பாடல்: ஶ்ரீராமன் ஶ்ரீதேவி
திரைப்படம்: டௌரி கல்யாணம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம்
ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம்
ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே
ஓஹோ ஹோ ஆலய ஓவியமே
ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே
ஓஹோ ஹோ ஆலய ஓவியமே
தங்க நகை சரம் தொடுத்து
தங்கை நகை முகம் ரசித்து
மங்கை இவள் நலம் பாடுவேன்
தங்க நகை சரம் தொடுத்து
தங்கை நகை முகம் ரசித்து
மங்கை இவள் நலம் பாடுவேன்
இந்திரனின் தேர் எடுத்து
சந்திரனை சீர் கொடுக்க
சுந்தரனை நான் தேடுவேன்
ஓஓ...சுந்தரனை நான் தேடுவேன்
ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம்
ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே
ஓஹோ ஹோ ஆலய ஓவியமே
ரம்பைகளை சபைக்கழைத்து
கண்ணகியை கண்டெடுத்து
அண்ணி என்று பேர் சூட்டுவேன்
ரம்பைகளை சபைக்கழைத்து
கண்ணகியை கண்டெடுத்து
அண்ணி என்று பேர் சூட்டுவேன்
பிஞ்சு மகள் சங்கீதம்
பஞ்சணையில் கேளாமல்
நெஞ்சினிலே தாலாட்டுவேன்
ஓஓ...நெஞ்சினிலே தாலாட்டுவேன்
ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம்
ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே
ஓஹோ ஹோ ஆலய ஓவியமே
பொன் உடலில் மேடையிட்டு
மின்னிடையில் கோலமிட்டு
மன்மதனின் பூச்சூட்டுவேன்
பொன் உடலில் மேடையிட்டு
மின்னிடையில் கோலமிட்டு
மன்மதனின் பூச்சூட்டுவேன்
மன்னவனின் கரம் பிடித்து
என் மடியில் இடம் கொடுத்து
கன்னி இதழ் சாறூட்டுவேன்
ஓஓ...கன்னி இதழ் சாறூட்டுவேன்
ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம்
ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே
ஓஹோ ஹோ ஆலய ஓவியமே
No comments:
Post a Comment