Friday, September 14, 2012

என்னுள்ளே என்னுள்ளே - வள்ளி

பாடல்: என்னுள்ளே என்னுள்ளே
திரைப்படம்: வள்ளி
இசை: இளையராஜா
பாடியவர்: ஸ்வர்ணலதா

ன்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்

நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ...ஓர்...மோகம்

கண் இரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்

கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊண் கலந்து ஊணும் ஒன்றுபட தியானம்
ஆழ் நிலையில் அரங்கேற
காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தைப்போலே இன்பமேது சொல்லு
காண்பவை யாவும் சொர்க்கமேதான்

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ...ஓர்...மோகம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்

4 comments:

Arputhasamy S A said...

அருமை பாடல் வரிகள்

Arputhasamy S A said...

எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று

Unknown said...

இவர் பாடும் சோகப் பாடல்களைக் கேட்டு
என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணீர் வந்தது உண்டு. அதுவும் அதிக முறை இது போன்ற நிகழ்வு நடந்தது உணவு.

Unknown said...

இவர் பாடும் சோகப் பாடல்களைக் கேட்டு
என்னையும் என் கண்களில் அதிக முறை கண்ணீர் வந்தது உண்டு.