Saturday, February 11, 2012

மானென்றும் வானத்து மீனென்றும் - காம சாஸ்திரம்

பாடல்: மானென்றும் வானத்து மீனென்றும்
திரைப்படம்: காம சாஸ்திரம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: வாணி ஜெயராம்

மானென்றும் வானத்து மீனென்றும் கொண்டாட
மகன் பிறந்தான் தென்றல் காற்றாக
மானென்றும் வானத்து மீனென்றும் கொண்டாட
மகன் பிறந்தான் தென்றல் காற்றாக
ஆணொன்று பிறந்தால் அழுகின்ற கூட்டத்தில்
ஆனந்தம் பிறந்தது பாட்டாக
ஆணொன்று பிறந்தால் அழுகின்ற கூட்டத்தில்
ஆனந்தம் பிறந்தது பாட்டாக
ஆனந்தம் பிறந்தது பாட்டாக
மானென்றும் வானத்து மீனென்றும் கொண்டாட
மகன் பிறந்தான் தென்றல் காற்றாக

ஆரி ராரி ராரி ராரி ஆரிரரோ
ஆரி ராரி ராரி ராரி ஆரிரரோ
ஆரி ராரி ராரி ராரி ஆரிரரோ
ஆரி ராரி ராரி ராரி ஆரிரரோ

தங்கத்தில் தேர் செய்து உன் கையில் கொடுக்க
தாய் மாமன் யாரும் உனக்கில்லையே
தங்கத்தில் தேர் செய்து உன் கையில் கொடுக்க
தாய் மாமன் யாரும் உனக்கில்லையே
மானத்தை உயிராய் மதிக்கும் உன் பாட்டனும்
மகனே உனைப்பார்க்க இன்றில்லையே
மகனே உனைப்பார்க்க இன்றில்லையே

மானென்றும் வானத்து மீனென்றும் கொண்டாட
மகன் பிறந்தான் தென்றல் காற்றாக

செந்தமிழ் நதியில் நீ விளையாடு
திருக்குறளோடு உறவாடு
செந்தமிழ் நதியில் நீ விளையாடு
திருக்குறளோடு உறவாடு
பைந்தமிழ் சாரதி பாரதி போலே
பயனுள்ள கவிகளை நீ பாடு
பயனுள்ள கவிகளை நீ பாடு

மானென்றும் வானத்து மீனென்றும் கொண்டாட
மகன் பிறந்தான் தென்றல் காற்றாக

அறிவுக்கு சிகரம் தமிழுக்கு அகரம்
அண்ணாவைப்போலே புகழ் கொள்ளடா
ஊருக்கு உழைத்த உத்தமன் காமராஜ்
உன்னத வழியில் நீ செல்லடா
மழைபோல் வழங்கும் பொன்மனச்செம்மல் போல்
மக்களின் உள்ளத்தில் நீ வாழணும்
மழைபோல் வழங்கும் பொன்மனச்செம்மல் போல்
மக்களின் உள்ளத்தில் நீ வாழணும்
எதையும் தாங்கும் கலைஞரைப்போலே
எதுவும் வந்தாலும் நீ தாங்கணும்

மானென்றும் வானத்து மீனென்றும் கொண்டாட
மகன் பிறந்தான் தென்றல் காற்றாக

ஆரி ராரி ராரி ராரி ஆரிரரோ
ஆரி ராரி ராரி ராரி ஆரிரரோ
ஆரி ராரி ராரி ராரி ஆரிரரோ
ஆரி ராரி ராரி ராரி ஆரிரரோ

No comments: