Saturday, February 11, 2012

நீர் தொட மறந்த இடங்கள் - இரட்டை மனிதன்

பாடல்: நீர் தொட மறந்த இடங்கள்
திரைப்படம்: இரட்டை மனிதன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன் & வாணி ஜெயராம்

நீர் தொட மறந்த இடங்கள்
கொஞ்சம் நீ தொட வளரும் சுகங்கள்
ஓ...ஹோ...ஹோ...ஹோ...சுகங்கள்

நீர் தொட மறந்த இடங்கள்
கொஞ்சம் நீ தொட வளரும் சுகங்கள்
தேனிதழ் வரையும் படங்கள்
உந்தன் தேகத்தில் என்னென்ன இடங்கள்
தேகத்தில் என்னென்ன இடங்கள்

ஆசையில் பார்ப்பதும் பார்வையில் கேட்பதும்
என்னென்று சொன்னால் என்ன

ஆசையில் பார்ப்பதும் பார்வையில் கேட்பதும்
என்னென்று சொன்னால் என்ன
ஆயிரம் ஆசைகள் ஆயிரம் நீ அதை
கேட்காமல் தந்தால் என்ன
கேட்காமல் தந்தால் என்ன
ஆறடிக்கூந்தலின் அலைகள்
இங்கு அந்தியில் எத்தனை கலைகள்
நித்தமும் என்னென்ன நிலைகள்
இனி நித்திரை கொள்ளாது விழிகள்
ஓஹோ ஹோஹோ ஹோஹோ
ஹோஹோ ஹோஹோ னன னனா னா
ஓஹோ ஹோஹோ ஹோஹோ
ஹோஹோ ஹோஹோ னன னனா னா

நீர் தொட மறந்த இடங்கள்
கொஞ்சம் நீ தொட வளரும் சுகங்கள்
தேனிதழ் வரையும் படங்கள்
உந்தன் தேகத்தில் என்னென்ன இடங்கள்
தேகத்தில் என்னென்ன இடங்கள்

கைவளை மேனியை நீ வளை என்பதை
சொல்லாமல் சொல்கின்றதோ

கைவளை மேனியை நீ வளை என்பதை
சொல்லாமல் சொல்கின்றதோ
காவலை மீறிய ஆவலில் பொன்னுடல்
நில்லாமல் தள்ளாடுதோ
நில்லாமல் தள்ளாடுதோ
காதலின் ஊர்வல ரதங்கள்
வரும் கண்களில் குங்கும நிறங்கள்
போதையில் ஆடிடும் மனங்கள்
இந்த பூமியில் சொர்க்கத்தின் நிழல்கள்
ஓஹோ ஹோஹோ ஹோஹோ
ஹோஹோ ஹோஹோ னன னனா னா
ஓஹோ ஹோஹோ ஹோஹோ
ஹோஹோ ஹோஹோ னன னனா னா

நீர் தொட மறந்த இடங்கள்
கொஞ்சம் நீ தொட வளரும் சுகங்கள்
ஓ...ஹோ...ஹோ...ஹோ...சுகங்கள்
தேனிதழ் வரையும் படங்கள்
உந்தன் தேகத்தில் என்னென்ன இடங்கள்
தேகத்தில் என்னென்ன இடங்கள்
ஓஹோ ஹோஹோ ஹோஹோ
ஹோஹோ ஹோஹோ னன னனா னா
ஓஹோ ஹோஹோ ஹோஹோ
ஹோஹோ ஹோஹோ னன னனா னா

No comments: