Saturday, February 11, 2012

தண்ணி இல்லேன்னா தாங்காது - பக்கத்து வீட்டு ரோஜா

பாடல்: தண்ணி இல்லேன்னா தாங்காது
திரைப்படம்: பக்கத்து வீட்டு ரோஜா
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & வாணி ஜெயராம்

தண்ணி இல்லேன்னா தாங்காது மீனு
ஒன்னத் தொடலேன்னா தூங்காது கண்ணு
தண்ணி இல்லேன்னா தாங்காது மீனு
ஒன்னத் தொடலேன்னா தூங்காது கண்ணு
காயும் கனியாச்சு கனவோ நனவாச்சு
காயும் கனியாச்சு கனவோ நனவாச்சு
காதல் உறவாடும் காலம் வந்தாச்சு
தண்ணி இல்லேன்னா தாங்காது மீனு
ஒன்னத் தொடலேன்னா தூங்காது கண்ணு
தந்தானே தந்தானே தந்தானே
ஹேய் ஹேய் தந்தானே தந்தானே தந்தானே

மோகம் உண்டாச்சு முந்தானப் பட்டு
மொதலும் வட்டியுமா சேர்த்தே நீ கட்டு
மோகம் உண்டாச்சு முந்தானப் பட்டு
மொதலும் வட்டியுமா சேர்த்தே நீ கட்டு
கொஞ்சிப் பேசும் குமரியோட
கோலம் போட்டு கும்மாளம் கொட்டு
கொஞ்சிப் பேசும் குமரியோட
கோலம் போட்டு கும்மாளம் கொட்டு
காலாட இடை நூலாட
காத்தாட மனம் கூத்தாட
நான் ஆடுவேன் செண்டாட்டம்
நமக்கு இப்போ கொண்டாட்டம்

தண்ணி...தண்ணி
தண்ணி இல்லேன்னா தாங்காது மீனு
ஒன்னத் தொடலேன்னா தூங்காது கண்ணு
காயும் கனியாச்சு கனவோ நனவாச்சு
காயும் கனியாச்சு கனவோ நனவாச்சு
காதல் உறவாடும் காலம் வந்தாச்சு
தந்தானே தந்தானே தந்தானே
ஹேய் ஹேய் தந்தானே தந்தானே தந்தானே

சிரிச்சி பழகி வரும் சிங்காரப்பாப்பா
இருட்டிப்போச்சுன்னா ஏதாச்சும் கேப்பா
சிரிச்சி பழகி வரும் சிங்காரப்பாப்பா
இருட்டிப்போச்சுன்னா ஏதாச்சும் கேப்பா
அர்த்தத்தோடும் பொருத்தத்தோடும்
அத்தப்பொண்ணு ஓயாம பாப்பா
அர்த்தத்தோடும் பொருத்தத்தோடும்
அத்தப்பொண்ணு ஓயாம பாப்பா
ஆ அம்மாடி இவன் கில்லாடி
தப்பாம குறி வைப்பான்டி
மெல்லத்தொட்டேன் இங்கேதான்
மிச்சம் எல்லாம் அங்கேதான்

தண்ணி...தண்ணி
தண்ணி இல்லேன்னா தாங்காது மீனு
ஒன்னத் தொடலேன்னா தூங்காது கண்ணு
காயும் கனியாச்சு கனவோ நனவாச்சு
காயும் கனியாச்சு கனவோ நனவாச்சு
காதல் உறவாடும் காலம் வந்தாச்சு
தந்தானே தந்தானே தந்தானே
ஹேய் ஹேய் தந்தானே தந்தானே தந்தானே
தன னன தந்தானே தந்தானே தந்தானே
ஹேய் ஹேய் தந்தானே தந்தானே தந்தானே

No comments: