Monday, June 3, 2013

தனக்கொரு சொர்க்கத்தை - வாழ நினைத்தால் வாழலாம்

பாடல்: தனக்கொரு சொர்க்கத்தை
திரைப்படம்: வாழ நினைத்தால் வாழலாம்
பாடியவர்: வாணி ஜெயராம்
இசை: இளையராஜா


தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த தேவதை
சந்தேகம் இருந்தால் பாருங்கள்
தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த தேவதை
சந்தேகம் இருந்தால் பாருங்கள்
தடை போட மனிதர்களே நீங்களா
ஒரு வானும் நிலவும் சேர யாரைக் கேட்பது
தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த தேவதை
சந்தேகம் இருந்தால் பாருங்கள்

அரசனின் மகனல்ல அம்பிகாபதி
அமர காவியம் பாடினாள் அமராவதி
இறைவனின் சாலையில் விதித்த விதி
அரசன் தலையிட்டால் அதுதான் கதி
அதுதான் கதி

பவளங்கள் எல்லாம் மலையில் பிறந்தும்
மலைக்கவை சொந்தம் இல்லை
ஒரு பண்டாரம் கூட அணிந்திடக்கூடும்
அதில் ஒரு தவறும் இல்லை

பவளங்கள் எல்லாம் மலையில் பிறந்தும்
மலைக்கவை சொந்தம் இல்லை
ஒரு பண்டாரம் கூட அணிந்திடக்கூடும்
அதில் ஒரு தவறும் இல்லை

பணமுள்ள இடம் உலகை ஆட்டலாம்
பகுத்தறிவுள்ள உறவும் ஆடுமா மனமே
நதி செல்லும் வழிதன்னை யார் சொன்னது
ஒரு வானும் நிலவும் சேர யாரைக் கேட்பது
தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த தேவதை
சந்தேகம் இருந்தால் பாருங்கள்

காதல் என்பது தேவனின் சன்னிதி
தடையென்று வந்தால் முடிவுதான் நிம்மதி
தந்தையின் பெருமையா மகளின் நற்கதி
தானென்று நினைப்போர்க்கு இல்லையோர் சந்ததி
இல்லையோர் சந்ததி

கனி விட்டதோடு கடமை முடிந்தது
கைகளைக் கழுவுங்கள்
அந்தக் கனியை அழகிய கிளியொன்று
ரசிக்கட்டும் கண்களை மூடுங்கள்

கனி விட்டதோடு கடமை முடிந்தது
கைகளைக் கழுவுங்கள்
அந்தக் கனியை அழகிய கிளியொன்று
ரசிக்கட்டும் கண்களை மூடுங்கள்

உலகமும் இதில் உளுந்து போன்றது
மரணமும் இதில் கடுகு போன்றது மனமே
மரணத்தில் தான் இனி பிரிவென்பது
ஒரு வானும் நிலவும் சேர யாரைக் கேட்பது

தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த தேவதை
சந்தேகம் இருந்தால் பாருங்கள்
தடை போட மனிதர்களே நீங்களா
ஒரு வானும் நிலவும் சேர யாரைக் கேட்பது
தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த தேவதை
சந்தேகம் இருந்தால் பாருங்கள்

No comments: