபோகம் கூடாதா
ஓ தேனாறும் பாலாறும் ஓடாதா
ஆலிலைப் போல் அதில் நான் மிதக்க
ஆதியும் அந்தமும் நான் சிவக்க

மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி நெஞ்சைக் கிள்ளாதே
முன்னும் பின்னும் கிள்ளக்கிள்ள மெல்லத் துள்ளாதே
ஹோ மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி நெஞ்சைக் கிள்ளாதே
ஹோ முன்னும் பின்னும் கிள்ளக்கிள்ள மெல்லத் துள்ளாதே
நீரினில் ஆடும் தாமரைத் தண்டு
தாமரை மீது வாலிப வண்டு
தேன் தரும் பாத்திரம் நான் துடிக்க
மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி நெஞ்சைக் கிள்ளாதே

முன்னும் பின்னும் கிள்ளக்கிள்ள மெல்லத் துள்ளாதே
லாலா லாலா லாலா லாலா லாலா லலாலா

No comments: